Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜூன் மாத ராசி பலன் 2023: தர்ம கர்மாதிபதி யோகத்தால் திடீர் ஜாக்பாட் யாருக்கு தேடி வரும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கும் அற்புதமான மாதம். இந்த மாதத்தில் சூரியன் ரிஷபம் மற்றும் மிதுன ராசியில் பயணம் செய்வார். வைகாசியும் ஆனியும் இணைந்த மாதம். கோவில்களில் திருவிழாக்கள் நிறைந்த மாதம். ஜூன் மாதம் கிரகங்கள் மேஷ ராசியில் இருந்து வரிசையாக பயணம் செய்கின்றன. குரு, ராகு மேஷத்திலும், ரிஷபத்தில் புதன் சூரியன், கடகத்தில் செவ்வாய் சுக்கிரன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்கள் உள்ளன. இந்த கிரகங்களின் பயணம் பார்வையால் விருச்சிகம் மற்றும் தனுசு ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

விருச்சிகம்:

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே. செவ்வாய் சுக்கிரன் இணைந்து 9ஆம் வீட்டில் பயணம் செய்கின்றனர். குரு பகவான் 6ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். சூரிய பகவான் 7ஆம் வீட்டில் இருந்து உங்கள் ராசியை பார்க்கிறார். செய்யும் வேலையில் பிரச்சினையில்லை என்றாலும் புதிய முயற்சிகயை செய்ய வேண்டாம். காரணம் 6ஆம் வீட்டில் குரு மறைந்திருப்பதால் புதிய வேலை தொழில் முயற்சிகளில் தடைகள் ஏற்படும்.

June month Rasi Palan 2023 Tamil: Viruchigam and Dhanusu rasi June matha rasi palan

புத ஆதித்திய யோகம்:

போட்டி பொறாமைகள், எதிர்ப்புகள் அதிகரிக்கும். அர்த்தாஷ்டம சனியால் இடையூறுகள் பிரச்சினைகள் அதிகமாகும். சிக்கல்களை தாண்டி சாதிப்பீர்கள். திருமணம் சுப காரியம் கைகூடி வரும். வரன் பார்க்கும் முயற்சிகளில் இடையூறுகள் உண்டாகும். சூரியன் ஏழாம் வீட்டில் பயணம் ஏழாம் வீட்டில் இருந்து எட்டாம் வீட்டிற்கு இடம் மாறப்போகிறது. பயணங்களில் கவனம் தேவை. புதன் சூரியனுடன் இணைந்து புத ஆதிபத்ய யோகத்தை தரப்போவதால் உயர்கல்வி யோகம் கைகூடி வரும். படிப்பில் அக்கறையும் கவனமும் தேவைப்படும்.

ஆரோக்கியத்தில் கவனம்:

உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் உள்ள சனிபகவான் வக்ரமடையப்போவதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். உடல் உஷ்ணம் காரணமாக வயிறு பிரச்சினைகள் எட்டிப்பார்க்கும். கண்களில் கவனம் தேவை. அம்மாவின் உடல் நலக்குறைபாடு உங்களை கவலைப்பட வைக்கும். இல்லத்தரசிகளுக்கு கோபங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் சூழ்நிலைக்கு தகுந்தது போல பேசுங்கள் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. நகை , பணத்தை பத்திரப்படுத்துங்கள். புதிய முதலீடுகளை தவிர்க்கவும். பணம் கடனாக கொடுக்க இது ஏற்ற கால கட்டம் அல்ல கவனம் தேவை.

June month Rasi Palan 2023 Tamil: Viruchigam and Dhanusu rasi June matha rasi palan

தனுசு:

உங்கள் ராசிக்கு ராசிநாதன் குரு பகவான் 5ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். புதன் ராகு உடன் உடன் இணைந்து குரு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். மாத பிற்பகுதியில் புதனும் சூரியனும் இணைந்து தர்ம கர்மாதிபதி யோகத்தை தரப்போகிறது. ஆன்மீக பயணம் செல்வீர்கள். புதிய முயற்சிகள், வேலைக்காக செல்லும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மாத இறுதியில் புதனும் சூரியனும் இணைந்து 7ஆம் வீட்டில் கூட்டணி அமைக்கின்றனர். சூரியன் புதன் பார்வையால் அற்புதமான யோகம் கைகூடி வரப்போகிறது.

யோகமான மாதம்:

திருமண சுபகாரிய முயற்சிகளில் சின்னச் சின்ன தடைகள் வந்து போகும். கணவன் மனைவி இடையே தேவையற்ற வாக்குவாதங்கள் வந்து போகும். தேவையில்லாத பேச்சுக்களை தவிர்க்கவும். ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் குருவுடன் சேர்ந்த புதன் மாணவர்களுக்கு புத்தியையும் மனதையும் தெளிவாக்குவார். சில நாட்கள் ஆறாம் வீட்டில் சூரியன், புதன் இணைந்து பயணம் செய்ய உள்ளனர். மாத பிற்பகுதியில் சூரியன் புதன் இணைந்து ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடுவதால் புத ஆதிபத்ய யோகம் வேலை செய்யப்போகிறது. மனதாலும் உடல் ரீதியாகவும் உற்சாகமாகவும் இருப்பீர்கள். மாணவர்களின் எண்ணங்கள் தெளிவாகும்.

உற்சாகம் கூடும்:

எட்டாம் வீட்டில் சுக்கிரன், செவ்வாய் பயணம் செய்வதால் தேவையற்ற சுப விரைய செலவுகள் எட்டிப்பார்க்கும். வாகன பயணங்களில் கவனம் தேவை. பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் மன உளைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் சில பிரச்சினைகள் வந்து போகும். கணவன் மனைவிக்கு இடையே மூன்றாம் நபர்களை தலையிட விட வேண்டாம். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்றாலும் வெளியூர் செல்லும் போது உணவுகளில் கவனம் தேவை. காரமான எண்ணெய் பலகாரங்களை சாப்பிட வேண்டாம் தவிர்த்து விடுவது நல்லது. ஜூன் மாதத்தை உற்சாகமாக எதிர்கொள்வீர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+