ஜூன் மாத ராசிபலன்கள் 2019: தனுசு ராசிக்காரர்களுக்கு மனக்கவலைகள் மாறும்
மதுரை: தனுசு ராசிக்காரர்களே இந்த மாதம் மனக்கவலை நிச்சயமாக மாறும். மன சக்தியை கடவுள் அளிப்பார். வாழ்க்கை பாடம் கற்றுக்கொள்வீர்கள். கிரகங்களின் கூட்டணியில் மாற்றம் இருப்பதால் நன்மைகள் அதிகம் நடைபெறும். வேலை வாய்ப்பு, கல்வி, தொழில் தனுசு ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
உங்கள் ஜென்ம ராசியில் சனி கேது சஞ்சரிக்கின்றனர். விரைய ஸ்தானத்தில் குரு, ஐந்தாம் வீட்டில் சுக்கிரன், ஆறாம் வீட்டில் சூரியன், ஏழாம் வீட்டில் ராகு செவ்வாய், புதன் என கிரகங்களின் சஞ்சாம் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. காதலிப்பவர்கள் கவனமாக பேசுங்கள். சின்ன கருத்து வேறுபாடுகள் கூட பிரச்சினையை ஏற்படுத்தி விடும்.
மாத பிற்பகுதியில் சூரியன் சஞ்சாரம் மிதுனம் ராசிக்கு மாறுகிறது. மிதுனம் ராசியில் உள்ள செவ்வாய், புதன் கடகம் ராசிக்கு மாறும் நேரத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். ஏமாற்றங்கள் நீங்கி வாழ்க்கையில் முன்னேற்றங்கள் ஏற்படும்.
{photo-feature}


Click it and Unblock the Notifications
