குரோதி தமிழ் புத்தாண்டு பலன்: குரோதி ஆண்டில் விபரீத ராஜயோகம்.. சனி தரும் சந்தோஷம் யாருக்கு?
சென்னை: நிகழும் மங்களகரமான குரோதி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி பிறக்கப்போகிறது. சித்திரை மாதத்தில் குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்கிறார். அதிசார சனியால் குரோதி ஆண்டின் இறுதியில் ராகு சனி சேர்க்கை ஏற்படப்போகிறது. குரோதி ஆண்டில் கிரகங்களின் மாற்றங்களால் துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
குரோதி துலாம் ராசி: மே 1ஆம் தேதி சித்திரை மாதம் 18ஆம் நாள் குரு பெயர்ச்சி நிகழப்போகிறது. குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு சென்று அமரப்போகிறார். துலாம் ராசிக்காரர்களுக்கு சித்திரை முதல் எட்டாம் வீடான அஸ்டம ஸ்தான குருவாக பயணம் செய்யப்போகிறார். குரோதி ஆண்டில் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 2,4,12ஆம் வீடுகளின் மீது விழுகிறது.

குரு பெயர்ச்சி 2024: சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களுக்கு மே மாதத்திற்குப் பிறகு குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்யப்போவதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம். சுப விரைய செலவுகள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக வைத்துக்கொள்ளுங்கள். வேலை விசயத்தில் சில பிரச்சினைகள் வரலாம் பொறுப்புடன் நடந்து கொள்வது அவசியம். குருவின் அனுகிரகத்தினால் பாதிப்புகள் நீங்கும்.
ராஜயோகம்: குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்வது துலாம் ராசிக்கு ராஜயோகம்தான். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்பது போல குரு எட்டாம் வீட்டில் மறைவது ராஜயோகத்தை தரும். உங்கள் ராசிக்கு 12 ஆம் பாவத்தை குரு பார்க்க போவதால் இது வரை தடைப்பட்ட காரியங்கள் விரைந்து நடைபெறும். தன ஸ்தானத்தை குரு பார்ப்பதால் பொருளாதார நிலை உயரும் பண வருமானம் அதிகரிக்கும்.
உறவுகள் பலப்படும்: சுக ஸ்தானமான 4வது வீட்டினை குரு பகவான் பார்வையிடப்போவதால் வருமானம் அதிகரிக்கும் சேமிப்புகள் கூடும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் உள்ள சிக்கல்கள் மறையும். வரவேண்டிய பணவரவுகள் கைக்கு வரும். குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மனகசப்புகள் அகலும்.கணவன் மனைவி உறவு பலப்படும். சிலர் அசையா சொத்து வாங்குவார்கள்.புது வீடு கட்டி குடிபோவார்கள். புது முயற்சிகள் கை கூடும்.தொழில் லாபம் கூடும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும்.
புண்ணிய சனி: சனி பகவான் புண்ணிய சனியாக பயணம் செய்யப்போகிறார். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் நம்பிக்கையுடன் முயற்சிக்க எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். வண்டி வாகனங்கள் வீடு, நிலம், வாங்க வாய்ப்புகள் அமையும். தடைபட்டு வந்த சுபகாரியங்கள் இனிதே நடக்கும். பணவரவு அதிகரிக்கும், குடும்பத்தில் உற்சாகம் அதிகரிக்கும், புண்ணிய சனி காலம் என்பதால் பிள்ளைகள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.
எதிரிகள் தொல்லை நீங்கும்: குரோதி ஆண்டின் இறுதியில் சனி பகவான் ஆறாம் வீட்டிற்கு வந்து அமரப்போகிறார். ஆறாம் வீட்டில் உள்ள ராகு உடன் சனி பயணம் செய்யும் காலத்தில் எதிரிகள் தொல்லை நீங்கும். பல வழிகளிலும் பணம் வரும். விபரீத ராஜயோகம் கிடைக்கப்போகிறது. கோடி கோடியாக செல்வம் வீடு தேடி வரும்.
ராகு கேது: குரோதி ஆண்டு முழுவதும் ராகு பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டிலும் கேது பகவான் 12ஆம் வீடான விரைய ஸ்தானத்திலும் பயணம் செய்யப்போகிறார். கடன்கள் அடைப்படும் தீராத நோய்கள் தீரும். படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு குரோதி ஆண்டில் கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை அமையும். பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும் வீடு மனை வாங்கும் யோகம் கைகூடி வரும். உங்களின் நீண்ட நாள் கடன்கள் அடைபடும். வெளிநாடு செல்லும் யோகம் கைகூடி வரப்போகிறது. நினைத்த காரியங்களை நிறைவேற்றும் ஆண்டாக குரோதி ஆண்டு அமைந்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: ராஜாபகவத் போல மாறும் விருச்சிக ராசி.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கோடீஸ்வர யோகம் பெறும் சிம்ம ராசி.. அள்ளிக் கொடுக்கும் குரு, கேது பகவான் -
தமிழ் புத்தாண்டு பலன்: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டமும், ஆபத்தும் சேர்ந்து வருது.. இந்த விஷயத்தில் கவனம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது












Click it and Unblock the Notifications