Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கார்த்திகை மாத ராசி பலன்: விருச்சிகத்தில் நுழையும் சூரியன்.. புது கூட்டணியால் குபேர யோகம் யாருக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கார்த்திகை மாதத்தில் சூரியன் விருச்சக ராசியில் பயணம் செய்வதால் விருச்சிக மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் விருச்சிக ராசியில் சூரியன் உடன் செவ்வாய், புதன் பயணம் செய்கின்றனர். நவ கிரகங்களின் பயணத்தால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கிரகப்பெயர்ச்சி: கார்த்திகை 10ஆம் தேதி புதன் தனுசு ராசிக்கு செல்கிறார். குரு மேஷ ராசியில் இருக்கிறார். சுக்கிரன் கன்னி ராசியில் நிற்கிறார். கார்த்திகை 13 ஆம் தேதி சுக்கிரன் துலாம் ராசிக்கு மாறுகிறார். சனி கும்ப ராசியில் அமர்ந்திருக்கிறார். ராகு மீன ராசியில் இருக்கிறார். கேது கன்னி ராசியில் இருக்கிறார்.

Karthigai Matha Rasi Palan 2023: Mesham to Meenam Who will get Rajayogam after Deepavali

மேஷம்

வீரத்தை அணிகலனாகக் கொண்ட செவ்வாயை அதிபதியாக பெற்றுள்ள மேஷ ராசி அன்பர்களே...
வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்வீங்க .வண்டி வாகனங்களில் செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டுமுங்க. நிலம் சம்பந்தப்பட்ட தகராறு ஏற்பட்டு நீதிமன்றத்தை நாடுவீங்க. ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்றம் பெறுவீங்க. உடன் பிறந்தவரின் திருமணத்தை சிரமப்பட்டு நடத்தி வைப்பீங்க. இரும்பு சம்பந்தப்பட்ட தொழிலில் கணிசமான லாபம் பெறுவீங்க. கொடுத்த பணத்தை வசூல் செய்வதில் சிரமத்தை எதிர்நோக்குவீங்க. திடீரென்று வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு ஏற்படுமுங்க. கோயில் திருப்பணிகள் செய்வீங்க. தொழிலில் எதிர்ப்புகளை முறியடித்து வெற்றி பெறுவீங்க. திருச்செந்தூர் முருகனை வழிபடுங்க. விருப்பமான காரியங்கள் நிறைவேறுமுங்க.

ரிஷபம்

கலைநயம் மிளிரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபராசி அன்பர்களே....
நீண்ட காலமாக குடும்பத்தில் இருந்த குழப்பத்தை சரி செய்வீங்க. மனைவி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்ச்சிப்படுத்துவீங்க. தொழிலில் புதிய ஒப்பந்தம் போடுவீங்க. அரசு காண்ட்ராக்ட் பெறுவதில் அதிக முனைப்பு காட்டுவீங்க. வியாபாரத்திற்கு ஏற்பட்ட போட்டியை தகர்த்து எறிவீங்க. சிலர் வீடுகளில் குழந்தை பாக்கியம் ஏற்பட்டு நீண்ட நாள் கவலைகள் தீருமுங்க. அரசு வேலையில் இருப்பவர்கள் கவனமாக பணி செய்ய வேண்டுமுங்க. மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாதீங்க. பிள்ளைகளின் படிப்புக்காக கடன் வாங்குவீங்க. தக்க சமயத்தில் நண்பர்களின் உதவி கிடைத்து தொழிலை மேம்படுத்துவீங்க. அடுத்தவருக்கு ஜாமீன் கையெழுத்து போடும்போது கவனமாக இருக்க வேண்டுமுங்க.
திருவண்ணாமலை சென்று வாங்க. பெருமையும் புகழும் அதிகரிக்குமுங்க.

மிதுனம்

எதிர்ப்புகளை புத்திசாலித்தனத்தால் முறியடிக்கும் புதனை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே...
உங்களை தோற்கடிக்க நினைத்த எதிரிகளின் சதியை முறியடித்து தொழிலில் முதன்மையாக இருப்பீங்க. வியாபாரத்தில் இருக்கும் பிரச்சனைகளை மிக நிதானமாக கையாண்டு வெற்றி பெறுவீங்க. மணல் குவாரி ஒப்பந்த வேலைகளுக்காக அரசியல்வாதிகளை நாடுவீங்க. காதலித்த பெண்ணை பெற்றோரின் ஆசியோடு கை பிடிப்பீங்க. புதிய வீடு கட்டுவதற்கான முயற்சியில் இறங்குவீங்க. பழைய கடன்களை பாடுபட்டு அடைப்பீங்க. பிள்ளைகளின் தேவையை பூர்த்தி பண்ண இரவு பகலாக உழைப்பீங்க. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த நீதிமன்ற வழக்கு உங்களுக்கு சாதகமாக முடியுமுங்க. அரசாங்க ஊழியர்கள் பதவி உயர்வு பெறுவீங்க. சிலருக்கு இடம் மாற்றம் ஏற்படுமுங்க. பழைய வீட்டை புதுப்பித்து அலங்காரம் செய்வீங்க.
திருமோகூர் காளமேகப் பெருமாளை வழிபடுங்க. சூழும் துன்பங்கள் தூர ஓடுமுங்க.

கடகம்

வளர்ச்சிகளை சீராக அள்ளித் தருகின்ற சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே...
பெரிய மனிதரின் உதவியால் சிக்கலான பிரச்சனையிலிருந்து விடுபடுவீங்க. வியாபாரத்தில் வெற்றியை நிலைநாட்ட வியூகம் அமைத்து உழைப்பீங்க. நண்பர்கள் விஷயத்தில் மிகுந்த கவனமுடன் செயல்படுவீங்க. உறவினர் ஒருவருக்காக கையில் வைத்திருந்த பணத்தை செலவு செய்வீங்க. சகோதரியின் திருமணத்திற்கான ஏற்பாடுகளை பண்ணுவீங்க. அரசாங்கத்தின் மூலமாக தொழிலுக்கு கடன் பெறுவீங்க. முதுகு வலி காரணமாக எலும்பு மருத்துவரை சந்திப்பீங்க. வியாபாரம் நிமித்தமாக வெளியூர் பயணம் போவீங்க. தனியார் துறை ஊழியர்கள் உற்பத்தியைப் பெருக்க பாடுபடுவீங்க. முதலாளியின் பாராட்டு பெறுவீங்க.
தஞ்சை பிரகதீஸ்வரர் பெருமானை வழிபடுங்க. நெஞ்சத்து ஆசைகள் எல்லாம் நிறைவேறுமுங்க.

சிம்மம்

அரசரைப் போல் கோலோச்சும் ஆற்றல்மிக்க சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே...
அடித்து வளர்க்காத பிள்ளையும் ஒடித்து வளர்க்காத முருங்கையும் உருப்படாது என்று நினைத்து பிள்ளைகளை கண்டிப்பதாக எண்ணி அவர்களுடைய மனதை கஷ்டப்படுத்தாதீங்க. தொழிலில் அதிக முதலீடு செய்யாதீங்க. வெளியூர் பயணம் செல்லும் போது பணம் பொருட்களை பத்திரப்படுத்த மறக்காதீங்க. தேவையில்லாமல் செலவு செய்து பணப்பிரச்சனையில் சிக்கிக் கொள்ளாதீங்க. புதிதாக அறிமுகமான பெண்களிடம் அதிக நெருக்கம் காட்டாதீங்க. மற்றவர் விஷயத்தில் தலையிடுவதை நிறுத்திக் கொள்ளுங்க. எந்தக் காரணம் கொண்டும் மனைவியோடு விவாதம் செய்யாதீங்க. பொறுத்துப் போனால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படுவதை தவிர்க்கலாமுங்க.
காளகஸ்திநாதரை வழிபடுங்க. கஷ்டங்கள் பறந்தோடுமுங்க.

கன்னி

அறிவுத் திறனை அள்ளித்தரும் புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே...
போட்டியாளர்களை மண்ணைக் கவ்வ வைத்து வியாபாரத்தில் வெற்றி கொடி நாட்டுவீங்க. தொழில்துறையில் புதிய யுக்திகளை கையாண்டு லாபத்தை பெருக்குவீங்க. சிக்கனமாக செலவு செய்து கையிருப்பை அதிகரிப்பீங்க. வங்கியில் வாங்கிய கடனுக்கான தவணையை முறையாக செலுத்தி புதிய கடனை பெறுவதற்கான முயற்சியில் இறங்குவீங்க. அவசரப்பட்டு வார்த்தையை விடாதீங்க. சொந்த பந்தங்களில் பிரச்சனையை கொண்டு வருமுங்க. மனைவி வகையில் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுமுங்க. தொழில்துறையில் சில சறுக்களை சந்திப்பீங்க. ஆனால் அதிலிருந்து சமாளித்து வெளியே வருவீங்க. சொத்து பிரச்சனை காரணமாக இருந்த வில்லங்கத்தை பஞ்சாயத்தின் மூலம் தீர்த்துக் கொள்வீங்க.மிகவும் பிரயாசைப்பட்டு ஏற்பாடு செய்த திருமணம் முயற்சி தள்ளி போகுமுங்க.
காரைக்குடி முத்துமாரியம்மனை வழிபடுங்க. நிறைவான செல்வம் பெறுவீங்க.

துலாம்

தர்ம அதர்மங்களுக்கு ஏற்ப பலன்தரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசி அன்பர்களே...
நினைத்த காரியத்தை முடிக்க இரவு பகலாக பாடுபடுவீங்க. வெளியூர் பயணங்கள் மூலமாக தொழில் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் வெற்றி காண்பீங்க. சிலர் வெளிநாட்டிலிருந்து சொந்த ஊர் திரும்புவீங்க. மனதிற்கு பிடித்த பெண்ணின் கருத்தை அறிந்து உங்கள் காதலை வெளிப்படுத்துவீங்க. பிள்ளைகள் அக்கறையாக படிப்பதால் சந்தோஷப்படுவீங்க. மனைவியின் நீண்ட கால ஆசையை நிறைவேற்றி வைப்பீங்க. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வீங்க. கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லதுங்க. அரசு ஊழியர்கள் கவனமாக வேலை பார்க்க வேண்டுமுங்க. குடும்பத்தை கலைக்க சிலர் முயற்சி செய்வாங்க. அடையாளம் கண்டு அதிலிருந்து புத்திசாலித்தனமாக விடுபடுவீங்க.
திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாளை வழிபடுங்க. சகல சௌபாக்கியங்களும் சித்திக்குமுங்க.

விருச்சிகம்

போர்க்குணம் கொண்ட பூமிகாரகன் செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே...
குடும்பத்தோடு புனித தலங்களுக்கு யாத்திரை செல்வீங்க. பெற்றோர்களின் ஆசையை நிறைவேற்றி வைக்கும் வகையில் காசிக்கு அனுப்பி வைப்பீங்க. வியாபாரத்தில் சாணக்கியத்தனமாக நடந்து வெற்றி கொடி நாட்டுவீங்க. தொழிலை மேம்படுத்த முதலீடு செய்வீங்க. அவசியமான கடன்களை சிரமப்பட்டு அடைப்பீங்க. பிள்ளைகளின் படிப்பு திறமையால் கணவன் மனைவி இருவரும் மகிழ்ச்சி அடைவீங்க. அரசாங்க ஊழியர்கள் இடமாற்றம் ஏற்பட்டு குடும்பத்தோடு வேறு ஊருக்கு செல்வீங்க. சமுதாயப் பணியில் ஈடுபட்டு உங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்வீங்க. உடலுக்கு ஏதாவது சின்ன சின்ன பிரச்சனை வந்து தொந்தரவு கொடுக்குமுங்க.
பழனிமலை முருகனின் பாதம் பணியுங்க. கழனி செழித்து செல்வம் பெருகுமுங்க.

தனுசு

வினைப்பயனை அறுக்கின்ற வியாழ பகவானை அதிபதியாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே...
தொழில் துறைகளில் உருவான போட்டி பொறாமைகளால் மனம் சங்கட்டப்படுவீங்க. உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்களுக்காக மருத்துவம் பார்ப்பீங்க. எந்த காரணத்தைக் கொண்டும் வியாபாரத்தில் சமரசம் செய்து கொள்ள மாட்டீங்க. மருத்துவர்கள் வழக்கறிஞர்கள் தொழில் மேம்பாடு கண்டு புகழ் அடைவீங்க. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எல்ஐசி பாலிசி எடுப்பீங்க. சகோதர சகோதரிகளால் சில பிரச்சனை உருவாகி மன நிம்மதியை கெடுக்குமுங்க. அரசியல்வாதிகள் நட்பால் அனுகூலம் அடைவீங்க. வீடு கட்டுவதற்காக புதிய இடம் வாங்குவீங்க. அமெரிக்கா கனடா போன்ற அயல்நாடு செல்வதற்கு தேவையான ஏற்பாட்டை நண்பர்கள் மூலமாக செய்வீங்க.
பட்டமங்கலம் சென்று தட்சிணாமூர்த்தியை வணங்கி வாங்க. தொட்டதெல்லாம் துலங்குமுங்க.

மகரம்

வியூகங்கள் மூலம் வெற்றிகளை காணும் மந்தனின் ஆதிக்கம் கொண்ட மகர ராசி அன்பர்களே....
உணவகத் தொழிலில் உற்சாகமாக ஈடுபடுவீங்க. புதிய கடைகள் திறப்பதற்கு முயற்சி செய்வீங்க. வியாபாரத்தை விரிவுபடுத்த திட்டம் போடுவீங்க. தனியார் துறை ஊழியர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு வேலை பார்ப்பீங்க. அரசாங்க ஒப்பந்தங்களை சிரமப்பட்டு பெறுவீங்க. உங்களுக்கு உதவி செய்ய நண்பர்கள் ஆர்வத்தோடு இருப்பாங்க. அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்க. வீட்டில் எந்த காரணம் கொண்டும் சண்டை சச்சரவுகளில் இறங்காதீங்க. வெளியூர் பயணங்கள் மூலமாக ஆதாயம் அடைவீங்க. வியாபாரத்தில் எதிர்பாராத லாபத்தை கொண்டு வருவீங்க. ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபடாதீங்க. அது தேவையில்லாத நஷ்டத்தை ஏற்படுத்துமுங்க. தனியார் துறை ஊழியர்கள் அக்கறையோடு வேலை பார்த்து முதலாளிகளின் பாராட்டை பெறுவீங்க.
திருநள்ளாறு தர்ப்ப ஆரண்ய ஈஸ்வரரை வழிபடுங்க. அவமிருத்த யோகம் விலகும்முங்க.

கும்பம்

சாணக்கியத்தனத்தால் சாதனை புரியும் சனிபகவானை அதிபதியாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே...
எடுத்த காரியத்தில் எந்த விதமான தடங்கலும் இன்றி வெற்றி பெறுவீங்க. தொழிலை மேம்படுத்தி உறவுகள் மத்தியில் அந்தஸ்தை உயர்த்தி கொள்வீங்க. வியாபாரத்தில் சிறப்பான பலனை அடைந்து வருமானத்தை பெருக்குவீங்க. மணல் செங்கல் வியாபாரத்தில் நல்ல லாபம் பார்ப்பீங்க. புதிய வீட்டில் குடியேறுவீங்க. திருமண வைபங்களின் கலந்து கொள்வீங்க. நீங்களே முன்நின்று சிக்கலான திருமணத்தை நடத்துவீங்க. ஆதரவற்ற பிள்ளையின் படிப்பு செலவுக்கு உதவி செய்வீங்க. உறவுகளின் மத்தியில் இருந்த மனக்கசப்பை போக்கி சமரசத்தை ஏற்படுத்துவீங்க. பிள்ளைகள் கேட்ட பொருளை வாங்கி கொடுப்பீங்க. மனைவியின் மனம் அறிந்து நடந்து குடும்பத்தில் குதூகலத்தை ஏற்படுத்துவீங்க.
ஒத்தக்கடை யோக நரசிம்மரை வழிபடுங்க. ஆயுள் விருத்தியாகுமுங்க.

மீனம்

பார்வையால் பலன்களை அள்ளித்தரும் குரு பகவானை அதிபதியாகக் கொண்ட மீனராசி அன்பர்களே...
பூர்வீக சொத்தில் இருந்த வில்லங்கம் விலகி உங்களுக்கு உரிய பங்கை பெறுவீங்க. செங்கல் சூளை உணவகத் தொழில் போன்ற துறைகளில் ஈடுபட்டு வருமானத்தை பெருக்குவீங்க. மலர் வணிகத்தின் மூலமாக மகத்தான லாபம் அடைவீங்க. எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்வீங்க. வாகனங்களின் போகும் போது கவனமாக இருக்கனுமுங்க. சின்ன சின்ன விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உண்டுங்க. பங்கு பரிவர்த்தனையில் பக்குவமாக ஈடுபடுங்க. ஆன்லைன் சூதாட்டங்களை அறவே ஒதுக்கி வையுங்க. வீட்டில் மழலைச் செல்வம் தவழ்ந்து மகிழ்ச்சியை ஏற்படுத்துமுங்க. அனாவசியமாக செலவு செய்து கடனாளி ஆகாதீங்க. பிள்ளைகள் உங்களின் மனம் கோணாமல் நடந்து கொண்டு மகிழ்ச்சியை ஏற்படுத்துவாங்க.
அழகர் கோவில் கள்ளழகர் பெருமானை வழிபடுங்க. தொழில் விருத்தி அடையும்முங்க.

உங்கள் ஜோதிடர் கவிஞர்
அ.பெர்னாட்ஷா, காரைக்குடி

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+