Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரோதி தமிழ் புத்தாண்டு பலன்: குரு பார்வை.. சனியின் சச யோகம்.. குரோதியில் கோடீஸ்வர யோகம் யாருக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிகழும் மங்களகரமான குரோதி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி பிறக்கப்போகிறது. சித்திரை மாதத்தில் குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்கிறார். குரோதி ஆண்டில் கிரகங்களின் மாற்றங்களால் விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

குரோதி விருச்சிக ராசி: மே 1ஆம் தேதி சித்திரை மாதம் 18ஆம் நாள் குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு சென்று அமரப்போகிறார். விருச்சிக ராசிக்காரர்களுக்கு களத்திர ஸ்தான குரு. குரோதி ஆண்டில் குருவின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுகிறது. லாப ஸ்தானம், தைரிய ஸ்தானங்களின் மீது குருவின் பார்வை விழுகிறது.

Krodhi Tamil New year palan 2024-2025 prediction for Viruchigam Rasi

குரு பெயர்ச்சி 2024: குருபகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் பாவமான திருமணம், கூட்டு தொழில், வாழ்க்கை துணை, வெளிநாட்டு வாழ்க்கை, காதல் ஆகிய காரகங்களைக் குறிப்பிடும் ஸ்தானத்தில் பயணம் செய்யப்போவதால் வேலை, தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பொருளாதார நிலையில் இருந்த முட்டுகட்டைகள் அகலும்.வரவேண்டிய பாக்கிகள் வரும் கடன்கள் அடைப்படும்.

குரு பார்வை: குரு ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்க்கிறார். உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் நனவாகும் நேரம் வந்து விட்டது. குரு தன்னுடைய ஜந்தாம் பார்வையால் லாப ஸ்தானத்தை பார்வையிடுவதால் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் தீரும்.
வெளிநாடு தொடர்புடைய வேலைகள் அமையும் சம்பாதிக்கும் பணம் சொத்து வசதி வாய்ப்பு பெருக்கும்.

குரு ஏழாம் வீட்டில் அமர்ந்தாலும் உங்களுக்கு கேந்திராதிபதி தோஷத்தை கொடுக்க மாட்டார் சுபகாரியம் திருமணம் கூட்டு தொழில் போன்ற நன்மைகளை செய்வார். முயற்சி ஸ்தானத்தை குரு பார்ப்பதால் பொருளாதார நிலையில் இருந்த முட்டுகட்டைகள் அகலும். நீண்ட நாட்களாக வரவேண்டிய பாக்கிகள் வரும் கடன்கள் அடைப்படும். வருமானத்தால் சேமிப்பு உயரும்.

அர்த்தாஷ்டம சனி: உங்கள் ராசிக்கு மூன்று மற்றும் நான்காம் வீட்டிற்கு அதிபதியான சனிபகவான் 4ஆம் வீட்டில் ஆட்சி பெற்று பயணம் செய்வதால் சச மகா யோகம் கைகூடி வரப்போகிறது. வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு குரோதி ஆண்டில் வேலைக்கான வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். சுக ஸ்தானத்தில் பயணம் செய்யும் சனிபகவான் உங்கள் ராசியை பத்தாம் பார்வையாக பார்க்கிறார். மூன்றாம் பார்வையாக உங்கள் ராசிக்கு ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தை பார்க்கிறார், ஏழாம் பார்வையால் உங்களின் தொழில் ஸ்தானத்தை பார்வையிடுகிறார்.

வெளிநாடு யோகம்: வேலை காரணமாக சிலருக்கு இடமாற்றம் கிடைக்கும், வெளியூர், வெளிநாடு செல்லவேண்டியிருக்கும். பதவி உயர்வு நீண்ட இழுபறிக்குப் பின்னர் கிடைக்கும். வெளிநாடு செல்லும் யோகத்தை சனி பகவான் தரப்போகிறார். இதுவரை இருந்து வந்த தேவையற்ற அலைச்சல்கள் குறைந்து ஒரு இடத்தில் நிலையாக இருக்க வாய்ப்பு அமையும். இடம் வாங்குவதற்கு வீடு வாங்குவதற்கு வண்டி வாகனம் வாங்குவதற்கு வாய்ப்புகள் தானாக தேடி வந்து சேரும்.

ராகு கேது பயணம்: குரோதி ஆண்டில் உங்களுக்கு நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கப்போகிறது. உங்களுக்கு விடிவு காலம் வந்து விட்டது. தொட்டது துலங்கும். தேவையற்ற செலவுகள் குறையும் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும் நிலவும். கருத்து வேற்றுமையால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவார்கள். கேது பகவான் தொழிலில் முன்னேற்றத்தையும் வீடு மனை வாங்கும் யோகத்தையும் கொடுப்பார். தோஷங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கப்போகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+