Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜூன் மாத ராசிபலன் 2019: கும்பம் ராசிக்காரர்களுக்கு பிரம்மாண்ட வளர்ச்சி

கும்பம் ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் அதி அற்புதமாக அமைந்துள்ளது. கார் பங்களா வாங்குவீர்கள். கவலைகள் மறையும் பிரம்மாண்டமான வளர்ச்சியடைவீர்கள்.

Subscribe to Oneindia Tamil

மதுரை: கும்ப ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் கிரகங்களின் சஞ்சாரம் அற்புதமாக அமைந்துள்ளது. நோய் நொடிகள் நீங்கும். உடல் நலக்கோளாறுகள் சரியாகும். சிரமங்கள் குறையும். யோகமான மாதம். குல தெய்வ வழிபாட்டுக்கு ஏற்ற மாதம். வேலைவாய்ப்பு, கல்வி, தொழில் வளர்ச்சி எப்படி என்று பார்க்கலாம்.

ஜூன் மாதம் உங்கள் ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால், லாப ஸ்தானத்தில் சனி கேது, பத்தாம் வீட்டில் குரு, நான்காம் வீட்டில் சூரியன் சுக்கிரன், ஐந்தாம் வீட்டில் செவ்வாய், ராகு, புதன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. மாத பிற்பகுதியில் சூரியன் ஐந்தாம் வீட்டிற்கு நகர்கிறார். செவ்வாயும் புதனும் ஆறாம் வீட்டிற்கு நகர்கின்றனர்.

சூரியன் 16ஆம் தேதிக்கு மேல் 5ஆம் வீட்டில் அமைவது செழிப்பான காலம். குருவினால் வேலை மாற்றம், தன லாபம் கிடைக்கும். குடும்பத்தில் குழந்தை பாக்கியம் அமையும். மூத்தவர்களின் ஆதரவு கிடைக்கும் கால கட்டம். வேலை வாய்ப்பு அமையும். பிசினசில் நல்ல லாபம் கிடைக்கும்.

கவலைகள் மறையும்

கவலைகள் மறையும்

அதி அற்புதமாக அமைந்துள்ளது. மாதத்தின் தொடக்கத்தில் ராசிக்கு மூன்றில் உள்ள சுக்கிரன் தனது வீட்டிற்கு சென்று ஆட்சி பெற்று அமர்கிறார். நீண்ட நாட்களாக வேலை இல்லாதவர்களுக்கு வேலை அமையும். கார் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக இருந்த கவலைகள் மறையும். பிசினஸ் பிரம்மாண்டமான வளர்ச்சி அமையும். செவ்வாய் பஞ்சமஸ்தானத்தில் 5ஆம் அதிபதியோடும், ராகு உடனுடம் இணைந்திருப்பது வளர்ச்சியை தரும்.

குடும்பத்தில் குதூகலம்

குடும்பத்தில் குதூகலம்

10ல் குரு தனித்து நிற்பதால் பிரச்சினைகள் எளிதில் தீரும். இடையூறு எதுவும் நடைபெறாது. சுக்கிரனை குரு பார்ப்பதால் நன்மை. பத்தில் குரு தனது பலனை தருவார். வக்ரமான குருவினால் புதிய வேலை, இடமாற்றம் ஏற்படும். லாப ஸ்தானத்தில் கேது சனி இருப்பதால் மிதுனம் கும்பத்திற்கு 5ஆம் இடம் மாறுகிறார். திட்டமிடாத செயல்கள் எதிர்பாராமல் நடக்கும். இதெல்லாம் எனக்கு ஏன் நடக்குது என்று யோசிப்பீர்கள். சுக்கிரன் 4ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் வாழ்க்கைத்துணையை மகிழ்ச்சி படுத்தும் வகையில் செயல்கள் செய்வீர்கள். பிசினஸ் தொந்தரவின்றி போகும்.

புத்திக்கூர்மை அதிகரிக்கும்

புத்திக்கூர்மை அதிகரிக்கும்

மாத இறுதியில் செவ்வாய் புதன் இடமாற்றம் புத்திக்கூர்மை அதிகரிக்கும். ஏழாம் வீட்டு அதிபதி சூரியன் 4ல் இருந்து 5ஆம் வீட்டிற்கு நகர்வது நன்மைதான். மாணவர்கள் யோசித்து முடிவு செய்யுங்கள். வாழ்க்கைக்குத் தேவையான கல்வியை சரியாக தேர்வு செய்வீர்கள். வீட்டை நிர்வாகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

ஆரோக்கியத்தில் கவனம்

ஆரோக்கியத்தில் கவனம்

ஆரோக்கியத்தில் அக்கறை தேவை, காது மூக்குத் தொண்டை வழியாக பிரச்சினைகள் ஏற்படும். உஷ்ணம் தொடர்பான நோய்களை ஏற்படுத்துவார். திருமண முயற்சிகளில் உள்ளவர்களுக்கு நன்மைகள் நடைபெறும் நல்ல செய்திகள் தேடி வரும். சுக்கிரனால் பிரயாணங்களினால் நன்மை நடைபெறும். புதிய பொருட்கள் வாங்குவீகள். குல தெய்வ வழிபாட்டுக்கு ஏற்ற மாதம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+