Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜூன் மாத ராசி பலன் 2023: பண மழையில் நனையும் 2 ராசிக்காரர்கள்..அனுபவிக்கத் தயாராகுங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜூன் மாதம் வைகாசியும் ஆனியும் இணைந்த மாதம். சூரியன் ரிஷபம் மற்றும் மிதுன ராசிகளில் பயணம் செய்வார்கள். குரு, ராகு மேஷத்திலும், ரிஷபத்தில் புதன் சூரியன், கடகத்தில் செவ்வாய் சுக்கிரன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்கள் உள்ளன. தென்மேற்கு பருவமழை தொடங்கப்போகும் அற்புதமான மாதம் ஜூன் மாதம். ஜூன் மாதத்தில் நவ கிரகங்களின் பயணம் சிலருக்கு சாதகமாக இருக்கும். சில ராசிக்காரர்களுக்கு சோதனைகளைத் தரும். இந்த மாதத்தில் கிரகங்களின் பயணம் பார்வையால் கன்னி மற்றும் துலாம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

June month Rasi Palan 2023 Tamil: Kanni and Thulam rasi June matha rasi palan

கன்னி:

ஜூன் மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு நவ கிரகங்களின் பயணமும் பெயர்ச்சியும் சாதகமாக உள்ளது. ராசி நாதனும் தொழில் ஸ்தான அதிபதியுமான புதன் உங்களுக்கு சாதகமாக இருக்கிறார். நல்ல வேலை கிடைக்கும் வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். குடும்ப வாக்கு ஸ்தான அதிபதி சுக்கிரன் லாப ஸ்தானத்தில் செவ்வாய் உடன் இணைந்து பயணம் செய்வதால் செல்வ வளம் பெருகும். திடீர் பண வருமானம் வரும். அஷ்டமத்து குரு உங்களுக்கு திடீர் செலவுகளை கொடுத்து திக்கு முக்காட வைப்பார். பூர்வீக சொத்து பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. வியாபாரம் தொழிலில் நல்ல தன வருமானம் வரும்.

தடைகள் வரும்:

திருமண சுபகாரியம் தொடர்பாக செய்யும் முயற்சிகளில் தடைகள் வந்து போகும். குரு பலன் இல்லை என்பதால் சுப காரிய பேச்சுவார்த்தைகளில் தடைகள் ஏற்படும். காதலிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் கவனம் தேவை. வாக்கு கொடுத்து மாட்டிகொள்ளாதீர்கள். மாணவர்களுக்கு இது சாதகமான கால கட்டம். சூரியன் புதன் இணைந்து பயணம் செய்வதால் உயர்கல்வி யோகம் வந்து போகும். உயர்கல்விக்காக அதிக செலவு செய்வீர்கள். கல்விக்காக கடன் வாங்குவீர்கள். புதன் இந்த மாதத்தில் ஆட்சி பெற்று பயணம் செய்வது சிறப்பு. எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

June month Rasi Palan 2023 Tamil: Kanni and Thulam rasi June matha rasi palan

ஆரோக்கியத்தில் கவனம்:

பெண்களுக்கு மன நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்த மாதம். நிறைய செலவுகள் வந்து போகும். புதிய உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். சுப விரைய செலவுகள் அதிகம் என்பதால் எவ்வளவு பண வரவு வந்தாலும் செலவுகள் அதிகரிக்கும். பிரச்சினைகள் எது வந்தாலும் சமாளிப்பீர்கள். அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்யும் குரு, ராகு மீது சனிபகவானின் பார்வை விழுவதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறையும் கவனமும் தேவைப்படும். வயிறு தொடர்பான பிரச்சினைகள் வந்து போகும் கவனம் தேவை. புதிய முடிவுகள் எடுக்கும் போது ஒருமுறைக்கு இருமுறை யோசித்து கவனமாக செயல்படுவது நல்லது. ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வெள்ளிக்கிழமைகளில் சென்று வழிபட நன்மைகள் அதிகம் நடைபெறும்.

துலாம்:

உங்கள் ராசி அதிபதி சுக்கிரன் உங்களுக்கு சாதகமான நிலையில் பயணம் செய்கிறார். தொழில் ஸ்தானமான பத்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்வதால் பதவி யோகம் தேடி வரும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும். உயரதிகாரிகளின் ஆதரவுடன் வேலைகளை விறுவிறுப்பாக செய்து முடிப்பீர்கள். வருமானத்தில் அபார வளர்ச்சி உண்டாகும். புதன் இந்த மாதத்தில் ஆட்சி பெற்று பயணம் செய்வது சிறப்பு. புதிய தொழில் தொடங்க ஏற்ற மாதம் குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது.

சுப காரியம்:

ராசி அதிபதியின் பயணம் செவ்வாய் உடன் இருப்பதால் காதல் விசயங்கள் கை கூடி வரும். சனிபகவான் வக்ரமடைவதால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். வருமானம் அதிகரிக்கும். மாத பிற்பகுதியில் சூரியன் ஒன்பதாம் வீட்டிற்கு மாறப்போவது சிறப்பு. உங்களின் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். குரு பலன் கிடைத்துள்ளதால் திருமணம் சுப காரியங்கள் தொடர்பாக முயற்சி செய்யலாம். திருமணத்திற்கு தேவையான வரனை பேசி முடிக்கலாம். திருமணம் முடிந்தவர்களுக்கு நெருக்கம் கூடும். அன்பும் காதலும் அதிகரிக்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள்.

June month Rasi Palan 2023 Tamil: Kanni and Thulam rasi June matha rasi palan

ஆடை ஆபரணம்:

நினைத்த காரியம் நிறைவேறும். மாணவர்களுக்கு கல்வி யோகம் கைகூடி வந்துள்ளது. வெளிநாட்டில் பெரிய பல்கலைக்கழகங்களில் படிக்க இடம் கிடைக்கும். உயர்கல்விக்காக செய்யும் செலவுகள் அதிகரிக்கும். பெண்களுக்கு மன நிறைவான மாதம். நகை, ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். துலாம் ராசிக்காரர்களுக்கு பொருளாதார வளம் நிறைந்த அற்புதமான மாதமாக ஜூன் மாதம் அமைந்துள்ளது. புதன்கிழமைகளில் பெருமாளை வழிபட நன்மைகள் நடைபெறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+