Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு வக்ர பெயர்ச்சி 2020: 120 நாட்களில் திடீர் அதிர்ஷ்டமழையில் நனையப்போறீங்க

குருபகவான் தற்போது வக்ரகதியில் இருக்கிறார். இந்த குரு பெயர்ச்சி காலத்தில் நன்மை அடைந்தவர்களுக்கு சில பாதிப்புகள் வரலாம். 14-05-2020 முதல் வக்கிரம் பெற்று 29-06-2020 ஆம் தேதி வக்கிர கதி பெற்று தனுசு ரா

Subscribe to Oneindia Tamil

சென்னை: குருபகவான் வக்ர சஞ்சாரம் இன்று முதல் ஆரம்பமாகிறது. மகரம் ராசியில் சனியோடு சேர்ந்திருக்கும் குரு பகவான் படிப்படியாக விலகி வக்ரகதியில் சஞ்சரித்து தனுசு ராசிக்கு நகர்கிறார். தனுசு ராசிக்கு வக்ரமடைந்து திரும்பும் குரு செப்டம்பர் 13ஆம் தேதி முதல் நேர்கதியில் சஞ்சரிப்பார். இந்த 120 நாட்களும் குரு பகவானால் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு என்ன பலன் என்ன பாதிப்பு என்ன பலன் ஏற்படும் என்று பார்க்கலாம்.

நவகிரகங்கள் அனைத்தும் தங்கள் சுற்றுப் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. அவை சில நேரங்களில் பின்னோக்கியும் செல்லும். ஜோதிட ரீதியாக கிரகங்கள் பின்னோக்கி செல்லும் காலங்களை வக்ர காலங்கள் என்கிறோம். நவகிரகங்களில் செவ்வாய், புதன், சுக்கிரன், குரு, சனி போன்ற ஐந்து கிரகங்களும் சில நேரங்களில் வக்ரம் பெறுவார்கள். கிரகங்கள் மெதுவாக நகர்வதையே வக்ரகாலம் என்று கூறுகிறோம். குரு சூரியனுக்கு 245 டிகிரியில் இருக்கும் போது வக்ரம் பெற்று 115 டிகிரிக்கு வருகின்ற போது வக்ர நிவர்த்தியடையும். சுமார் 120 நாட்கள் வக்ர நிலையில் இருக்கும்.

தனுசு ராசியில் இருந்து கடந்த மார்ச் மாதம் அதிசாரமாக மகரம் ராசிக்கு சென்ற குரு பகவான் இப்போது வக்ரமடைந்து பின்னோக்கி நகர்கிறார். வைகாசி மாதம் சூரியனுக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கும் குரு பகவான் ஆவணி மாதம் சிம்மம் ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் போது வக்ர நிவர்த்தி அடைகிறார். 120 நாட்கள் வக்ரநிலையில் சஞ்சரிக்கும் குருபகவான் யாருக்கு சாதகமான பலனையும் யாருக்கு பாதகமான பலனையும் தரப்போகிறார் என்று பார்க்கலாம்.

சிம்மம்

சிம்மம்

குரு பகவான் வக்ரமடைவதால் உங்களுக்கு பணவருமானம் வரும் பழைய கடன்களை அடைப்பீர்கள். வீடு கட்ட முயற்சி செய்வீர்கள். வீடு கட்டும் ப்ளான் அப்ரூவல் வாங்குவீர்கள். செல்வாக்கும் சொல்வாக்கும் உயரும். சொந்தபந்தங்களுடன் கூடி மகிழ்வீர்கள். விஐபிக்களுடன் நட்பு ஏற்படும். தடைபட்டு தள்ளிப்போன சுப காரியங்களை நடத்துவீர்கள். உங்களின் அழகு ஆரோக்கியம் கூடும். கொரோனா வைரஸ் லாக்டவுனால் வேலை இல்லையே வருமானம் இல்லையே செலவுக்கு என்ன செய்வது என்று கவலைப்பட வேண்டாம் இந்த 120 நாட்களில் உங்களுக்கு திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் பணம் வரும்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களின் குடும்பம் அமைதியான சூழ்நிலைக்கு மாறும். இந்த கால கட்டத்தில் உங்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். புனித தலங்களுக்கு சுற்றுலா செய்யவேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும். தடைபட்டிருந்த திருமணம் கைகூடி வரும். வீட்டிற்குள் 60 நாட்களுக்கு மேல் அடைபட்டிருந்த நீங்கள் பயணங்களினால் உற்சாகமடைவீர்கள். எதற்கெடுத்தாலும் விதண்டாவாதம் பேசாதீர்கள் வளைந்து கொடுத்து போங்க. கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வேண்டாம் விட்டுக்கொடுத்து போங்க உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு நிதானமும் பொறுமையும் தேவை. தாய்வழி உறவினர்களால் செலவுகளால் வரும். அரசு வழி விவகாரங்களில் பிரச்சினை வரலாம் அலட்சியமாக இருக்காதீர்கள். குரு பகவான் பூராடம் நட்சத்தில் வக்கிரமாக செல்லும் கால கட்டமான ஜூலை 31 முதல் செப்டம்பர் 10 வரைக்கும் உங்களுக்கு அற்புதமான காலகட்டம். உங்களுக்கு வருமானம் வரும். உங்களின் எண்ணங்கள் நிறைவேறும் புகழ்பெற்ற சுற்றுலாதலங்களுக்கு செல்வீர்கள். உங்களின் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். வண்டி வாகனத்தை பராமரிப்பு செய்வீர்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு வீண் பிரச்சினைகள் வரலாம் வாக்குவாதத்தை தவிர்த்து விடுங்கள். இளைய சகோதரர்கள் மூலம் பிரச்சினைகள் வரலாம். உங்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும் என்றாலும் சுறுசுறுப்பாக உற்சாகமாக வேலையை செய்து முடிப்பீர்கள். அதிகாரமுள்ள பதவிகள் கிடைக்கும். பெற்றோருடன் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். ஜூலை மாதத்திற்கு மேல் உங்களின் சமயோஜித புத்தி அதிகமாகும். புதிய வேலை கிடைக்கும், மனைவி மூலம் ஆதரவு அதிகரிக்கும். மனைவி வழி சொத்துக்கள் கிடைக்கும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் அமையும். இந்த 120 நாட்களும் வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிங்க மக்களே.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+