Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரோதி தமிழ் புத்தாண்டு பலன்: குரோதி ஆண்டில் குரு பார்வை.. குடும்ப சனி.. அதிரடி மாற்றம் யாருக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிகழும் மங்களகரமான குரோதி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி பிறக்கப்போகிறது. சித்திரை மாதத்தில் குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்கிறார். குரோதி ஆண்டில் கிரகங்களின் மாற்றங்களால் மகர ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

குரோதி மகரம் ராசி: மே 1ஆம் தேதி சித்திரை மாதம் 18ஆம் நாள் குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு சென்று அமரப்போகிறார். மகர ராசிக்காரர்களுக்கு ஐந்தாம் வீட்டில் அமர்ந்து பூர்வ புண்ணிய ஸ்தான குருவாக பயணம் செய்யப்போகிறார் குரு பகவான். குரோதி ஆண்டில் குருவின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுகிறது. 9ஆம் வீடு,11ஆம் வீடுகளின் மீது குரு பகவானின் பார்வை விழுகிறது.

Krodhi Tamil New year palan 2024-2025 prediction for Makaram Rasi

குரு பெயர்ச்சி 2024: குரோதி ஆண்டின் ஆரம்பத்திலேயே குரு பகவான் ஜந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரப்போகிறார். புத்திர பாக்கியம் தெய்வ அருள் புண்ணியங்கள் காதல் என்ற ஸ்தானத்திற்கு வருகிறார். குலதெய்வ அருள் கிடைக்கும். குரோதி ஆண்டில் மகர ராசிக்காரர்களுக்கு கெட்டிமேளம் கொட்டும். ராசியை 9 ஆம் பார்வையாக குரு பார்ப்பதால் புகழ் கீர்த்தி அந்தஸ்து பெறலாம்.வாடகை வீட்டில் குடி இருப்பவர்கள் புது வீடு கட்டி குடி போகலாம். பாதியிலே நின்று போன வீட்டு வேலைகள் பூர்த்தியாகி சுபகாரியம் நடக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்.

குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 9ஆம் வீட்டின் மீது விழுவதால் கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல நினைத்த காரியம் எல்லாம் உடனடியாக நிறைவேறும். தடைகளை தாண்டி சுபகாரியம் நடைபெறும். பிள்ளைகள் விருப்பப்படி படிப்பும் அமையும். வசதி வாய்ப்பு பெருகி நிம்மதியான சூழ்நிலை கூடும். எதிர்பார்த்த பதவி உயர்வு இடமாற்றம். புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வாய்ப்புகள் கை கூடிவரும்.

திருமணமாகி நீண்ட நாட்களாக புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். லாப ஸ்தானமான 11ஆம் பாவத்தின் மீது குரு பார்வை கிடைப்பதால் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பூர்வீக சொத்துகள் மூலம் அனுகூலம் ஆதாயம் பெறலாம். சொத்து விசயத்தில் கடன் பட்டவர்கள் கடனை அடைத்து நிம்மதி பெருமூச்சு விடலாம். நீங்கள் பார்த்து கொண்டு இருக்கும் வேலையை விட்டு வேறு வேலை தேடாதீர்கள். நல்ல வேலை கிடைத்தவுடன் பழைய வேலையை விடுவது சிறப்பு.

சனி பெயர்ச்சி: சனி பகவான் உங்கள் ராசிக்கு அதிபதி. ஏழரை சனியில் பாத சனி காலமாகும். இன்னும் ஓராண்டு காலத்திற்கு குடும்ப ஸ்தானத்தில் சனி இருப்பதால் வாக்கிலும் நாக்கிலும் கவனம் தேவை. பேசும் வார்த்தைகளில் நிதானம் அவசியம். தன வருமானமும் லாபமும் கிடைக்கும். சனியின் பார்வை ராசிக்கு நான்காம் வீடு, எட்டாம் வீடு,பதினொன்றாம் வீடுகளின் மீது விழுவதால் கஷ்டங்களை எளிதாக கடந்து விடலாம். புது தெம்பு வந்து விடும். 2025ஆம் ஆண்டு மார்ச் வரைக்கும் சனி பகவான் பாத சனியாக தொடர்வதால் கொஞ்சம் கவனம் தேவை. குரோதி ஆண்டின் இறுதியில் ஏழரை சனி முடிவுக்கு வரப்போவதால் தெம்பும் தைரியமும் அதிகரிக்கும்.

ராகு கேது யோகம்: குரோதி ஆண்டு முழுவதும் ராகு மூன்றாம் வீட்டிலும் கேது பாக்ய ஸ்தானமான 9ஆம் வீட்டிலும் பயணம் செய்கின்றனர். குரோதி ஆண்டு முதல் உங்களுக்கு செழிப்பான வாழ்க்கை அமையும். புது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். தேவைகள் பூர்த்தியாகும் உங்களுடைய நீண்ட கால கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் நீண்ட நாள் இருந்த பிரச்சனைகள் தீரும். பாக்ய ஸ்தானத்தில் மோட்சத்தை கொடுக்க கூடிய கேது பயணம் செய்வதால் இதுவரை தடைபட்டு வந்த காரியங்கள் எல்லாம் இனி தடையில்லாமல் நடைபெறும். மாணவர்களுக்கு படித்த படிப்புக்கு ஏற்ற நல்ல வேலையும் கை நிறைய சம்பளமும் கிடைக்கும். குரோதி ஆண்டில் மகர ராசிக்காரர்களுக்கு அற்புதங்கள் ஏற்படப்போகிறது. அனுபவிக்கத் தயாராகுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+