லோக்சபா தேர்தல் முடிவு: ஜோதிடர் கணிப்பு பலித்தது- அசைக்கமுடியாத தலைவரான மோடி
லோக்சபா தேர்தல் 2019 முடிவுகள் வெளியாகி வருகின்றன. ஜோதிடர்களின் கணிப்பு பலித்து வருகிறது. பாஜக கூட்டணி 300க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து முன்னணியில் உள்ளது.
மதுரை: இன்னும் 5 ஆண்டு காலம் பாஜக ஆட்சிதான் என்பதை தேர்தல் முன்னணி நிலவரங்கள் உணர்த்தி வருகின்றன. ஆளும் கட்சி ஆட்சியமைக்கும் என்று பஞ்சாங்கம், ஜோதிடர்கள் கணித்திருந்தது பலித்துள்ளது. நவகிரகங்களின் கூட்டணி, கிரகங்களின் இடப்பெயர்ச்சி நாடாள்பவர்களை தீர்மானிக்கிறது என்பது இதன்மூலம் உறுதியாகியுள்ளது.
பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஒருபக்கம் இருந்தாலும் ராசிகளில் அமர்ந்திருக்கும் நவ கிரகங்களின் கூட்டணி, வேட்பாளர்களின் தசாபுத்தி, ஜாதக அமைப்பும் ஆட்சிக்கட்டிலில் அமரப்போகிறவரின் வெற்றியைத் தீர்மானிக்கிறது. அரசியல்வாதிகள் பலரும் ஜோதிடர்களின் ஆலோசனைப்படியே பல முடிவுகளை எடுக்கின்றனர்.
கடவுளை நம்பாத தலைவர்கள் கூட பரிகார பூஜைகள் நடத்தி, ஜோதிட ஆலோசனைகளைப் பெற்றுதான் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவரவர் பிறந்த ஜாதகங்களில் கிரகங்களின் கூட்டணியைப் பொறுத்து வெற்றி பரிசாக கிடைத்திருக்கிறது. நாட்டின் ஜாதகம் நன்றாக இருப்பதால் நிலையான ஆட்சியை மக்கள் பரிசளித்திருக்கின்றனர்.

ஆளுங்கட்சிக்கு நல்ல நேரம்
மார்ச் 12 முதல் மே 19 வரை ஆளுங்கட்சிக்கும் பிரதமர் மோடிக்கும் யோகமான காலகட்டமாக அமைந்திருந்தது. இந்த காலகட்டத்தில் தேர்தல் நடந்தால் ஆளும்கட்சி 300க்கும் மேற்பட்ட இடங்களை பிடிக்கும் என்று ஏற்கனவே நாம் கணித்திருந்தோம். அதே போலவே ஏப்ரல் மாதம் லோக்சபா தேர்தல் தொடங்கி மே 19ஆம் தேதி கடைசி கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. கருத்துக்கணிப்பு முடிவுகளும் ஆளுங்கட்சிக்கு சாதகமாக வந்தது. இப்போது தேர்தல் முடிவுகளின் முன்னணி நிலவரங்களும் ஆளுங்கட்சிக்கு சாதகமாக உள்ளது.

மோடியின் வெற்றிக்கு காரணம்
தேர்தல் நடைபெற்ற ஏப்ரல், மே மாதங்களில் தனுசு ராசியில் சனியோடு கேது கூட்டணி அமைத்தார். மிதுன ராசியில் ராகு உடன் செவ்வாய் கூட்டணி அமைத்தார். இந்த கிரகங்களின் சஞ்சாரம் மோடி, ராகுல்காந்தி இருவருக்குமே ஆதரவானதாகவே இருந்தாலும் தசாபுத்தியின் படி பார்த்தால் மோடியின் கை ஓங்கியே இருந்தது. இதுவே வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

வலிமையான தலைவர்
இன்றைய சூழ்நிலையில் நாட்டுக்குத் தேவை நிலையான ஆட்சியும் வலிமையும் தலைவரும் மட்டுமே. பாஜக தலைமையிலான கூட்டணியில் மோடியை முன்னிறுத்தியே தேர்தலை சந்தித்தனர். அதுவே வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. கடந்த பொதுத் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்டு, அதிக இடங்களில் வென்ற கட்சியாக உருவெடுத்தது பாரதிய ஜனதா கட்சி. இதற்குக் காரணம் மோடி அலைதான் என்று பேசப்பட்டது. இந்த லோக்சபா தேர்தலில் மோடி அலை இல்லை என்றாலும் வலிமையான தலைவர் நாட்டை ஆள்வதற்கு அவசியம் என்று உணர்ந்து மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்துள்ளனர்.

யோகங்கள் கை கொடுக்கும்
பிரதமர் நாற்காலியில் மீண்டும் அமரப்போகும் மோடியின் ஜாதகத்தில் பல யோகங்கள் உள்ளன. சண்டாள யோகம் அமைப்பு உள்ளது. இந்த யோகத்தைப் பெற்றவர்கள் என்ன செய்தாலும், அது வெற்றியாகவே முடியும். அவர்களை யாராலும் எந்த விதத்திலும் அசைக்க முடியாது. மேலும் மோடி ஜாதகத்தில் சந்திர மங்கள யோகம், குரு சந்திர யோகம், குரு மங்கள யோகம், மாளவிகா யோகம் என்று பல யோகங்கள் அணிவகுத்து நிற்கின்றன. கூடவே புதஆதித்ய யோகம், நீச்சபங்க ராஜயோகம், ரூசக யோகம், கஜகேசரி யோகம் என யோகங்கள் இருப்பதால் மோடிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று ஜோதிடர்கள் கணித்தது பலித்துள்ளது.

மோடியோட ராசி நல்ல ராசி
மோடி ஜாதகத்தின் படி சந்திரன், செவ்வாய், குரு ஆகிய கிரகங்கள் மோடிக்கு சாதகமான நிலையில் உள்ளன. கோச்சார ரீதியாக சூரியன், புதன், சனி கேது சாதகமாக உள்ளதால் மீண்டும் பிரதமர் பதவியில் அமர 100 சதவிகித வாய்ப்புள்ளது என்பது ஜோதிடர்களின் கணிப்பாகும். அந்த கணிப்பு பலித்துள்ளது.
ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, மம்தா பானர்ஜி, மாயாவதி என எத்தனை சவால்கள் இருந்தாலும் அதனை வென்று சாதனைகளாக்கி 2019 லோக்சபா தேர்தல் மட்டுமல்ல 2024 தேர்தலிலும் வெற்றி பெற்று 2029 வரை மோடி அசைக்கமுடியாத தலைவராக இருப்பார் என்கின்றனர் ஜோதிடர்கள்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications