Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கார்த்திகை மாத ராசி பலன்கள் 2019 - தனுசு முதல் மீனம் வரை யாருக்கு அதிர்ஷ்டம்

கார்த்திகை மாதம் விருச்சிக மாதம். சூரியன் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார். இந்த மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களை பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கார்த்திகை மாதம் முதல் நாள் அன்று சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசியில் சஞ்சரிப்பார். துலாம் ராசியில் தனது பலத்தினை முழுமையாக இழந்து நீசம் என்ற நிலையில் சஞ்சரித்து வந்த சூரியன், தான் முழுமையாக வலிமை பெற தனது பயணத்தைத் துவக்கும் காலமே கார்த்திகை மாதம். நம் உடம்பில் உள்ள நாடி, நரம்புகள் எல்லாம் கார்த்திகை மாதத்தில்தான் சீராக இயங்கும் என்று சொல்வார்கள். இந்த காலத்தில் தியானத்தில் ஈடுபடுவோர்க்கு நிச்சயம் ஞானம் சித்தியாகும் என்பது அனுபவித்தவர்கள் கண்ட உண்மை. இந்த கார்த்திகை மாதத்தில் தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய நான்கு ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

கார்த்திகை மாதம் முழுவதும் பெரிய ஆலயங்கள் மட்டுமல்லாது, சிறு கோயில்களும் விளக்கொளியில் மின்னும். ஜோதி வழிபாட்டின் பெருமையை விளக்கும் கார்த்திகை மாதத்தில், மாதம் 30 நாட்களும் தீபதானம் செய்வது சிறப்பு. செல்வ வசதி உள்ளவர்கள், கோயில்கள், திருமடங்கள், வீடு, நான்கு தெருக்கள் கூடும் இடங்கள் மற்றும் வீதிகளில் விளக்குகளை ஏற்றி வைக்கலாம். முடியாதவர்கள் கார்த்திகை மாத பௌர்ணமி தொடங்கி முன்று நாட்களாவது, தங்கள் வீட்டில் வரிசையாகத் தீபமேற்ற வேண்டும்.

கார்த்திகை மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் விருச்சிகத்தில் சூரியன், சுக்கிரன், தனுசு ராசியில் சனி, கேது, குரு, துலாம் ராசியில் புதன், செவ்வாய் மிதுனத்தில் ராகு என கிரகங்கள் உள்ளன. கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பார்த்தால் கார்த்திகை 4ல் புதன் வக்ர முடிவு. கார்த்திகை 5 சுக்கிரன் தனுசு ராசிக்கு நகர்கிறார் 29ஆம் தேதி மகரம் ராசிக்கு நகர்கிறார். கார்த்திகை 19 புதன் விருச்சிக ராசிக்கு நகர்கிறார். ஆன்மிக அதிர்வலைகளால் நம் அகத்தினில் உள்ள அழுக்கினை அகற்றி நெஞ்சத்திற்கு நெகிழ்ச்சியைத் தரும் இந்த கார்த்திகை மாதத்தில் தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய நான்கு ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

தனுசு

தனுசு

குருவை ராசி அதிபதியாக கொண்ட தனுசு ராசிக்காரர்களே... உங்க ராசியில் குரு சனி கேது, சுக்கிரனும் கூடவே அமரப்போகிறார். விரைய ஸ்தானத்தில் சூரியன், புதன் சேரப்போகிறார். குருவின் பார்வை சந்தோஷத்தை தரும். திருமணம் கை கூடி வரப்போகிறது. புத்திரபாக்கியம் கிடைக்கும். திருமணத்திற்கு உண்டான யோகம் வந்து விட்டது. வரன் பார்க்கத் தொடங்குங்கள். காதல் திருமணம் என அவசரப்பட வேண்டாம். ஏழாம் வீட்டில் ராகு இருந்து மண வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட்டு வந்தது. குரு பார்வை களத்திர ஸ்தானத்தை பார்ப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். பிரிந்தவர்கள் கூட ஒன்று சேருவார்கள். உங்க தசாபுத்தி என்ன நடக்கிறது என்று பாருங்கள். சோம்பேறித்தனத்தை ஒத்திப்போடுங்கள் சுறுசுறுப்பாக மாறுங்கள். வேலை செய்யும் இடத்தில் உற்சாகமாக இருங்கள். நல்ல செய்தி தேடி வரும். ஏழரை சனியில் ஜென்ம சனி நடந்து வருகிறது. இன்னும் சில மாதங்களில் சனி பெயர்ச்சி நடைபெற உள்ளது தோஷங்கள் நீங்கும். சங்கடங்கள் நீங்க சிவ தரிசனம் பண்ணுங்க குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் நீங்கும்.

மகரம்

மகரம்

உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிக்கிறார். குரு, சனி, கேது விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றனர். அரசு தொடர்பான லாபம் கிடைக்கும் உயரதிகாரிகளின் உதவி கிடைக்கும். ஏழரை சனி அதுவே விரைய சனி விரைய குருவாக இருக்கின்றனர். பத்தாம் வீட்டில் செவ்வாய் ஆறாம் வீட்டில் ராகு சஞ்சரிக்கிறார். இப்போது எல்லா கிரகங்களும் ராகுவின் பிடியில் சிக்கி சர்ப்ப தோஷமாக உள்ளன. பணம் வரவு செலவில் கவனமாக இருங்க. செலவுகளை குறைங்க. வரவு அதிகமாகும். தேவையற்ற பொருட்களை வாங்காதீங்க. கடன் வாங்கி விரைய செலவு பண்ணாதீங்க. அவசியம் ஏற்பட்டால் மட்டுமே எதையும் வாங்குங்கள் இல்லாவிட்டால் கடனாளி ஆகி விடுவீர்கள். தங்க நகைகளை இரவல் கொடுக்காதீங்க, விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக பார்த்துக்கங்க இல்லாவிட்டால் விரையமாகிவிடும். குழந்தைகளை பத்திரமாக பார்த்துக்கங்க அவங்களால் மருத்துவ செலவுகள் வரலாம். வண்டி வாகனத்தில போகும் போது பத்திரமாக இருங்க. அலுவலகத்தில் மேலதிகாரிகளை பகைத்துக்கொள்ள வேண்டாம். யாரைப் பற்றியும் வம்பு பேசாதீங்க அது நல்லதில்லை. உங்களுக்கே வம்பாக முடியும். இந்த மாதம் பாதிப்புகள் குறைந்து நல்லது நடக்க சனிபகவானை விளக்கேற்றி வணங்குங்கள்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் தொழில் ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், பாக்ய ஸ்தானத்தில் செவ்வாய், லாப ஸ்தானத்தில் சனி, கேது, குரு, ஐந்தாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர். கிரகங்கள் நல்ல இடத்தில் சஞ்சரித்தாலும் தொழிலில் ஏற்பட்ட பிரச்சினைகள் உங்களுக்குத்தான் தெரியும். வருமானம் அதிகம் தரும் புதிய வேலைகள் கிடைக்கும். சனி கேதுவினால் ஏற்பட்டிருந்த சங்கடங்கள் நீங்கும். திருமண தடைகள் நீங்கும். சிலருக்கு திடீர் திருமணங்கள் நடைபெற வாய்ப்பு வரும். கஷ்டங்கள் காணாமல் போகும் காலம் வந்து விட்டது. இந்த மாதம் மட்டுமல்ல இனிவரும் மாதங்களும் நல்லதாகவே நடக்கும். வீடு மனை வாங்குவீர்கள். கடன் வாங்கியாவது வீடு கட்டுவீர்கள். சந்திராஷ்டம நாட்களில் ஜாக்கிரதையாக இருங்க. வண்டி வாகனத்தில் போகும் போது ஜாக்கிரதை நிதானம் தேவை. குழந்தை பாக்கியம் கிடைக்கும். இந்த மாதம் நீங்க வெள்ளிக்கிழமை அன்னைக்கு விளக்கேற்றி வழிபடுங்கள்.

மீனம்

மீனம்

சூரியன் 9ஆம் வீட்டில் இருக்கிறார். பத்தாம் வீட்டில் சனி, கேது, குரு, நான்காம் வீட்டில் ராகு, எட்டாம் வீட்டில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. தங்கம் வாங்கும் காலம் வருகிறது. புது வீடு கட்டும் யோகம் வருகிறது. கஷ்டங்கள் விலகும் காலம் என்றாலும் எட்டில் செவ்வாய் இருப்பதால் வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. வியாபாரம் சின்ன சிக்கலோடு போகும். பிசினஸ் சுமார்தான். சிலர் வேறு பிசினஸ் செய்வீர்கள். திருமணம் செய்வதற்கான காலம் வரும் வரை காத்திருங்கள். மீன ராசிக்காரர்கள் வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு இது நல்ல நேரம். புதிய வேலைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்க படிப்புக்கு தகுந்த புதிய வேலைகள் கிடைக்கும். புதிய நட்புகள் உறவுகள் மூலம் நல்லது நடக்கும். கடன் வாங்காதீங்க கேட்டாலும் கிடைக்காது. கூட்டு பிசினஸ் செய்பவர்களுக்கு இது நல்ல நேரம். கவலைகள் தீர திங்கட்கிழமைகளில் சிவபெருமானை வணங்குங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+