Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அக்டோபர் மாத ராசி பலன்கள் 2019: கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு குருவினால் நன்மை

Subscribe to Oneindia Tamil

சென்னை: அக்டோபர் மாதம் அற்புதமான மாதம் கன்னி மாதம் பாதி நாட்களும், துலாம் மாதம் பாதி நாட்களும் இணைந்தது. புரட்டாசி மாதம் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் சூரியன் ஐப்பசியில் துலாம் ராசிக்கு மாறுகிறார். மாத துவக்கத்தில் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் சூரியன், சுக்கிரன், பிற்பகுதியில் துலாம் ராசிக்கு நகர்கின்றனர். துலாம் ராசியில் சஞ்சரிக்கும் புதன் மாத இறுதியில் விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ச்சியடைகின்றார். கூடவே சுக்கிரனும் விருச்சிகத்தில் உள்ள குரு உடன் இணைகிறார். இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சியால் கும்பம் மற்றும் மீனம் ராசிக்காரர்களுக்கு பலன்கள், பரிகாரங்கள் எப்படி என்று பார்க்கலாம்.

அக்டோபர் மாதத்தில் 18ஆம் தேதிக்கு மேல் சூரியன் துலாம் ராசியில் நீசம் பெறுகிறார். ஆனால் ஆட்சி பெற்ற சுக்கிரன் உடன் மாத இறுதி வரை சூரியன் இணைவதால் நீசபங்க ராஜயோகம் பெறுகிறார். சூரியன் தவிர மிதுனம் ராசியில் ராகு, தனுசு ராசியில் கேது, சனி, விருச்சிகத்தில் குரு என ஆண்டு கோள்கள் இந்த மாதம் சஞ்சரிக்கின்றன.

மாத கோள்களின் இடப்பெயர்ச்சியைப் பார்த்தால் அக்டோபர் மாத முற்பகுதியில் கன்னி ராசியில் இருந்த கிரகங்கள் மாத பிற்பகுதியில் துலாம் ராசியில் இணைகின்றன. துலாமில் இருந்து புதன் விருச்சிகத்திற்கு நகர சுக்கிரன் 28ஆம் தேதி இடப்பெயர்ச்சி அடைகிறார். புதன் சுக்கிரன் குருவோடு கூட்டணி சேர்ந்து ராசிகளை பார்வையிடுவதால் அதிக நன்மைகள் நடக்கும். அக்டோபர் மாதம் எட்டாம் வீட்டில் கிரகங்கள் சஞ்சரிப்பதால் கும்பம், மீனம் ராசிக்காரர்கள் எச்சரிக்கையோடும் விழிப்புணர்வோடும் இருப்பது அவசியம்.

எட்டில் கிரகங்கள்

எட்டில் கிரகங்கள்

கும்பம் ராசிக்காரர்களே ராசிக்கு எட்டாம் வீட்டில் கிரகங்கள் கூடியுள்ளன. சுக்கிரன் அக்டோபர் முதல் வாரத்திலேயே ஒன்பதாம் வீட்டிற்கு நகர்வது லாபம். சனி லாப வீட்டில் இருந்தாலும் அவரால் சரியாக செயல்பட முடியவில்லை காரணம் கேது கூடவே இருப்பதால் லாபமும் ஆதாயமும் கிடைக்கவில்லை. இதனால் என்ன செய்வது என்றுதானே யோசித்து கொண்டிருக்கிறீர்கள். கவலை வேண்டாம் கும்பம் ராசிக்காரர்களுக்கு மாத பிற்பகுதியில் அற்புதமாக அமைந்துள்ளது. வாய்ப்புகளும் வருமானங்களும் குவியப்போகிறது.

நன்மைகள் வரும்

நன்மைகள் வரும்

ஐந்தாம் வீட்டில் ராகு எட்டாம் வீட்டில் சூரியன், சுக்கிரன் செவ்வாய் இருக்கின்றனர். ஒன்பதாம் வீட்டில் புதன், பத்தாம் வீட்டில் குரு லாபத்தில் சனி கேது இருக்கின்றனர். சுக்கிரன் மாத முற்பகுதியில் ஒன்பதாம் வீட்டிற்கு நகர்கிறார் சூரியன் மாத பிற்பகுதியில் ஒன்பதாம் வீட்டிற்கு நகர்கிறார். வியாபாரத்தில் வெற்றியும் லாபமும் வரும். தொட்டது துலங்கும். நன்மைகள் தேடி வரும். கடன் வாங்கி முதலீடு செய்வீர்கள் லாபம் கொட்டப்போகுது.

ஜாக்கிரதையாக இருங்க

ஜாக்கிரதையாக இருங்க

வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் பாதுகாப்பு தேவை. செவ்வாய் எட்டாம் வீட்டில் இருக்கிறார். கூடவே சுக்கிரன் இருப்பதால் மாதத்தின் முதல் ஐந்து தினங்கள் சர்வ ஜாக்கிரதையாக இருங்கள். எதிரிகள் விசயத்தில் கவனம். வண்டி வாகனத்தில் போகும் போது நிதானம் தேவை. வண்டி வாகனத்தில் போகும் போது வேகம் தேவையில்லை. கோபத்தை விடுங்க நன்மைகள் நடக்கும். சிலருக்கு உடல்வலிகள் வரும் மருத்துவரிடம் போங்க. சனி பார்வை செவ்வாயை பார்க்கிறார். செவ்வாய் பார்வை சனியை பார்க்கிறார். அப்போ ரொம்ப திட்டம் போட்டாலும் தடைகளும் ஒருவித மந்தத்தன்மையும் இருக்கும்.

சாதனைக்கான மாதம்

சாதனைக்கான மாதம்

சுக்கிரன் இந்த மாதம் உற்சாகமான பலனை தருவார். வெளிநாட்டு வாய்ப்பு கிடைக்கும். மாத பிற்பகுதியில் பெண்களுக்கு அதிக நன்மைகள் நடக்கும். நோய்கள் தீரும். வேலையில் கவனமாக இருங்க உயர் அதிகாரிகளிடம் சர்வ ஜாக்கிரதையாக இருங்க. மாத இறுதியில் கிரகங்களின் மாற்றம், குரு பெயர்ச்சியால் நன்மைகள் நடக்கும். பணம் தேடி வரும். உங்களுக்கு கோள்களின் சஞ்சாரம் சாதகமாக இல்லாவிட்டாலும் குருவின் ஆசி கிடைக்கும். பெற்றோர்கள் உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவி விட்டுக்கொடுத்து போங்க. பிள்ளைகள் உடல் நலனில் நட்பு விசயத்தில் கண்காணிப்பு தேவை. மாத இறுதியில் சாதனைகள் செய்வீர்கள்.

கோபமும் எரிச்சலும்

கோபமும் எரிச்சலும்

சனி பத்தில் கேது உடன் இருக்கிறார். வேலை செய்யும் இடத்தில் பிரச்சினைகள் இருக்கும். மாத முற்பகுதியில் ஏழாம் வீட்டில் சூரியன், செவ்வாய், சுக்கிரன், புதன் என சஞ்சரிக்கின்றனர். இந்த கிரகங்கள் மாத பிற்பகுதியில் எட்டாம் வீட்டில் புதன், சுக்கிரன் இணைகின்றனர். நான்காம் வீட்டில் ராகு ஒன்பதாம் வீட்டில் குரு பத்தாம் வீட்டில் சனி கேது இருக்கின்றனர். மாத முற்பகுதியில் ஏழாம் வீட்டில் செவ்வாய் உடன் சூரியன் இருப்பதால் தேவையில்லாத எரிச்சல் கோபம் வரும். செவ்வாய் சனி பார்வைகள் சங்கடங்களை ஏற்படுத்தும்.

பேச்சில் கவனம் தேவை

பேச்சில் கவனம் தேவை


வாக்கில் நிதானம் தேவை. பேச்சில் கவனம் தேவை இல்லாவிட்டால் பிரச்சினைகள் அதிகமாகும். உடம்பில் ஒரு சோம்பேறித்தனம் இருந்து கொண்டே இருக்கும். பயணங்களில் எச்சரிக்கை தேவை. வாகனங்களை சர்வீஸ் செய்து வைத்துக்கொள்ளுங்கள் நிதானமாக இருங்கள் காரணம் எட்டாம் வீட்டில் மாத பிற்பகுதியில் கிரகங்கள் இணைகின்றன. சூரியன், சுக்கிரன் புதன் எட்டில் இருப்பதால் முன்கோபம் முயற்சியை தடுக்கும். பாதுகாப்பும் நிதானமும் தேவை. உடல் நலத்தில் அக்கறை செலுத்துங்கள்.

செவ்வாய் சனி பார்வை

செவ்வாய் சனி பார்வை


பத்தில் சனி தடைகள் தொல்லைகளை கொடுப்பார். சூரியனால் கோபம் எரிச்சல் அதிகரிக்கும் கூடவே செவ்வாய் சனி பார்வை உங்க ராசி மீது விழுகிறது. சூரியன் பகையை வளர்த்து விடுவார். அதிகம் வாய் பேசாதீங்க அமைதியாக இருந்து காரியம் சாதிக்கலாம். வேலை செய்யும் இடத்தில் ஒருவித மந்த தன்மையை கொடுத்துக்கொண்டே இருப்பார். மாத இறுதியில் சூரியன் தவிர சுக்கிரன் புதன் ஒன்பதாம் வீட்டிற்கு நகர்கின்றன. அதே நேரத்தில் குருபகவான் மாத இறுதியில் வாக்கிய பஞ்சாங்கப்படி இடப்பெயர்ச்சி அடைகிறார்.

குருபகவானால் நன்மை

குருபகவானால் நன்மை

மாத இறுதி வரை குரு பகவான் உங்க ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் இருந்து ராசியை பார்ப்பதால் சோதனைகளை சாதனைகளாக்குவார். குரு தன லாபத்தை கொடுப்பார். எதிரிகள் தொந்தரவு அதிகம் இருக்கும். போட்டி பொறாமைகள் அதிகம் உண்டு. சக்கர வியூகம் சுற்றி இருக்கிறது தெளிவாக இருங்கள் அதிகமாக ஸ்டாக் வாங்கி வைக்க வேண்டாம். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை. பெருமாளை வழிபடுங்கள். குரு ஸ்தலத்திற்கு சென்று வியாழக்கிழமைகளில் குரு ஹேரையில் விளக்கேற்றி வழிபடவும். பாதிப்புகள் குறையும் நல்ல மாதமாக அமைய குரு அருள் கிடைக்கும். எதிலும் நிதானமாக முடிவெடுங்க இந்த மாதத்தை சந்தோஷமாக கடந்து விடுவீர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+