ஜூன் மாத ராசிபலன்கள் 2019: மகரம் ராசிக்காரர்களுக்கு பட்டம் பதவிகள் தேடி வரும்
ஜூன் மாதம் மகரம் ராசிக்காரர்களுக்கு வருமானம் பெருகும் தடைகள் நீங்கும் பட்டம் பதவிகள் தேடி வரும். வேலை, கல்வி, தொழில் வளர்ச்சி எப்படி என்று பார்க்கலாம்.
சென்னை: மகரம் ராசிக்காரர்களே ஜூன் மாதம் உங்களுக்கு மகத்தான மாதமாக அமைந்துள்ளது. வருமானம் பெருகும் செல்வச்செழிப்பு அதிகரிக்கும். தடைகள் நீங்கும் பட்டம் பதவிகள் தேடி வரும் மாதமாக அமைந்துள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் ஆகியவற்றில் மகரராசிக்காரர்களுக்கு இந்த மாதம் எப்படி என்று பார்க்கலாம்.
ஜூன் மாதம் மகரம் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சனி கேது, ஐந்தாம் வீட்டில் சூரியன் சுக்கிரன், ஆறாம் வீட்டில் செவ்வாய், ராகு, புதன், லாப ஸ்தானத்தில் குரு என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. மாத பிற்பகுதியில் சூரியன் ஆறாம் வீட்டிற்கு மாறி ராகு, செவ்வாய் புதனுடன் இணைகிறார்.
ஆறாம் வீட்டில் இருந்த செவ்வாய் மாத இறுதியில் ஏழாம் வீட்டிற்கு செவ்வாய் செல்லும் போது நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கணவரின் உடல் நலத்தில் கவனம் தேவை. அனைத்து வகையிலும் மிகச்சிறந்த மாதம்.

முன்னேற்றமான மாதம்
லாப வீட்டில் குரு இருப்பதால் இந்த மாதம் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். வங்கிக் கடனுதவி கிடைக்கும். சூரியன் சுக்கிரனும் 5ஆம் வீட்டில் இருக்கிறார்கள். அரசு வழி உதவி கிடைக்கும். வருமானம் பெருகும். செழிப்பான வருமானம் கிடைக்கும். சிறு குறு தொழில் பெருகும் வீடு யோகம் அமையும். வெளிநாட்டு பயணங்கள் அமையும். கல்வியில் இருந்த தடைகள் விலகும். வங்கிக்கடன்கள் கிடைக்கும்.வெளிநாட்டு பயணம் அமையும். பதவிகள் தேடி வரும். உயர்வான கால கட்டம். பிள்ளைகளுக்கு முன்னேற்றமான கால கட்டம். கல்வி ரீதியாக இருந்த தடைகள் விலகும்.

உடல் நலத்தில் அக்கறை
மருத்துவரை நாடுங்கள் முழு மருத்துவ பரிசோதனை செய்யுங்கள். ஆறாம் வீட்டிற்கு செல்வதால் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள். உடல்நலத்தில் அக்கறை தேவை. ஏழாம் வீட்டில் செவ்வாய் செல்லும் போது நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கணவரின் உடல் நலத்தில் கவனம் தேவை. அனைத்து வகையிலும் மிகச்சிறந்த மாதம்.

மன மகிழ்ச்சி ஏற்படும்
ராசிநாதன் வக்ரமடைந்து பின்னோக்கி நகர்கிறார். குருவும் பின்னோக்கி நகர்வதால் பணவரவும் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் பொறுப்புகள் அமையும். வேளைப்பளு அதிகரிக்கும். சுக்கிரன் ரிஷபத்தில் சஞ்சரிப்பதால் வண்டி வாகன வசதி அமையும், வீடு நிலம் வாங்கலாம். சந்தோசங்கள் நிறைந்த மாதமாக அமையும். பூர்வ ஜென்ம புண்ணியத்தினால் நன்மைகள் அதிகம் நடைபெறும்.

கிரகங்களின் கூட்டணி
புதன் மிதுனத்தில் செவ்வாய் ராகு உடன் இணைவதால் பெரிய தொந்தரவு எதுவும் இருக்காது என்றாலும் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வேலை செய்யும் இடத்தில் மன உளைச்சலை ஏற்படுத்துவார். செவ்வாய் சனி பார்வை வெறுப்புணர்வை ஏற்படுத்துவார். குடும்பத்தில் சில பிரச்சினைகள் ஏற்படும்.

பண விசயத்தில் கவனம்
மாத பிற்பகுதியில் சூரியன் நகர்வு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. மாணவர்களுக்கு சின்னச் சின்ன குழப்பங்கள் ஏற்படும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேளுங்கள். மனம் விரும்பிய வாழ்க்கைத்துணை அமையும். திருமண வாழ்க்கை சந்தோசத்தை தரும். ஆறாம் வீட்டில் நான்கு கிரகங்களின் இணைவு பாதிப்பை தராது. அவ்வப்போது மனச்சோர்வு, உடல் சோர்வை தருவார். பெண்களுக்கு கூடுதல் வேலைப்பளுவை தருவார். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. கூடுதல் விழிப்புணர்வும் தேவை.

குல தெய்வ வழிபாடு
ரொம்ப கோபப்படாதீங்க. மனதில் எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கும். அவசரப்பட வேண்டாம். பொறுமையும், நிதானமும் அவசியம். ஏழரை சனி காலத்தில் வீண் செலவு, பொருள் விரையம் ஏற்படும். பாதிப்பு ஏற்படும் வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. புது முயற்சிகளில் கவனம் தேவை. படித்த படிப்புக்கு வேலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும் மனதிற்கு பிடிக்கும் வகையில் வேலை கிடைக்கும். திடீர் மருத்துவ செலவு ஏற்படும். இந்த கால கட்டத்தில் பரிகாரம் செய்யலாம் குல தெய்வ கோவிலுக்கு சென்று விளக்கேற்றுங்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications