ஜூன் மாத ராசி பலன் 2023: நோ டென்சன்..கூல் ஆக இருங்க..அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும்
சென்னை: ஜூன் மாதத்தில் சூரியன் ரிஷபம் மற்றும் மிதுன ராசியில் பயணம் செய்வார். வைகாசியும் ஆனியும் இணைந்த மாதம். கோவில்களில் திருவிழாக்கள் நிறைந்த மாதம். ஜூன் மாதம் கிரகங்கள் மேஷ ராசியில் இருந்து வரிசையாக பயணம் செய்கின்றன. குரு, ராகு மேஷத்திலும், ரிஷபத்தில் புதன் சூரியன், கடகத்தில் செவ்வாய் சுக்கிரன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்கள் உள்ளன. தென்மேற்கு பருவமழை தொடங்கப்போகும் அற்புதமான மாதம் ஜூன் மாதம். இந்த மாதத்தில் கிரகங்களின் பயணம் பார்வையால் ரிஷபம் மற்றும் மிதுனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

ரிஷப ராசி: உங்கள் ராசிக்கு இந்த மாதத்தில் விரைய ஸ்தானத்தில் குரு, ராகு கிரகங்கள் கூடியுள்ளன. உங்கள் ராசியில் புதன் இரண்டாம் வீட்டில் சூரியன், மூன்றாம் வீட்டில் செவ்வாய் சுக்கிரன், பத்தாம் வீட்டில் சனி, ஆறாம் வீட்டில் கேது பயணம் செய்கின்றன. சுக்கிரன் மூன்றாம் வீட்டில் செவ்வாயுடன் இணைந்திருப்பது குடும்பத்தில் உற்சாகத்தை தரும். பத்தாம் வீட்டில் சனிபகவானின் வக்ர சஞ்சாரம் பாதிப்பைஏற்படுத்தாது.
புதிய தொழில் வியாபாரம் செய்ய முயற்சி செய்யாதீர்கள். பத்தாம் வீட்டில் தொழில் ஸ்தான அதிபதி சனி பகவான் வக்ரமடைவதால் வேலையில் பளு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் டென்சன் அதிகரிக்கும் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள். வேலை, பிசினஸ் விசயமாக வெளியூர் செல்வீர்கள்.
வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.
குரு பலன்: உங்கள் ராசிக்கு குரு பலன் இல்லாவிட்டாலும் உங்களுக்கு திருமண யோகம் கை கூடி வந்துள்ளது. செவ்வாய் சுக்கிரன் சேர்ந்துள்ளதால் காதல் கைகொடுக்கும். வரன் பார்த்து முடிவு செய்யலாம். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். மாணவர்கள் உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். புத்திசாலித்தனமாக முடிவு எடுப்பீர்கள். தடைபட்ட காரியங்கள் மளமளவென நிறைவேறும்.
புதிய வேலை: குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும் மகிழ்ச்சி அதிகரிக்கும். வயதானவர்கள் எப்போதுமே கவனமாக இருப்பது நல்லது. மொத்தத்தில் ஜூன் மாதத்தில் உங்களுடைய பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அருமையான நேரம் லாபம் பெருகும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கத்தை கொடுக்கும். திருமண வாழ்க்கையில் ஒற்றுமை அதிகரிக்கும். புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் பொறுப்புடன் நடந்து கொள்வது நல்லது. வேலை மாற்றம் இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம்.
அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். உடல் ஆரோக்கியத்தில் சின்னச் சின்ன பாதிப்புகள் வரலாம். தலைவலி, உடல்வலி வந்தாலும் சுறுசுறுப்பாகவே இருப்பீர்கள். பிரதோஷ நாளில் சிவனை வழிபட நன்மைகள் நடைபெறும்.

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களே.. ஜூன் மாதத்தில் உங்களுக்கு அற்புதமாக பலன் கிடைக்கப்போகிறது. உங்கள் ராசியில் சூரியன் வரப்போகிறார். உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். குடும்ப ஸ்தானத்தில் காதல் கிரகங்கள் இணைந்துள்ளன. வாக்கு பலிதமாகும். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். வேலையில் மாற்றம் உண்டாகும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். வேலையில் புரமோசன் கிடைக்கும்.
சுப காரியம்: திருமணம் சுப காரியம் மள மளவென கை கூடி வரும். வாக்கில் இனிமை அதிகரிக்கும். காதலிப்பவர்கள் திருமணமானவர்கள் வாழ்க்கைத்துணையோடு பேசும் போது வார்த்தைகளில் நிதானமும் கவனமும் தேவை. ராசி நாதன் புதன் விரைய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் பொறுமையோடு குடும்ப விசயங்களை கையாளுங்கள். புதனும் சூரியனும் மாத பிற்பகுதியில் உங்கள் ராசியில் இணைந்து பயணம் செய்யும் போது மனது தெளிவடையும்.
உணவில் கவனம்: உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். இரவு நேரங்களில் நேரங்கட்ட நேரங்களில் காரமான எண்ணெய் உணவுகளை தவிர்த்து விடுங்கள் வெளி உணவுகளை இந்த மாதம் தவிர்த்து விடுவது நல்லது. குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். சனிபகவான் வக்ரமடையவதால் பெரிய அளவில் தொழிலில் முதலீடு செய்து விடாதீர்கள். உறவுகளால் தொல்லை உண்டாகும். அடுத்தவர்கள் விசயங்களில் தலையிடாமல் அமைதியாக இருப்பது நல்லது. அதுவே மன அமைதியைக் கொடுக்கும். மொத்தத்தில் இந்த மாதம் கோபத்தை கட்டுப்படுத்து பொறுமையாகவும் நிதானமாகும் இருந்தால் வெற்றிகளை அடையலாம்.
-
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications