குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி.. சந்தான கோபால கிருஷ்ணனை எப்படி வணங்கலாம்?
சென்னை: கிருஷ்ண ஜெயந்தி நாளில் விரதமிருந்து பூஜை செய்தால் விரைவில் உங்கள் வீட்டிலும் குழந்தை இல்லாதவர்களுக்கு கண்ணன் பிறப்பான் என்பது நம்பிக்கை. கிருஷ்ண ஜெயந்தி தினமான இன்று எந்த நேரத்தில் பூஜை செய்வது எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த தினத்தை ஸ்ரீ ஜெயந்தி என்றும், கோகுலாஷ்டமி என்றும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 5250வது ஆண்டு பிறந்தநாளை கொண்டாடுகின்றோம். கிருஷ்ணர் தனக்காக இல்லாமல் பிறருக்காக வாழ்ந்தவர். அதனால்தான் இவரை "கண்ணா'' ''முகுந்தா'' என்று பல பெயர்களில் அழைக்கிறோம்.
ஆர் அஞ்சனா 2, வில்லிவாக்கம்

கண்ணைப் போல காப்பவன் என்றும், முகுந்தா என்றால் வாழ்வதற்கு இடம் அளித்து, முக்தி அளிப்பவன் என்றும் நம்புகிறோம். கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் பகவான் கிருஷ்ணர் நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமியின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. அதனால் தான் கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து, அரிசி மாவால் கோலமிட்டு, மாவிலை தோரணங்களால் அலங்கரிகிறோம். வாசலில் தொடங்கி பூஜை அரை வரை குழந்தையின் கால் தடங்களை அரிசி மாவால் பதிக்கிறோம். ஆலிலை கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களை அடிமேல் அடி வைத்து வீட்டுக்குள் தத்தித்தத்தி நடந்து வருவதாக ஐதீகம்.
எஸ்.. ஆயுஸ்மான்

இன்று மாலை 3.37 மணிக்கு பிறகு தான் அஷ்டமி திதி தொடங்கி செப்டம்பர் 7 ஆம் தேதி அதிகாலை 4.14 மணிக்கு முடிவடைகிறது. அதே போல் இன்று மாலை 3.25 மணிக்கு பிறகே ரோகிணி நட்சத்திரம் தொடங்குகிறது. அதோடு செப்டம்பர் 7 ஆம் தேதி காலை 10.25 மணிக்கு முடிவடைகிறது. ஆனால் பகவான் கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்தார் என்பதால் அவரை வழிபட இரவு 11:57 மணி முதல் நள்ளிரவு 12.42 வரை வரை உகந்த நேரமாகும்.
எஸ்.பி சனா மதுரை

அதேபோல் கிருஷ்ண ஜெயந்தி தினமான இன்று பூஜை செய்வதற்கு மாலை 4.45 மணி முதல் இரவு 7.30 மணி வரை செய்யலாம். கிருஷ்ண ஜெயந்தி நாளில் விரதமிருந்து பூஜை செய்தால் விரைவில் உங்கள் வீட்டிலும் குழந்தை இல்லாதவர்களுக்கு கண்ணன் பிறப்பான் என்பது ஐதீகமாக நம்பப்படுகிறது. இந்த நாளில் கிருஷ்ணரின் சிலை மற்றும் படத்திற்கு பழங்கள், மலர்கள், நெய்யினால் செய்யப்பட்ட பலகாரங்கள், வெண்ணெய் ஆகியவை படைத்து வழிபடலாம்.
கிருஷ்ணன்

நம்முடைய வீட்டிற்குள் கிருஷ்ணர் குழந்தையாக தவழ்ந்து வீட்டிற்கு வருவதை குறிக்கும் என்பதால், ஆண் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமும், பெண் குழந்தைகளுக்கு ராதை வேடமும் போட்டு அழகு பார்ப்பார்கள். கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்யும் போது பக்கத்து வீட்டு சிறுவர் சிறுமிகளை பூஜைக்கு அழைத்து அவர்களுக்கு கண்ணனின் லீலைகளை சொல்லும் கதைகளை கூற வேண்டும்.
தான்யா

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இன்றைய தினம் வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் சந்தான கோபால கிருஷ்ண யாகத்துடன் ஸ்ரீ நவனீத கிருஷ்ணருக்கு சிறப்பு திருமஞ்சனமும் ஆராதனைகளும் நடைபெற உள்ளது. இன்றைய நாளில் பகவான் கிருஷ்ணரை வேண்டி நடைபெறும் யாக பூஜைகளில் பங்கேற்று கண்ணனை வழிபட குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகிழ்ச்சி தங்கும், அகந்தை அகலும், மூர்க்க குணம் குழந்தைக்கு ஏற்படாது.
இளைஞர்களுக்கு அரசியல் ஞானம் உண்டாகும், நிர்வாக திறன் அதிகரிக்கும், மாமனார் வழியில் சொத்துக்கள் கிடைக்கும், திருமணத் தடைகள் அகலும், செல்வம் பெருகும், வயல்களில் விளைச்சல் அதிகரிக்கும், ஆடு, மாடுகள் பல்கி பெருகும், கடன் தீரும், பகைமை ஒழியும், நண்பர்கள் கூட்டு தொழில் செய்தால் வெற்றி பெறுவார்கள், புகழ் கூடும், அமைதி நிலவும், ஆற்றல் பெருகும், வறுமை இல்லா வாழ்வு அமையும். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஸ்ரீ ஜெயந்தி நாளில் கண்ணனை வழிபட்டு நாம் கவலைகள் மறந்திருப்போம்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications