கேது பெயர்ச்சி 2023: ஓவரா ஆட்டம் போடக்கூடாது.. ஓய்ந்து போய் உட்கார வேண்டியதுதான் யார் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேது பகவான் ஞான காரகன். இந்த ராகு கேது பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு ராகுவினால் லாபமும் பண வருமானமும் கிடைத்தாலும் கேதுவினால் ஆன்மீக ஞானம் கிடைத்தாலும் சில பாதிப்புகளும் வரும். கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சியாகும் கேதுவினால் எந்தெந்த ராசிக்காரர்கள் என்ன பாதிப்பினை அடையப்போகிறார்கள் என்று பார்க்கலாம்.

ராகு பகவான் பணத்தையும் வருமானத்தையும் அள்ளிக்கொடுப்பார். அதை வைத்து ஓவராக ஆட்டம் போட்டால் கேது பகவான் தலையில் 'நங்' என்று குட்டி தட்டி வைப்பார். இந்த கேது பெயர்ச்சியால் ரிஷபம், கன்னி, மகரம் ஓவராக ஆட்டம் போடக்கூடாது என்று மீம்ஸ் ஆக பதிவிட்டுள்ளார் ஜோதிடர்.
அப்படி ஓவராக ஆட்டம் போட்டால் மன்னர் பரம்பரை என்று ஆடியவர்கள் கடைசியில் பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்றும் மீம்ஸ் ஆக பதிவிட்டுள்ளனர்.

Ketu Peyarchi Palan 2023: Rishabam, Kanni and Makaram Ketu Peyarchi Palan Astrology memes

ரிஷபம்: லாப ராகு பூர்வ புண்ணிய கேது. ரிஷப ராசிக்காரர்களுக்கு ராகு அள்ளிக்கொடுப்பார். 5ஆம் வீட்டில் கேது பயணம் செய்யப்போவதால் காரிய வெற்றியும் வாக்கு நாணயத்தையும் காப்பாற்றி கொள்ளலாம். புதிய முயற்சிகள் கை கூடும். புதிய மனிதர்களின் தொடர்பு அவர்களால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும். வார்த்தைகளால் வஞ்சித்து ஏமாற்றியவர்களின் முகத்தில் கரியை பூசி விடுவிர்கள். ஏமாற்றங்களால் ஊரை விட்டு ஓடி வீடுவோமா என்று நினைத்தவர்கள் சொந்த ஊரிலே தலை நிமிர்ந்து வாழலாம். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உருவாகும். செய்யும் தொழிலில் பார்க்கும் வேலையில் திருப்திகரமான போக்கும் மாற்றமும் உருவாகும். 5ல் கேது இருப்பதால் குலதெய்வ பிரார்த்தனை செய்யுங்கள்.

பொதுவாக 5 ஆம் வீட்டில் கேது மருத்துவம் மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் வெற்றியைத் தருவார். பங்குச்சந்தை, கேமிங் மற்றும் முதலீடுகள் மூலம் பணம் சம்பாதிக்கலாம். ஜாக்பாட் அல்லது லாட்டரியை வெல்லலாம். 5ம் வீட்டில் கேது சஞ்சரிப்பதால் திருமணம் மற்றும் குழந்தைப்பேறு தாமதமாகும்.
5 ஆம் பாவத்தில் கேது இந்த இடம் ஒரு நபரை ஒழுக்கக்கேடானவராகவும் மாற வாய்ப்பு உள்ளது. எனவே எதிர்பாலினத்தவர்கள் விசயத்தில் கவனமாக இருப்பது நல்லது. தண்ணீர் மற்றும் சாகச விளையாட்டுகளில் இருந்து விலகி இருங்கள், சில விபத்துக்கள் அல்லது நீரில் மூழ்கும் வாய்ப்புகள் இருக்கலாம். கருச்சிதைவுகளால் பாதிக்கப்படலாம். ஒரு நபர் வயிறு, கல்லீரல் மற்றும் செரிமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். கீழே விழுந்து காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது

Ketu Peyarchi Palan 2023: Rishabam, Kanni and Makaram Ketu Peyarchi Palan Astrology memes

கன்னி : ஜென்ம ராசியில் கேது பயணம் செய்வது கௌரவம் புகழ் கீர்த்தி அந்தஸ்து தரும். கேது பகவானால் உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். உங்களுடைய வாழ்க்கை உச்சமடையப்போகிறது. கேது உங்களுடைய ராசி நாதன் போல செயல்படப்போகிறார். உங்களுக்கு வெற்றிகளை தருவார். மனதில் சந்தோஷத்தையும் சிந்தனையில் தெளிவையும் தருவார் ஞானகாரகன் கேது. ராசியில் கேது அமர்வதால் கௌரவம் புகழ் கீர்த்தி அந்தஸ்து அதிகரிக்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் முன்னேற்றம் வரும். வருமானம் திருப்தி தரும். உடல் நலத்தில் கவனம் தேவை. வெளி உணவுகளைத் தவிர்த்து விடுங்கள் சில நேரங்களில் வருமானம் அதிகரித்தாலும் சேமிக்க முடியாமல் திணறுவீர்கள். பண விசயங்களில் கவனம் தேவைப்படும்.

மகரம்: கேது பகவான் 9ஆம் வீட்டில் பயணம் செய்யப்போவதால் உங்களுக்கு பொற்காலம் ஆரம்பமாகப்போகிறது. கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி யாரை எல்லாம் தேடி தேடி உதவி கேட்டீர்களோ அவர்கள் எல்லாம் தானாக நாடி வந்து உதவி செய்வார்கள். கண்மூடித்தனமாக எதையும் செய்யாமல் யோசித்து செய்வது நல்லது. இருக்கும் இடத்தை விட்டு வெளியேற வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் தாமதப்படும். வீண் அலைச்சலும், பண விரயமும் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். குடும்பத்தில் பிரச்சினை ஏற்படலாம். பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. நண்பர்கள் உறவினர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. தாய், தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+