Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜூன் மாத ராசிபலன்கள் 2019: கடகம் ராசிக்கு மாற்றமும் முன்னேற்றமும் வரும்

ஜூன் மாதம் கடகம் ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்துடன் கூடிய மாற்றம் வரும். வீடு வண்டி வாகன யோகம் கை கூடி வருகிறது.

Subscribe to Oneindia Tamil

மதுரை: ஜூன் மாதத்தில் சுக்கிரன், புதன், சூரியன் கிரகங்களின் இடமாற்றம் கடகம் ராசிக்காரர்களுக்கு மாற்றத்தையும் கூடவே முன்னேற்றத்தையும் தருகிறது. நவகிரகங்களின் கூட்டணியால் கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நன்மையே அதிகம் நடைபெறுகிறது. கல்வி, வேலை வாய்ப்பு, தொழில், எப்படியிருக்கிறது என்று பார்க்கலாம்.

கடக ராசியைப் பொறுத்தவரை கிரகங்களின் சஞ்சாரம் அதி அற்புதமாக உள்ளது. லாப ஸ்தானத்தில் தற்போது உள்ள சூரியன் 16ஆம் தேதிக்கு மேல் விரைய ஸ்தானத்திற்கு வருகிறார். பத்தாம் வீட்டில் உள்ள சுக்கிரன் 4ஆம் தேதி முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். புதன் லாப ஸ்தானத்தில் இருந்து விரைய ஸ்தானத்திற்கு சென்று அங்குள்ள செவ்வாய், ராகு உடன் இணைகிறார்.

மாதத்தின் பிற்பகுதியில் ஜென்ம ராசிக்கு செவ்வாய்,புதன் இடப்பெயர்ச்சி அடைகின்றனர். விரைய ஸ்தானத்திற்கு சூரியன், ராகு உடன் சுக்கிரன் இணைகிறார். பஞ்சம ஸ்தானத்தில் குரு வக்ரம் அடைந்துள்ளார். ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் உள்ள சனி வக்ரமடைந்து கேது உடன் சஞ்சரிக்கிறார்.

கிரகங்களின் கூட்டணி

கிரகங்களின் கூட்டணி

செவ்வாய் ராகு உடன் 12ஆம் வீட்டில் இணைந்திருப்பதால் ஏற்ற இறங்கள் ஏற்படும். எதிர்பார்ப்பு அதிகரிக்கும். 16ஆம் தேதி முதல் 12ஆம் வீட்டில் செவ்வாய் ராகு, சூரியன், புதன் அனைத்துமே விரைய ஸ்தானத்தில் இணைகின்றனர். கிரகங்களின் கூட்டணியால் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும்.

திருப்தியான வேலை

திருப்தியான வேலை

சுக்கிரன் உங்கள் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். 4ஆம் தேதிக்கு மேல் லாப ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்கிறார். இது முன்னேற்றம் நிறைந்த மாதம், மனதிற்கு உகந்த மாற்றங்கள் ஏற்படும். பதவி உயர்வு தேடி வரும். அதுவும் உங்கள் மனதிற்கு பிடித்தமான மாற்றமாகவே இருக்கும். மனதிற்குப் பிடித்த திருப்தியான வேலை கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு நல்ல வேலை அமையும்.

வீடு வண்டி வாகன யோகம்

வீடு வண்டி வாகன யோகம்

11ஆம் வீட்டில் சுக்கிரன் அமர்வதால் வாழ்க்கை துணை மூலம் வசதி பணம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். சொத்து விவகாரங்களில் சற்றே அமைதியாக இருப்பது நல்லது இல்லாவிட்டால் உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வீடு மனை, வண்டி வாகன யோகம் கை கூடி வரும்.

4ஆம் தேதி முதல் மனைவியோடு கருத்து மாறுபாடு வேண்டாம்.

வம்பு வழக்கு வேண்டாம்

வம்பு வழக்கு வேண்டாம்

விரைய ஸ்தானத்தில் செவ்வாய், ராகு இருப்பதால் பயணத்தில் கவனம் தேவை. எதிரிகள் விசயத்தில் கவனம், தேவையற்ற வம்பு வழக்குகளில் பகைத்துக்கொள்ள வேண்டாம். 23ஆம் தேதி செவ்வாய் ராசியில் பெயர்ச்சி அடைவதால் மாற்றம் நடைபெறும். சந்திரன் குரு உடன் இணையும் காலத்தில் சந்திரன் சுக்கிரன் மீது விழுவதால் இடமாற்றம் நன்மையில் முடியும்.

உடல் நலனில் அக்கறை

உடல் நலனில் அக்கறை

உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். சனி செவ்வாய் பார்வை சரியில்லை என்பதால் அவசியம் மருத்துவர் ஆலோசனை அவசியம். வரவை விட இந்த மாதம் அதிகமான செலவு இருக்கும். மருத்துவ செலவுகள் அம்மா அப்பா, வாழ்க்கைத்துணைக்கு செலவு செய்யலாம்.

எதிரிகள் தொல்லைகள் நீங்கும்

எதிரிகள் தொல்லைகள் நீங்கும்

வெளிநாடு பயணம் இப்போதைக்க வேண்டாம். விசா கிடைக்க லேட்டாகும். தடைகள் தாமதங்கள் ஏற்படும். பதவி உயர்வு தொல்லைகளுக்கு மத்தியில் கிடைக்கும். சுப அமைப்புகள் உண்டு. குருவின் பார்வை சுக்கிரன் மீது விழும் நேரத்தில் சந்திரனும் குரு உடன் இணைவதால் திருமண முயற்சிகள் கைகூடி வரும்.

பணவரவும் சுப செலவும்

பணவரவும் சுப செலவும்

மாணவர்கள் 16ஆம் தேதிக்கு மேல் முக்கிய முடிவுகளை எடுங்கள். மாணவிகளுக்கு மருத்துவ படிப்பு கைகூடி வரும். மாணவர்களுக்கு தெளிவு பிறக்கும் காலம். வீட்டு பெண்மணிகளுக்கு மாத முற்பகுதியில் பணவரவு அதிகமாக இருக்கும். மாத பிற்பகுதியில் சுப செலவுகளை ஏற்படுத்தும். எதிர்ப்புகள் போட்டிகளை ஜெயிக்கும் ஆற்றலை தரும். கூடவே பயத்தோடு ஜெயம் உண்டாகும். ஜூன் மாதத்தை இனிமையாக கடந்து வருவீர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+