Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரோதி தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் பொன்னான பார்வை.. குரோதி ஆண்டில் குபேர யோகம் யாருக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிகழும் மங்களகரமான குரோதி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி பிறக்கப்போகிறது. சித்திரை மாதத்தில் குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்கிறார். அதிசார சனியால் குரோதி ஆண்டின் இறுதியில் ராகு சனி சேர்க்கை ஏற்படப்போகிறது. குரோதி ஆண்டில் கிரகங்களின் மாற்றங்களால் கன்னி ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

குரோதி கன்னி ராசி: சித்திரை மாதம் 18ஆம் தேதி குரு பெயர்ச்சி நிகழப்போகிறது. குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு சென்று அமரப்போகிறார். கன்னி ராசிக்காரர்களுக்கு சித்திரை முதல் பாக்ய ஸ்தான குருவாக 9ஆம் வீட்டில் வந்து அமரப்போகிறார். குரோதி ஆண்டில் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு உங்கள் ராசியின் மீது விழப்போகிறது. சனிபகவானும் ஆறாம் வீட்டில் அமர்ந்து பயணம் செய்வது யோகத்தை தரப்போகிறது.

 Krodhi Tamil New year palan 2024-2025 prediction for Kanni Rasi

குரு பெயர்ச்சி 2024: கன்னி ராசிக்காரர்களுக்கு சித்திரை மாதம் முதல் ஒன்பதாம் வீட்டில் வந்து அமரப்போகும் குரு பகவான் பாக்யங்களை அள்ளித்தரப்போகிறார். பாக்ய ஸ்தான குருவினால் அனைத்து பாக்கியங்களும் கிடைக்கும். குருவின் பார்வையால் செய்யும் தொழிலில் முன்னேற்றம் மற்றும் பதவி உயர்வு கிடைக்கும். சமூகத்தில் நல்ல மரியாதை மற்றும் புகழ் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

குரு பகவானின் பார்வை உங்க ராசியின் மீது விழுவதோடு மட்டுமல்லாது ராசிக்கு முன்று ஐந்தாம் வீடுகளின் மீது விழுகிறது. தைரியம் தன்னம்பிக்கை கூடும். இளைய சகோதரர்களின் உதவி கிடைக்கும். குழந்தைகளினால் நன்மைகளும் பூர்வ புண்ணிய சொத்துக்களினால் வருமானமும் கிடைக்கும். குரோதி ஆண்டில் சந்தோஷங்கள் நிறைந்த குரு பெயர்ச்சியாக அமையப்போகிறது. உங்களுக்கு குபேர யோகம் தேடி வரப்போகிறது. அனுபவிக்கத் தயாராகுங்கள்.

சனி பகவான்: ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சனி பகவான் ஆண்டு முழுவதும் பயணம் செய்கிறார். குடும்ப பிரச்சினை, கடன் பிரச்சினை என கஷ்டங்களை பொருத்துக்கொண்டு இருந்தீர்கள். உங்களுக்கு இனி எல்லாம் சுகமே என்பது போல சனி பகவான் நல்லதை தரப்போகிறார். எதிரிகள் பிரச்சினை முடிவுக்கு வரப்போகிறது. சித்திரை முதல் நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்.

கை நிறைய சம்பளத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். உங்களின் வருமானம் இரட்டிப்பாகும். கடன்களை அடைபடுவதற்கான நேரம் வந்து விட்டது. சொந்த தொழில் செய்பவர்கள் தொழிலை விரிவுபடுத்தலாம். ஆண்டின் இறுதியில் சனி பகவான் 7ஆம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடையப்போவதால் கவலை வேண்டாம். கண்டச்சனி என்றாலும் ராகு உடன் சேரும் சனி யோகத்தை கொடுப்பார்.

ராகு கேது: குரோதி ஆண்டு முழுவதும் ராகு உங்கள் ராசிக்கு 7ஆம் வீடான களத்திர ஸ்தானத்தில் பயணம் செய்வார். கேது உங்கள் ராசியில் ஆண்டு முழுவதும் பயணம் செய்வார். உங்கள் ராசியில் உள்ள கேதுவின் மீது குரு பகவானின் பொன்னான பார்வை கிடைப்பதால் கோடீஸ்வர யோகம் தேடி வரும். களத்திரம் கூட்டு தொழில் ஸ்தானம் நண்பர்கள் ஸ்தானத்தில் ராகு பயணம் செய்வதால் உங்களுக்கு செய்யும் வியாபாரம் தொழிலில் வருமானம் அதிகரிக்கும்.

கடன் வாங்கி நொந்து போனவர்களுக்கு புதிய நட்பு கூட்டு தொழில் உதவி கிடைக்கும். கணவன் மனைவி பிரச்சினை நீங்கி ஓன்று சேரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். சண்டை சச்சரவு ஏற்பட்டு கோர்ட்டு விவாகரத்து என்று அலைந்தவர்கள் சமாதானம் அடையலாம்.

ஆண்டு முழுவதும் கன்னி ராசியில் கேது பயணம் செய்வதால் கௌரவம் புகழ் கீர்த்தி அந்தஸ்து தரும். கேதுவுக்கு குரு பார்வை கிடைப்பதால் கஷ்ட நஷ்டங்களிலிருந்து விடிவு விமோசனம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு குரோதி ஆண்டில் நல்ல வேலை கிடைக்கும். பிள்ளைகளின் உயர்கல்விக்காக கடன் வாங்குவீர்கள். ராகு கேது பெயர்ச்சியால் மாற்றமும் முன்னேற்றமும் வரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+