Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜூன் மாத ராசிபலன்கள் 2019: மேஷ ராசிக்காரர்கள் யோசிச்சு முடிவு செய்யுங்க

ஜூன் மாதம் பிறக்கப் போகிறது. கிரகங்களின் கூட்டணி இடம்மாறுகிறது. புதிய கூட்டணியின் அடிப்படையில் இந்த மாதம் மேஷம் ராசிக்காரர்கள் அமைதியாக இருந்தாலே போதும் புதிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம்.

Subscribe to Oneindia Tamil

மதுரை: நவகிரகங்களின் கூட்டணியில் பிரிவு ஏற்படுகிறது. ராசிகளில் புதிய கிரகங்களின் கூட்டணி உருவாகிறது. மேஷம் ராசிக்காரர்கள் இதனை உணர்ந்து எதையும் செய்யும் முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. இந்த மாதம் உற்சாகமாக காணப்படுவீர்கள். கிரகங்களின் கூட்டணியைப் பொருத்து மேஷ ராசிக்காரர்களுக்க கல்வி, வேலை வாய்ப்பு, பெண்களுக்கு எப்படியிருக்கிறது என்று பார்க்கலாம்.

ஜூன் மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் குரு, சனி, ராகு கேது கிரகங்கள் இப்போது உள்ள ராசிகளிலேயே இருக்கும். மிகப்பெரிய மாற்றங்கள் என்றால் மாத கோள்களான சூரியன் 15 நாட்கள் ரிஷப ராசியிலும் 15 நாட்கள் மிதுன ராசியிலும் சஞ்சரிக்கிறார். அதே போல புதன் 2ஆம் தேதி ரிஷபத்தில் மிதுனத்திற்கும் 20ஆம் தேதி கடகத்திற்கு இடம் மாறுகிறார். சுக்கிரன் 4ஆம் தேதி மேஷத்தில் இருந்து ரிஷபத்திற்கு இடம் மாறுகிறார். 28ஆம் தேதி மிதுனத்திற்கு இடம் மாறுகிறார். செவ்வாய் மிதுனத்தில் இருந்து 23ஆம் தேதி கடகத்திற்கு மாறுகிறார்.

மே மாதம் சாதகமாக இருந்த கிரகங்கள் சங்கடமான இடங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் கிரகங்களுடன் கூட்டணி சேருவதால் கொஞ்சம் கவனமாகவே இருப்பது அவசியம். இந்த மாதம் ராசியில் சுக்கிரன், இரண்டாம் வீட்டில் புதன், சூரியன், மூன்றாம் வீட்டில் ராகு செவ்வாய் எட்டில் குரு ஒன்பதில் சனி, கேது என உள்ளது. மாத பிற்பகுதியில் மூன்றாம் வீட்டில் சூரியன் ராகு, புதன் செவ்வாய் என கிரகங்கள் கூட்டணி சேருகின்றன.

திடீர் அதிர்ஷ்டங்கள் தேடி வரும்

திடீர் அதிர்ஷ்டங்கள் தேடி வரும்

மேஷ ராசிக்காரர்களுக்கு அற்புதமான மாதம். இரண்டாம் வீட்டிற்கு மாறும் சுக்கிரனால் திடீர் அதிர்ஷ்டமும் பணவரவும் தேடி வரும். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பேச்சில் ஒரு உற்சாகம் பிறக்கும். ராகு செவ்வாய் கூட்டணியால் குழப்பங்கள் ஏற்படும் மாத பிற்பகுதியில் கிரகங்களின் கூட்டணி இடம் மாறுவதால் குழப்பங்கள் நீங்கி ஒரு தெளிவு பிறக்கும்.

அவசர முடிவு ஆகாது

அவசர முடிவு ஆகாது

ராசிக்கு இரண்டாம் வீட்டில் உள்ள புதன் தனது ராசியான மிதுனத்தில் ஆட்சி பெற்று அமர்கிறார் என்றாலும் அவர் அங்குள்ள பாவ கிரகங்களான செவ்வாய் ராகு உடன் கூட்டணி சேருவதால் புதிய முடிவுகள் எதையும் அவசரப்பட்டு எடுக்க வேண்டாம். 21ஆம் தேதிக்கு மேல் புதிய முடிவுகளை எடுப்பது நல்லது.

மிதுனத்தில் இணையும் கூட்டணி

மிதுனத்தில் இணையும் கூட்டணி

மிதுனம் ராசியில் ஏற்கனவே செவ்வாய் ராகு இருக்கின்றனர். இந்த கிரகங்களுடன் புதன் சேருகிறார் 16ஆம் தேதிக்கு மேல் சூரியன் சேருவதால் நான்கு கிரகங்கள் மூன்றாம் வீட்டில் அமர்ந்து உங்களை வச்சு செய்யப்போகிறார்கள். சின்னச் சின்ன தடைகள் ஏற்படும். புதிய தொழில் வியாபாரங்களில் பண முதலீடு எதையும் செய்ய வேண்டாம். பிசினஸ் ரொம்ப மந்தமா போகும். வாங்கிப் போட்ட பொருட்கள் எல்லாம் விற்காம தேங்கி நிற்கும்.

உங்களின் பிறந்த ஜாதகத்தில் கிரகங்கள் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே பண விசயங்களில் ரிஸ்க் எடுங்க.

படிப்பில் கவனம்

படிப்பில் கவனம்

மாணவர்கள் உயர்கல்விக்கான படிப்பை தேர்வு செய்யும் முன்பு குழப்பம் இன்றி முடிவு செய்யுங்கள். பெற்றோர்கள், ஆசிரியர்களின் யோசனையை கேட்பது நல்லது. குழப்பத்துடன் தேர்வு செய்து பின்னர் அவஸ்தைப்பட வேண்டாம். லட்சுமி ஹயக்கிரீவரை வணங்க நன்மைகள் நடைபெறும்.

ஜம்முன்னு போகும்

ஜம்முன்னு போகும்

சனிபகவானும் வக்ரத்தில் இருக்கிறார், குரு பகவானும் வக்ரத்தில் சஞ்சரிக்கிறார். சின்னச் சின்ன மன உளைச்சல் ஏற்படும். இந்த மாதம் மேஷம் ராசிக்காரர்கள் ரொம்ப கடுப்பேத்துறவன் கிட்ட கம்முன்னு இருங்க உசுப்பேத்துவறன் கிட்ட உம்முன்னு இருங்க இந்த மாசம் ஜம்முன்னு போகும்.

 திருமண முயற்சிகள் சுபமாகும்

திருமண முயற்சிகள் சுபமாகும்

மாத கடைசியில புதிய வேலை கிடைக்கும். காரணம் கிரகங்கள் கூட்டணி பிரிகிறது. செவ்வாய் கடகத்திற்கு நகர்கிறார். புதனும் கடகத்திற்கு மாறுவதால் நன்மை நடைபெறும். குரு பார்வை 2ஆம் வீட்டின் மேல் விழுகிறது. சுக்கிரன் ரிஷபத்திற்கு வரும் போது காதல், திருமணம் கைகூடி வரும். ஜூன் மாதம் பேசி முடிவு செய்ய வேண்டாம். சுப செலவுகள் ஏற்படும். உறவுகள் வழியில் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க யோசித்து முடிவெடுங்க.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+