ஜூன் மாத ராசிபலன்கள் 2019: துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது
மதுரை: ஜூன் மாதம் துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டகரமான மாதமாக அமைந்துள்ளது. கிரகங்களின் சஞ்சாரம், பார்வைகள் சாதகமாக உள்ளதால் பணவரவும், சுப நிகழ்ச்சிகளும் அதிகம் நடைபெறும்.
உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் குருவும், மூன்றாம் வீட்டில் சனியும் கேதுவும் ஏழாம் வீட்டில் சுக்கிரனும் எட்டில் சூரியன், புதனும் சஞ்சரிக்கின்றனர். ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் செவ்வாய் ராகு சஞ்சரிக்கின்றனர். சுக்கிரன் ஏழில் இருந்து எட்டாம் வீட்டிற்கு நகர்கிறது.
மாத துவக்கத்திலேயே புதன் ஒன்பதாம் வீட்டிற்கு நகர்கிறார். பிற்பகுதியில் பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். அதேபோல சூரியனும் எட்டில் இருந்து ஒன்பதாம் வீட்டிற்கு நகர்கிறார். செவ்வாய் பெயர்ச்சியும் இந்த மாத இறுதியில் நடைபெறுகிறது. உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் இருந்து பத்தாம் வீட்டிற்கு செவ்வாய் நகர்வது சிறப்பம்சம். கல்வி, வேலைவாய்ப்பு, பணவரவு எப்படி என்று பார்க்கலாம்.

காசு மேல காசு வந்து
உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான தன ஸ்தானத்தில் குரு சஞ்சரிக்கிறார். பணவரவு அதிகரிக்கும். வங்கிக்கடன் கிடைக்கும். மகாலட்சுமியை வழிபட்டு கனகதாரா ஸ்தோத்திரம் படிக்க வீட்டில் மகாலட்சுமியின் அருள் நிறையும். வீடு கிரகப்பிரவேசம் நடைபெறும். வங்கி கடன் கிடைக்கும்.

புதிய வேலைகள் அமையும்
உங்கள் ராசியில் ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கும் செவ்வாய், புதன் பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கும் காலத்தில் அரசு உதவிகள் தேடி வரும். மனதிற்கு பிடித்த வேலைகள் கிடைக்கும். உங்கள் பிள்ளைகளுக்கு புதிய வேலைகள் கிடைக்கும். பூர்வ புண்ணிய அனுக்கிரகம் உள்ளதால் வெற்றி மீது வெற்றி தேடி வரும். செய்யும் முயற்சிகள் கைகூடி வரும். பதவி உயர்வு கிடைக்கும்.

நகை, ஆடைகள் சேரும் காலம்
பெண்களுக்கு இது அதி அற்புதமான மாதமாக அமைந்துள்ளது. அழகும் ஆரோக்கியமும் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். தன வருமானம் அதிகரிக்கும். இது வெற்றி மீது வெற்றி தேடி வரும் காலம். 7 ஆம் வீட்டில் சுக்கிரனால் வீட்டில் குடும்ப சுப நிகழ்ச்சிகள் இந்த மாதம் அதிகம் நடைபெறும் என்பதால் பெண்கள் ரொம்ப பிஸியாகவே இருப்பீர்கள். வீட்டிற்கு விருந்தினர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் வீட்டு வேலைகள் சரியாக இருக்கும் நன்மைகள் அதிகம் நிறைந்த மாதம்.

சுப நிகழ்ச்சிகள் கூடி வரும்
இந்த மாதம் துவக்கத்திலேயே ராசி நாதன் சுக்கிரன் எட்டாம் வீட்டில் நகர்கிறார். இதனால் பாதிப்பு அதிகம் ஏற்படப்போவதில்லை. காரணம் குருவின் பார்வை உள்ளதால் பதவி உயர்வும் தேடி வரும். பயணங்களில் வெற்றியும் நன்மையும் நடைபெறும். வெளிநாட்டு யோகம் கைகூடி வரும் என்றாலும் பாஸ்போர்ட் விசாவில் கவனம் தேவை. உங்கள் ஆரோக்கியமும் இந்த மாதம் அற்புதமாக இருக்கும்.

மாணவர்களுக்கு மகிழ்ச்சி
ஆட்சி பெற்ற புதன் அதிர்ஷ்டத்தை தருவார். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாத பிற்பகுதியில் முயற்சி செய்யுங்கள் மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். தடைகள் விலகும். மாற்றங்கள் முன்னேற்றத்துடன் அமையும். சனி கேது உடன் பின்னோக்கி வருவதால் மறைமுக தொல்லைகள் ஏற்பட்டாலும் கண்டு கொள்ளாமல் பயணம் செய்யுங்கள்.

மறைமுக அதிர்ஷ்டம்
ஒன்பதாம் வீட்டில் புதன் செவ்வாய், ராகு, சூரியன் இணையும் காலத்தில் அப்பாவின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். பாக்ய ஸ்தானத்தில் கிரகங்களின் கூட்டணியால் அப்பாவின் உடல் நலத்தில் அக்கறை தேவை. எட்டாம் வீட்டில் உள்ள சூரியன் ஒன்பதாம் வீட்டிற்கு நகர்வதால் அதிர்ஷ்டம் ஏற்படும்.

காதல் காலம் இது
காதல் உங்களுக்கு கை கூடி வரும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். பணவரவு அதிகரித்தாலும் சேமிக்க முடியலையே என்ற கவலை வேண்டாம். மூன்றாம் வீட்டில் உள்ள சனி, கேது பின்னோக்கி நகர்வதால் வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. செவ்வாய்கிழமை ராகு காலத்தில் துர்க்கையை வணங்க நன்மைகள் தேடி வரும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications