ஜூன் மாத ராசிபலன்கள் 2019: விருச்சிக ராசிக்காரங்களுக்கு விடிவுகாலம் பிறக்கும்
ஏழரை சனி ஒருபக்கம் எட்டி உதைக்க, ஜென்ம குரு படுத்தி எடுக்க கிரகங்களின் சஞ்சாரத்தினால் படு சிரமத்தில் இருக்கும் விருச்சிக ராசிக்காரர்களே உங்களுக்கு சிரமங்கள் படிப்படியாக குறையப்போகிறது.
மதுரை: கிரகங்களின் சஞ்சாரம் என்னதான் சாதகமாக இருந்தாலும் குடும்ப ஸ்தானத்தில் இருக்கும் சனி கேது எட்டாம் வீட்டில் இருக்கும் செவ்வாய் ராகு உங்களை படு சிரமத்திற்கு ஆளாக்கியிருக்கும். ஜூன் மாதத்தில் கிரகங்களின் கூட்டணி இடம் மாறுவதால் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் நீங்கும் பிரச்சினைகளுக்கு விடிவுகாலம் பிறக்கும்.
இந்த மாதம் உங்கள் ராசியில் குரு சஞ்சரிக்கிறார் இரண்டாம் வீட்டில் சனி கேது, ஆறாம் வீட்டில் இருந்து சுக்கிரன் ஏழாம் வீட்டில் உள்ள சூரியனுடன் கூட்டணி சேருகிறார். ஏழாம் வீட்டில் இருந்த புதன் எட்டாம் வீட்டில் உள்ள ராகு செவ்வாய் உடன் இணைந்துள்ளார்.
இந்த மாதம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் விருத்தி, பெண்கள், மாணவர்களுக்கு கிரகங்களின் சஞ்சாரத்தைப் பொறுத்து என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

வெளிநாடு யோகம்
குருவின் அருள் உங்களுக்கு இந்த மாதம் பரிபூரணமாக உள்ளது. இந்த மாதம் புதிய வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பொறுப்பான புதிய பதவி கிடைக்கும். பெண்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். சுக்கிரன் ரிஷப ராசியில் ஆட்சி பெற்று அமர்வதால் வெளிநாட்டு யோகம் கிடைக்கும். எட்டாம் வீட்டில் ராகு செவ்வாய் இருப்பதால் விமான பயணங்கள் எச்சரிக்கை தேவை.

பிள்ளைகள் மூலம் ஆறுதல்
இந்த மாதம் உங்களுக்கு பணவரவு அதிகரிக்கும். வரும் பணம் செலவுக்கு சரியாகும். பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காகவும் படிப்பிற்காகவும் செலவு செய்வீர்கள். குரு பகவான் சுக்கிரனை பார்ப்பதால் விருந்து, சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். திருமண யோகம் கைகூடி வரும். குழந்தை பாக்கியம் தடைபட்டவர்களுக்கும், திருமணம் தடை பட்டவர்களுக்கும் கூடி வரும். குரு ஏழாம் வீட்டினை பார்ப்பதால் கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் தீரும். தம்பதியரிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

ஆரோக்கியத்தில் அக்கறை
உங்கள் ராசி அதிபதி செவ்வாயுடன் எட்டாம் அதிபதி புதன், ராகு இணைந்து உள்ளதால் சில பிரச்சினைகள் ஏற்படும். கணவர் உறவினர்களின் உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படும். மருத்துவ செலவுகள் வரும். எட்டாம் வீட்டில் செவ்வாய் ராகு எல்லாத்தையும் தலைகீழாக நடத்துவார். மன நெருக்கடியை ஏற்படுத்துவார். வேலையில் சிக்கல்கள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. நெருப்பு, மின்சாரத்தில் கவனம் தேவை. வண்டி வாகனத்தில் போகும் போது கவனமாக மெதுவாக போங்க.

பிரச்சினைகள் தீரும்
விருச்சிக ராசிக்காரர்கள் தடைகளுடன் போராடிக்கொண்டிருக்கின்றனர். என்ன நினைச்சாலும் அதற்கு தலைகீழாக நடக்கிறதே என்று கவலைப்படுவீர்கள். பணம் செலவாகிக்கொண்டே இருக்கிறது. அதிர்ஷ்டமே இல்லை. வேலை செய்தாலும் வருமானம் கூட கிடைப்பதில்லை அதிர்ஷ்டம் மிகவும் குறைவாகவே இருக்கிறது என்று இத்தனை நாட்களாக புலம்பிக்கொண்டிருக்கிறீர்களா. இந்த மாதம் செவ்வாய் எட்டாம் வீட்டில் இருந்து ஒன்பதாம் வீட்டிற்கு நகர்வதால் பிரச்சினைகளுக்கு விடிவுகாலம் வரும்.

சகிப்புத்தன்மை தேவை
உங்க மனசுக்கு நல்லதுன்னு பட்டதை செய்யுங்க. கடன் மேலும் வாங்க வேண்டாம். ஏற்கனவே பட்ட கடனை அடைக்க முடியாமல் திண்டாடுகிறீர்கள்.
சூரியன் பார்வை உங்க ராசி மீது படுவது நல்லது. மாத பிற்பகுதியில் அஷ்டமத்தில் சூரியன் செல்வது தடைகளை ஏற்படுத்தும் மாணவர்கள் யோசித்து பெற்றோர்கள், ஆசிரியர்களின் ஆலோசனையை கேட்டு நடைபெறுவது நல்லது. பொறுமையும் சகிப்புத்தன்மையும் அவசியம். வேலையில் தடைகளும், தாமதங்களும் ஏற்படும்.

திருச்செந்தூர் முருகன்
நல்லவங்க யாரு கெட்டவங்க யாருன்னு தெரியவைக்கிற மாதம் இது. குடும்ப ஸ்தானத்தில் சனி கேது இருப்பதால் குடும்பத்தில் பிரச்சினைகள் அவ்வப்போது கும்மியடிக்கும். பொறுமை, கடவுள் நம்பிக்கை தேவை. சனி பெயர்ச்சி நடந்தால்தான் பிரச்சனை தீரும். ராகவேந்திரரை வியாழக்கிழமைகளில் வணங்க நன்மைகள் நடைபெறும். மாணவர்கள் கல்வியில் கவனம் தேவை. குல தெய்வ வழிபாடு நல்ல நாளாக தேர்வு செய்யுங்கள், திருச்செந்தூர் முருகனை வணங்குங்கள்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications