Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜூன் மாத ராசிபலன்கள் 2019: சிம்ம ராசிக்காரங்களுக்கு எச்1பி விசா கிடைக்கும் பாஸ்

ஜூன் மாதம் சிம்ம ராசிக்காரங்களுக்கு அதி அற்புதமான மாதமாக அமைந்துள்ளது. வெளிநாட்டு யோகம் கைகூடி வருகிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    29-05-2019 இன்றைய ராசி பலன் -வீடியோ

    மதுரை: ஜூன் மாதம் சிம்ம ராசிக்காரங்க ஜோரா கை தட்டுங்க. உங்களுக்கு இது அற்புதமான மாதமாக அமைந்துள்ளது. ராஜயோகம் கூடி வருது கூடவே அரசாங்க வேலையும் தேடி வருது. மாணவர்களுக்கு உயர்கல்வி யோகமும் கைகூடி வருகிறது. கிரகங்களின் கூட்டணியைப் பொருத்து சிம்மம் ராசிக்காரர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் வளர்ச்சி எப்படியிருக்கிறது என்று பார்க்கலாம்.

    உங்க ராசி அதிபதி சூரியன் பத்தாம் வீட்டில் தொழில் ஸ்தானத்தில் புதனுடன் அமர்ந்திருக்கிறார். சுக்கிரன் ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். லாப ஸ்தானத்தில் செவ்வாய், ராகு, நான்காம் வீட்டில் குரு பஞ்சம ஸ்தானத்தில் சனி கேது என கிரகங்கள் சஞ்சரிப்பது யோகமான அமைப்பாக உள்ளது.

    மாத பிற்பகுதியில் ராசி அதிபதி சூரியன் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். கூடவே புதன், செவ்வாய், ராகு என கிரகங்களின் கூட்டணி நன்மையை தருகிறது. சுக்கிரன் 4ஆம் தேதி முதல் பத்தாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வது யோகத்தை தருகிறது. திடீர் ராஜயோகம் தேடி வரும்.

    சூரியனால் அரசு வேலை

    சூரியனால் அரசு வேலை

    தொழில் ஸ்தானத்தில் உள்ள சூரியனால் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த மாதத்தில் எழுதும் அரசு தேர்வுகளால் வெற்றி கிடைக்கும். தொழில் தொடங்கவும் ஏற்ற மாதம் இது. மாத பிற்பகுதியில் இடம் மாறும் சூரியனால் வருமானம் அதிகரிக்கும், லாபம் கூடும். பொன்னான நேரம் கைகூடி வருகிறது. எதிர்பார்க்காத அதிர்ஷ்டம் ஏற்படும். அரசுத்துறையில் வளர்ச்சிகள் உண்டாகும். வேலைகளில் முன்னேற்றம் உண்டாகும்.

    எச்1பி விசா கிடைக்கும்

    எச்1பி விசா கிடைக்கும்

    இந்த மாதம் வேலை செய்யும் இடத்தில் வெளிநாட்டு வாய்ப்பு, திடீர் அதிர்ஷ்டங்கள் கைகூடி வரும். கடல் கடந்த பயணங்கள் அமையும். அமெரிக்கா வாய்ப்புகள் அமையும் எச்1பி விசாவிற்கு அப்ளை பண்ணுங்க. எச் 1 விசாவிற்கு அப்ளை செய்திருந்தவர்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    தனவரவு கிடைக்கும்

    தனவரவு கிடைக்கும்

    தொழிலில் எதிர்பாராத வளர்ச்சியும் பண வரவும் உண்டாகும். புதிய தொழில் தொடங்கலாம். புதன் ஆட்சியா லாப ஸ்தானத்தில் இருப்பதால் வருமானத்தில் லாபம் கிடைக்கும். பிரம்மாண்ட வெற்றி கிடைக்கும். மாத பிற்பகுதியில் தனாதிபதி புதன் லாப ஸ்தானத்தில் சூரியனுடன் இணையும் காலத்தில் எதிர்பாராத பண வரவு உண்டு.

    ராஜயோக காலம்

    ராஜயோக காலம்

    சனி கேது கூட்டணியால் இடமாற்றம் ஏற்படும். சூரியனை குரு பார்வையிடுவதால் சுபமான செயல்கள் நடைபெறும். 4ஆம் தேதி சுக்கிரன் இடம் பெயர்ந்து ரிஷபத்தில் ஆட்சி பெற்று அமர்வதால் மாளவியா யோகம் செயல்படும். ராஜயோகம், மாளவியா யோகம். குரு பகவான் சம சப்தமாக சூரியனை பார்வையிடுவதால் யோகங்கள் கூடி வருது

    உயர்கல்வி யோகம்

    உயர்கல்வி யோகம்

    மாணவர்களுக்கு நல்ல முடிவுகளை தெளிவாக எடுப்பீர்கள். வெளிநாடு யோகம் கைகூடி வரும். சந்திரனுடன் குரு இணையும் காலத்திலும் சந்திரன் சுக்கிரனை நேருக்கு நேராக பார்க்கும் காலத்திலும் நன்மையை தரும். யோக தசாபுத்தி நடக்கும் போது நன்மைகள் அதிகம் நடை பெறும்.

    சுப செலவுகள் அதிகமாகும்

    சுப செலவுகள் அதிகமாகும்

    எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். பெண்களுக்கு நன்மை தரும் மாதம். 23ஆம் தேதிக்கு மேல் பொழுது போக்கு பயணங்கள் அதிகரிக்கும். நான்காம் இடத்தில் குரு இருக்கிறார். பிள்ளைகளுக்கு கல்விக்காக பயணம் அமையும். செலவுகள் அதிகரிக்கும். வயதில் மூத்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

    உணவில் கவனம்

    உணவில் கவனம்

    மூத்த சகோதரர்களின் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். சனிபகவான் கேது உடன் இணைந்து ஐந்தாம் வீட்டில் இருக்கிறார். வம்பு வழக்குகள் சமாதானத்தில் முடியும். மனைவி உடல் நலனில் அக்கறை தேவை. சனி கேது இணைவு இருப்பதால் வெளி உணவுகளை தவிர்க்கவும். அனைத்து வகையிலும் உயர்ந்த மாதம்.

    குழந்தை பேறு கிடைக்கும்

    குழந்தை பேறு கிடைக்கும்

    சனி கேது உடன் இணைந்து குரு 4ஆம் வீட்டில் வக்ரமடைந்து வருவதால் இழுபறிகள் நடைபெறும். சிலருக்கு இரண்டாவது திருமணம் கூடி வரும். முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். தெய்வ பிராத்த்தனையால் குழந்தை பேறு அமையும். இந்த மாதம் வளர்ச்சி வருமானம் நிறைந்த மாதம் எதிர்பாராத வருமானமும் பதவிகள் கிடைக்கும். வீடு வாகன வசதி அமையும். மொத்தத்தில ஜூன் மாதம் சிம்ம ராசிக்காரங்களுக்கு ரொம்ப ரொம்ப நல்ல மாதம்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+