குரோதி தமிழ் புது வருட ராசி பலன்: குபேர யோகம் தேடி வரும்.. வெளி நாட்டு வேலை வாய்ப்பு யாருக்கு?
சென்னை: நிகழும் மங்களகரமான குரோதி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிறக்கிறது. தமிழ் புத்தாண்டு பலரது வாழ்க்கையில் புதுவித மாற்றங்களை ஏற்படுத்தும். சுப கிரகமான குரு பகவான் ஆண்டின் துவக்கத்தில் சித்திரை 18ஆம் தேதி ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். சனி பகவான் ஆண்டின் இறுதியில் பங்குனி மாதம் 15ஆம் தேதி மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவார். ராகு மீன ராசியிலும் கேது கன்னி ராசியிலும் ஆண்டு முழுவதும் பயணம் செய்வார்கள். மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த குரோதி புத்தாண்டு எப்படி இருக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
மேஷம்: குரோதி தமிழ் புத்தாண்டு செல்வ வளம் பெருகப்போகிறது. குருவின் இடப்பெயர்ச்சி வெளிநாட்டு யோகத்தை தரப்போகிறது. தந்தை வழியில் பூர்வீக சொத்துக்கள் கிடைக்க வழிவகை செய்யப்போகிறது. புது வேலை சிலருக்கு வேலையில் புரமோசன் என உங்களை உற்சாகமடையச் செய்யப்போகிறது. பெண்களுக்கு மன மகிழ்ச்சி அதிகரிக்கும் வகையில் நல்லதொரு சம்பவங்கள் நிகழப்போகிறது. பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

குரு பகவான் பயணம்: குடும்ப ஸ்தான குருவால் தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். அரசியல்வாதிகளுக்கு நல்லதொரு முன்னேற்றம் உண்டாகும். பண வருமானம் அற்புதமாக இருக்கும். நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும். மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் உற்சாகமாக இருக்கும். குருவின் அருள் கூடி வரப்போகிறது. கடன் பிரச்சினை நீங்கப்போகிறது. வெளிநாடு சுற்றுலா சென்று வருவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டு.
வேலை வாய்ப்பு: படித்து முடித்து விட்டு வெளிநாட்டு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வைகாசி மாதத்தில் வெளிநாட்டில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். வருமானம் பல மடங்காக உயரும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கடனான கொடுத்த பணம் திரும்ப கைக்கு கிடைக்கும். குரு பகவானின் பார்வை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.
குரு பார்வை: தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் பயணம் செய்யும் குருவின் பார்வை ஆறாம் வீட்டில் உள்ள கேதுவின் மீது விழுகிறது. நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும். புரட்டாசி மாதத்தில் குரு பகவான் வக்ரமடையும் போது பண விசயங்களில் கவனமாக இருக்க வேண்டும். ஜென்ம குருவின் இடம் மாற்றம் குழப்பத்தை நீக்கும் மனக்கவலைகள் மறையும். குரோதி ஆண்டில் சுப விரைய செலவுகள் அதிகரிக்கும்.
லாப சனி டூ ஏழரை சனி: சனி பகவான் 11 மாதங்களுக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்வது சிறப்பு. தொட்டதெல்லாம் துலங்கும். சனி பகவான் பார்வை உங்கள் ராசியின் மீது விழுவதால் செய்யும் செயல்களில் நிதானம் தேவை. தொழில் வியாபாரத்தில் லாபம் பல மடங்கு அதிகரிக்கும். குரோதி ஆண்டின் இறுதியில் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ம் தேதி பங்குனி மாதம் 15ஆம் தேதி முதல் ஏழரை சனி ஆரம்பமாகப்போகிறது. சம்பாதித்த பணத்தை கவனமாக செலவு செய்ய வேண்டும். தொழில் முதலீடுகளில் கவனம் தேவை. பணத்தை யாருக்கும் கடனாகக் கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள்.
ராகு கேது பயணம்: குரோதி ஆண்டு முழுவதும் ராகு பகவான் விரைய ஸ்தானத்திலும் கேது பகவான் 6ஆம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்திலும் பயணம் செய்கின்றனர். உங்களுக்கு விபரீத ராஜயோகம் கிடைக்கப்போகிறது. ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். நினைத்த காரியம் நிறைவேறும். ஆறாம் வீட்டில் உள்ள கேதுவின் மீது குருவின் பார்வை விழுவதார் நோய்கள் நீங்கும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். பவுர்ணமி நாட்களில் குல தெய்வ வழிபாடு செய்வதால் வெற்றிகள் தேடி வரும். மொத்தத்தில் குரோதி தமிழ் புது வருடம் குபேர யோகத்தை தரக்கூடிய ஆண்டாக அமைந்துள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications