கார்த்திகை மாதம்..விருச்சிக ராசியில் 3 கிரகங்கள் கூட்டணி..3 ராசிக்காரர்களுக்கு திடீர் லக்!
சென்னை: கார்த்திகை மாதம் ஆன்மீக அலைகள் நிறைந்த மாதம். கார்த்திகையில் முதல் நாள் அன்று சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயருகிறார். விருச்சிக மாதம் என்றும் கார்த்திகை மாதம் அழைக்கப்படுகிறது. இன்னும் சில நாட்களில் கார்த்திகை மாதம் பிறக்கப்போகிறது. ஒரு மாத காலமாக துலாம் ராசியில் தனது பலத்தினை முழுமையாக இழந்து நீசம் என்ற நிலையில் சஞ்சரித்து வந்த சூரியன், தான் முழுமையாக வலிமை பெற விருச்சிகம் ராசியில் தனது பயணத்தைத் துவக்கும் காலமே கார்த்திகை மாதம். இந்த மாதத்தில் சூரியனுடன், சுக்கிரன் புதன் சேர்க்கை பெற்று அமர்ந்துள்ளனர். இந்த கிரகங்களின் கூட்டணி சில ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டத்தை தரப்போகிறது.
குரு வக்ர நிலை முடிந்து மீன ராசியில் நேர்கதியில் பயணம் செய்கிறார். சனிபகவான் மகர ராசியில் நேர்கதியில் பயணம் செய்கிறார். ராகு மேஷ ராசியிலும் கேது துலாம் ராசியிலும் பயணம் செய்ய செவ்வாய் பகவான் வக்ர நிலையில் ரிஷப ராசியில் பயணம் செய்கிறார்.
நவகிரகங்களின் சஞ்சாரம், பயணத்தினால் சில ராசிக்காரர்களுக்கு திடீர் யோகங்கள் உண்டாகும். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்
சூரியன், புதன், சுக்கிரன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் சஞ்சரிக்கின்றனர். கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும், அப்பாவின் மூலம் திடீர் பண வரவு உண்டாகும். ஷேர்மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைத் தரும். செவ்வாய் உங்கள் ராசிக்கு இரண்டாம் இருப்பதால் செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். மாத பிற்பகுதியில் சுக்கிரன் ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிப்பதால் வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றி கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். ஆன்மீக தரிசனம் செல்வீர்கள்.

ரிஷபம்
சூரியன், புதன், சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் சஞ்சரிப்பதால் அரசு அதிகாரிகளின் உதவி கிடைக்கும், அப்பாவின் தொழிலில் ஈடுபாடு உண்டாகும். செவ்வாய் ராசியில் பயணம் செய்வதால் கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். சுக்கிரன் பார்வையால் நினைத்த காரியம் நிறைவேறும். மாத பிற்பகுதியில் பண விசயங்களில் கவனம் தேவை. விலை உயர்ந்த பொருட்களை யாருக்கும் இரவல் கொடுக்க வேண்டாம். அடிக்கடி வெளியூருக்கு நீண்ட தூரம் பிரயாணம் செல்லும் நிலை உண்டாகும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

மிதுனம்
சூரியன்,புதன், சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் சஞ்சரிப்பதால் அரசு போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும், அப்பாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கடன்வாங்கும் நிலை ஏற்படும், பிள்ளைகளிடத்தில் எச்சரிக்கை தேவை. செவ்வாய் விரைய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் திடீர் சுப விரைய செலவுகள் உண்டாகும். சுக்கிரன் ஐந்தாம் இடத்தில் பயணம் செய்வதால் சிறு தூர பயணங்கள் செல்வீர்கள். சனி உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கிறார். அஷ்டமத்து சனியால் சில சங்கடங்கள் வந்து நீங்கும். வாகன பயணங்களில் கவனம் தேவை. பேசும் வார்த்தைகளில் நிதானம் அவசியம். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளை பகைத்துக்கொள்ள வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

கடகம்
சூரியன்,புதன், சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் சஞ்சரிப்பதால் பூர்வீக சொத்தில் பங்கு கிடைக்கும், அரசு ஒப்பந்தத் தொழில் சிறப்படையும். சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். செவ்வாய் லாப வீட்டில் இருப்பதால் செய்யும் முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். பிள்ளைகள் மூலம் சுப செய்திகள் தேடி வரும். யாருக்கும் பணம் கடன் கொடுக்க வேண்டாம். குருவின் பார்வையால் சுப காரிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சனிபகவான் பார்வை சில சங்கடங்களை தரும். வேலைப்பளு அதிகரிக்கும். உங்களுடைய பொறுப்புகளை அடுத்தவரை நம்பி ஒப்படைக்க வேண்டாம்.

சிம்மம்
உங்கள் ராசிநாதன் சூரியன், சுக்கிரன், புதன் உடன் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் சஞ்சரிப்பதால் அரசு வாகன யோகம் உண்டாகும், அரசு ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். கல்வியில் மேன்மை உண்டாகும். அம்மாவின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வண்டி வாகனம் வாங்குவீர்கள். செவ்வாய் பத்தாம் வீட்டில் பயணம் செய்வதால் பதவி யோகம் உண்டாகும். எதிரிகள் பிரச்சினை நீங்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும் மாதம் கார்த்திகை மாதம்.

கன்னி
சூரியன், புதன், சுக்கிரன் உங்கள் ராசிக்கு மூன்றாமிடமான முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். அரசு வேலை செய்பவர்களுக்கு எதிர்பார்த்த இடத்தில் இடமாற்றம் உண்டாகும் எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். செவ்வாய் பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சகோதரர்களுடன் ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் நீங்கும். பொன்னகைகள் சேரும். வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். பண விசயத்தில் கவனமும் நிதானமும் தேவை.

துலாம்
சூரியன், சுக்கிரன், புதன் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் தன ஸ்தானத்தில் பயணம் செய்வதால் தலைமைப் பதவி தேடி வரும். செய்யும் வேலைகளில் வருமானம் அதிகமாகக் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். செவ்வாய் எட்டாம் வீட்டில் பயணம் செய்வதால் வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. பேச்சில் வசீகரம் அதிகரிக்கும். இனிமை கூடும் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். அர்த்தாஷ்டம சனியால் சில பாதிப்புகள் வரலாம். புது வாகனம் வாங்குவதை சற்றே தள்ளிப்போடவும். அம்மாவின் உடன் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

விருச்சிகம்
சூரியன்,சுக்கிரன், புதன் ஆகிய 3 கிரகங்கள் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் பதவி உயர்வு கிடைக்கும், முகத்தில் பொலிவும் வசீகரமும் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். செவ்வாய் ஏழாம் வீட்டில் புது வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியடையும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும், செல்வம் சேர்ப்பதற்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கல்வி,வேலை விசயமாக வெளிநாட்டிற்கு செல்லும் யோகம் உண்டாகும்.

தனுசு
சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய 3 கிரங்கங்கள் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடமான விரைய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அரசு ஊழியர்களுக்கு பணியிட மாற்றம் உண்டாகும் உயர் அதிகாரிகளின் விஷயத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். விரைய செலவுகள் அதிகரிக்கும் அதை சுப விரைய செலவாக மாற்றுங்கள். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் சஞ்சரிப்பதால் பக்கத்து வீட்டுக்காரர்களால் நன்மை உண்டாகும். செவ்வாய் பகவான் பார்வையால் சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். சனி உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் இருப்பதால் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை.

மகரம்
சூரியன், புதன், சுக்கிரன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செய்யும் தொழில் மூலம் லாபம் அதிகரிக்கும், பண வரவு அதிகரிக்கும் வங்கியில் சேமிப்பு கூடும். திடீர் அதிர்ஷ்டம் மூலம் பணம் வரும். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்வதால் பிள்ளைகளால் சந்தோஷ செய்திகள் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் கவனம் தேவை. உடல் உழைப்பு அதிகரிக்கும். தொழிலில் கடும் உழைப்பு தேவைப்படும். பேசும் வார்த்தைகளில் நிதானம் அவசியம். பெரிய அளவில் முதலீடுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது.

கும்பம்
சூரியன், புதன், சுக்கிரன் உடன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் பயணம் செய்கிறார். செய்யும் தொழிலில் உத்தியோகம் மேன்மையடையும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்வதால் ரியல் எஸ்டேட் தொழில் சிறப்படையும். பதவி உயர்வு தேடி வரும். பெண்கள் புதிதாக நகைகள் வாங்குவீர்கள். திடீர் விரைய செலவுகள் வரும் அதை சுப விரைய செலவாக மாற்றுங்கள். எப்போதோ கொடுத்த பழைய கடன்கள் வசூலாகும்.

மீனம்
சூரியன்,புதன், சுக்கிரன் ஆகியோர் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடமான பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் அப்பாவினால் நன்மை உண்டாகும், முன்னோர்கள் சொத்துகள் மூலம் லாபம் கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்வதால் புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். ஆன்மீக பயணம் செய்வீர்கள். சனி உங்கள் ராசிக்கு லாப வீட்டில் இருப்பதால் செயல்கள் எல்லாம் சிறப்படையும், தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். செய்யும் முதலீடுகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். மன மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்த மாதமாக கார்த்திகை மாதம் அமைந்துள்ளது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications