ஜூன் மாத ராசிபலன்கள் 2019: மீனம் ராசிக்காரர்களுக்கு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்
மதுரை: மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரம் சற்றே சுமாராகத்தான் உள்ளது. மாத கடைசியில் புதன், செவ்வாய் ராசிகள் இடம் மாறி கடகத்தில் இணைவதால் திருமண முயற்சிகள் கைகூடி வரும். இந்த மாதம் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் லாபம் எப்படி என்று பார்க்கலாம்.
மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ராசிக்கு மூன்றாம் வீட்டில் சூரியன், சுக்கிரன், நான்காம் வீட்டில் செவ்வாய், ராகு, புதன் ஒன்பதாம் வீட்டில் குரு, பத்தாம் வீட்டில் சனி கேது என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.
மாத பிற்பகுதியில் சூரியன் நான்காம் வீட்டில் ராகு செவ்வாய், புதனுடன் இணைகிறார். மாத இறுதியில் செவ்வாய் புதன் நகர்ந்து கடகத்தில் கூட்டணி சேருவதால் பல நன்மைகள் நடைபெறும்.

மாற்றத்துடன் முன்னேற்றம்
இந்த மாதம் நல்ல மாற்றங்கள் உங்களுக்கு ஏற்படுகிறது. குரு பகவான் ஒன்பதாம் வீட்டில் இருந்து உங்கள் ராசியை பார்ப்பதால் எப்படிப்பட்ட பிரச்சினைகளையும் சமாளிப்பீர்கள். குரு வக்ரமடைந்து செல்வதால் உடல் நலத்தில் அக்கறை செலுத்துங்கள். குரு ஒன்பதாம் வீட்டில் இருப்பதால் பெரியவர்களின் மூலம் வழிகாட்டுதல் அமையும்.

பணப்பிரச்சினை தீரும்
ஆரம்பத்தில் இரண்டாம் வீட்டில் இருந்த சுக்கிரனால் பணப்பிரச்சினை தீரும் என்றாலும் இப்போது ஆட்சி பெற்று பலமாக அமைந்துள்ள சுக்கிரனால் உங்களுக்கு நன்மையில்லை. ஆபத்துக்கள் வராமல் எச்சரிக்கையாக இருக்கவும். செவ்வாய் ராகு,புதன் 4ஆம் வீட்டில் இருக்கிறார். வீடு அப்ரூவ்ட் பிளாட் என்று பார்த்து வாங்கவும். உங்கள் ராசி நாதனை சுக்கிரன் பார்வையிடுவதால் முயற்சியில் வெற்றி கிடைக்கும் நிதானம் தேவை.

கல்வியில் தடை
குடும்ப உறவுகளில் மனக்கசப்பு ஏற்படும். மனைவி, குழந்தைகளிடம் அதிகாரத்தை காட்டுவதன் மூலம் பாதிப்பு ஏற்படும். ஏழுக்கு அதிபரான புதன் திருமண தடைகளை ஏற்படுத்தும். சனி செவ்வாய் பார்வை வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. சனி கேது இணைந்து இருப்பதால் கல்வியில் தடைகள் விலக நரசிம்மர் வழிபாடு நன்மையை செய்யும்.

வேலையில் புரமோசன்
உடல் நலத்தில் அக்கறை செலுத்துங்கள். வம்பு வழக்குகளில் இருந்து விலகி இருங்கள். வெளிநாட்டு வாய்ப்பு அமையும். 23ஆம் தேதிக்கு மேல் புதன், செவ்வாய் இணைந்து கடகத்தில் இணைவதால் கல்யாண யோகம் கைகூடி வரும், மாத பிற்பகுதியில் சூரியன் இடம் மாற்றத்தால் பிரமோசன் கிடைக்கும். திட்டமிடாத பயணங்கள் செயல்பாடுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும், பிள்ளைகள் வழியில் தொல்லைகள் ஏற்படும். பொறுமை, சகிப்புத்தன்மை அவசியம். குலதெய்வத்தை கும்பிட்டு விட்டு வெளியே செல்லுங்கள். பவுர்ணமி நாட்களில் சிவ ஆலயம் சென்று வணங்குங்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications