கிருஷ்ண ஜெயந்தி கோலாகல கொண்டாட்டம்.. சீடை, முறுக்கு பலகாரங்கள்.. உற்சாகத்தில் சின்னக்கண்ணன்கள்
சென்னை: தமிழகம் முழுவதும் கோயில்கள், இல்லங்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஒன் இந்தியா தமிழ் இணையதள வாசகர்களின் வீடுகளிலும் பாத கோலம் வரைந்து பலகாரங்களை படைத்து சின்னக்கண்ணனையும் ராதையையும் வரவேற்றனர்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்தநாள், கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. தமிழகம் முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை மயிலாப்பூரில் உள்ள நந்தலாலா கோயிலில் கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடத்தப்பட்டன. கோயில் வளாகத்தில் உள்ள பிருந்தாவனத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரக் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

சென்னை கோபாலபுரத்தில் உள்ள வேணுகோபால சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கிழக்கு கடற்கரை சாலை அக்கரையில் உள்ள இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. காலை 8.30 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், மதியம் 3 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் ஸ்ரீராதாகிருஷ்ண தரிசனம், ஆரத்தி நடைபெற்றது.
தொடர்ந்து 24 மணி நேரமும் பஜனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இங்கு கிருஷ்ணர் ஊஞ்சலில் ஆடும் காட்சி தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தது. இதேபோல, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து கிருஷ்ணர் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
வீடுகளிலும் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. வீட்டுக்குள் கிருஷ்ணன் நடந்து வருவதுபோல கோலமிட்டும், சீடை, முறுக்கு, அப்பம் உள்ளிட்ட பலகாரங்களோடு அவல், வெண்ணெய் உள்ளிட்டவற்றை நிவேதனம் செய்தும் வழிபட்டனர். கிருஷ்ணர், ராதை போல தங்கள் குழந்தைகளுக்கு வேடமிட்டும் மகிழ்ந்தனர். பல்வேறு கோயில்கள், வீடுகளில் இன்றும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது. ஒன் இந்தியா வாசகர்கள் தங்களின் குழந்தைகளுக்கு கிருஷ்ணன் ராதை வேடம் போட்டு அழகு பார்த்தனர். அந்த புகைப்படங்களை உங்கள் பார்வைக்கு வழங்கியுள்ளோம். வாசகர்களே வாழ்த்துங்கள்.
V. தானேஷ்வரன்

என். சுடர்நிதி

என். யுகின்நிதி

கண்ணன்

கவின் மித்ரன், சங்க மித்ரா

கிருஷ்ணன், ராதை

சாய்ஹரினி

திவ்ய சுதன்

தீரன், துருவன்

தேவசேனா

நிதின்

ராதா கிருஷ்ணன்

ராதை

ராதை

ரோஹித்சவா

வி. தனேஷ்வர்

வி.என் சாத்விக்

ஷர்வின்













Click it and Unblock the Notifications