ஜூன் மாத ராசிபலன்கள் 2019: ஆரோக்கியத்தில் அக்கறையும் வார்த்தைகளில் கவனமும் தேவை

மிதுனம் ராசிக்காரர்களே உங்களுக்கு இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக இல்லை. ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவதோடு பேசும் வார்த்தைகளில் கவனமாக இருங்கள்.

Subscribe to Oneindia Tamil

மதுரை: ஜூன் மாதத்தில் நவகிரகங்களின் கூட்டணியில் பிரிவு ஏற்படுகிறது. சில ராசிகளில் புதிய கிரகங்களின் கூட்டணி உருவாகிறது. இந்த மாதம் மிதுனம் ராசிக்காரர்கள் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. கிரகங்களின் கூட்டணியைப் பொருத்து மிதுனம் ராசிக்காரர்களுக்க கல்வி, வேலை வாய்ப்பு, பெண்களுக்கு எப்படியிருக்கிறது என்று பார்க்கலாம்.

ஜூன் மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் குரு, சனி, ராகு கேது கிரகங்கள் இப்போது உள்ள ராசிகளிலேயே இருக்கும். மிகப்பெரிய மாற்றங்கள் என்றால் மாத கோள்களான சூரியன் 15 நாட்கள் ரிஷப ராசியிலும் 15 நாட்கள் மிதுன ராசியிலும் சஞ்சரிக்கிறார். அதே போல புதன் 2ஆம் தேதி ரிஷபத்தில் இருந்து மிதுனத்திற்கும் 20ஆம் தேதி கடகத்திற்கு இடம் மாறுகிறார். சுக்கிரன் 4ஆம் தேதி மேஷத்தில் இருந்து ரிஷபத்திற்கு இடம் மாறுகிறார். 28ஆம் தேதி மிதுனத்திற்கு இடம் மாறுகிறார். செவ்வாய் மிதுனத்தில் இருந்து 23ஆம் தேதி கடகத்திற்கு மாறுகிறார்.

மே மாதம் சாதகமாக இருந்த கிரகங்கள் சங்கடமான இடங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் கிரகங்களுடன் கூட்டணி சேருவதால் கொஞ்சம் கவனமாகவே இருப்பது அவசியம். இந்த மாதம் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சுக்கிரன் இருக்கிறார். 4ஆம் தேதி 12ஆம் வீடான விரைய ஸ்தானத்திற்கு வருகிறார். 16ஆம் தேதி வரை விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் உங்கள் ராசிக்குள் வந்து அமர்கிறார். புதன் இரண்டாம் தேதி முதல் ராசியில் ஆட்சி பெற்று அமர்கிறார். ஏற்கனவே ராசியில் ராகு செவ்வாய் சஞ்சரிக்கின்றனர். ஆறாம் வீட்டில் குரு களத்திர ஸ்தானத்தில் சனி, கேது என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது. மாத கடைசியில் புதன் செவ்வாய் என கிரகங்கள் இரண்டாம் வீட்டிற்கு நகர்வது சாதகமான அம்சம்.

பேசும் வார்த்தைகளில் கவனம்

பேசும் வார்த்தைகளில் கவனம்

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவர் நீங்கள். ரகசியத்தை மறைத்து வைக்காமல் வெளிப்படையாக பேசுபவர்கள். புதன் உங்கள் ராசியில் ஆட்சி பெற்று அமர்வது வெற்றி கிடைக்கும். ஏழாம் வீட்டில் சனி கேது சேர்ந்திருப்பதால் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. தொழில் பார்ட்னர்களை பகைத்துக்கொள்ளாதீர்கள். அது சிக்கலாகி விடும். சுடு சொற்களை பேசி விடாதீர்கள். அது பழிவாங்கும் எண்ணத்தை ஏற்படுத்தி விடும். மனைவியிடமும் மாறுபட்ட கருத்துக்களை பேச வேண்டாம். சண்டை சச்சரவுகளை தவிர்க்க பணி இட மாறுதல் கிடைத்தால் ஒத்துக்கொள்ளவும்.

தன வரவு அதிகரிக்கும்

தன வரவு அதிகரிக்கும்

குருவின் பார்வை உங்கள் தன ஸ்தானத்தின் மீத விழுவதால் பண வருவாய் அதிகரிக்கும். சனி உங்கள் ராசியை பார்க்கிறார். பகைவர்களால் முன்பும் செய்ய வந்தாலும் எதுவும் செய்யாது. அதிக ஆற்றல்களைத் தருவார்.

உடல் ஆரோக்கியத்தில் கவனம்

உடல் ஆரோக்கியத்தில் கவனம்

உங்கள் ராசிக்கு மூன்றாம் அதிபதியான சூரியன் சூரியன் விரைய ஸ்தானத்தில் இருக்கிறார். 16ஆம் தேதி உங்க தைரிய ஸ்தானதிபதி சூரியன் உங்க ராசிக்கு அமர்கிறார். வளர்ச்சியும் வெற்றியும் வரப்போகிற மாதம். தனி திறமையாளர்களுக்கு அற்புதமான மாதம். கலைஞர்களுக்கு திறமை உலகறியும். வாய்ப்புகள் அதிகம் வரும். அதே நேரத்தில் ஆறில் குரு அமர்வதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. மிதுனத்தில் ராகு செவ்வாய் இருப்பதால் குழப்பம் அதிகம் ஏற்படும் மூன்றாவது ராசி. காது மூக்கு தொண்டை பிரச்சினைகள் வரும் செவ்வாய் ராகு சஞ்சாரத்தினால் மருத்துவ செலவு வரும்.

திருமண விசயத்தில் கவனம்

திருமண விசயத்தில் கவனம்

காதல் திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படலாம், பொறுமை அவசியம். இல்லாவிட்டால் காதல் கசக்குதய்யா என்று பாடுவீர்கள். ஆறாம் வீட்டில் குரு வக்ரமடைந்துள்ளதால் திருமணம் தொடர்பான விசயங்களை ஒத்திப்போடுங்கள். சுய ஜாதகம் வலுவாக இருந்தால் பிரச்சினை இல்லை. உங்கள் பயணம், வேலை இடமாற்றம் செய்யும் முன்பு யோசியுங்கள்.

வெளியூர் சுற்றுலாவினால் நன்மை

வெளியூர் சுற்றுலாவினால் நன்மை

சுக்கிரன் 12ஆம் வீட்டில் இருப்பதால் வெளியூர் சுற்றுலா செல்வீர்கள். சுப செலவுகள் ஏற்படும். வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு சாதிக்கும் வகையில் வேலை அமையும். வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. மாத இறுதியில் புதன், செவ்வாய் பெயர்ச்சி இரண்டாம் வீட்டிற்கு நகர்வதால் பிரச்சினைகள் தீரும்.

மாணவர்களின் மேற்படிப்பு

மாணவர்களின் மேற்படிப்பு

ராசியில் அசுப கிரகங்களின் கூட்டணி ஏற்படுவது பாதிப்பை ஏற்படுத்தும். வாயு கோளாறு ஏற்படும் காரணம் ஏழாம் வீட்டில் சனி கேதுவின் நேரடி பார்வைதான். மாணவர்களுக்கு குழப்பங்கள் நிறைந்த மாதம். எந்த சப்ஜெக்ட் தேர்வு செய்வது என்று பலமுறை யோசிப்பீர்கள். பெற்றோர்கள், ஆசிரியர்களின் ஆலோசனைகளை கேட்கவும்.

கடவுள் அருளால் நன்மை

கடவுள் அருளால் நன்மை

பெண்களுக்கு மன உளைச்சல் ஏற்படும். மன சோர்வு உடல் சோர்வை தரும் ஆனாலும் வழக்கம் போல வேலையை செய்யுங்கள். தனிமையில் இருப்பதை தவிர்த்து விடுங்கள். கோவிலுக்கு போங்க. குல தெய்வத்தை கும்பிட்டால் நல்ல விசயங்கள் தானாக நடைபெறும். கடவுள் அருளினால் கவலைகள் பறந்தோடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+