குடும்பத்தில் முட்டல் மோதலா? காதலோ, திருமணமோ..மறந்தும் இந்த ராசிக்காரர்களுடன் வேண்டவே வேண்டாம்
சென்னை: மனிதர்களாக பிறந்த அனைவருக்குமே காதல், திருமணம் என்ற நிகழ்வுகள் வந்துதான் போகும். எந்த ராசிக்காரர்கள் யாரை திருமணம் செய்து கொண்டால், யாரை காதலித்தால் வாழ்க்கை இனிக்கும் என்று ஜோதிட ரீதியாக கணித்து கூற முடியும். நவகிரகங்களும் கூட்டணி அமைத்து 12 ராசிகளில் பயணிக்கும் காலத்தில் ஒருவருக்கு பிறந்த ஜாதகத்தில் கிரகங்களின் சேர்க்கையைப் பொருத்து காதல் தோன்றும் அந்த காதல் திடீர் திருமணத்தில் முடியும். எந்த ராசிக்காரர்கள் யாருடன் இணைந்தால் வாழ்க்கை இனிக்கும் என்று பார்க்கலாம்.
எல்லோரும் காதலிக்க முடியாது. அப்படியே காதலித்தாலும் அது திருமணத்தில் கைகூடுமா என்று சொல்ல முடியாது. சிலருக்கு திடீரென பிரேக் அப் ஆகிவிடும். ஒருவேளை திருமணத்தில் முடிந்தாலும் அதே வேகத்தில் விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறுவார்கள்.
காதல் ராசிகளான ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், மீனம் ராசிகள் ஒன்றுக்கொன்று சம்பந்தம் பெற்றால் காதல் கை கூடும். துலாமில் சுக்கிரன் அமைந்து மற்ற ராசிகளும் கை கொடுக்குமானால் காதல் கை கூடும் என்கிறது காதல் ஜோதிடம். திருமணப்பொருத்தம் பார்க்கும் போது பத்துப்பொருத்தம் பார்ப்பது போல ராசிப்பொருத்தமும் பார்க்க வேண்டும் அது முக்கியமானது.

குரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சந்திரன் ஆகிய 5 கிரகங்கள் இருக்கும் இடங்கள், பார்வை ஆகியவையே ஒருவரது காதல் சக்ஸஸ் ஆகுமா, தோல்வியில் முடியுமா என்பதை தீர்மானிக்கின்றன. காதல் தோன்றுவதற்கு மனசு முக்கிய பங்கு வகிக்கிறது. மனதுக்கு காரகர், உடல் காரகர், சஞ்சலத்தை தருபவர் சந்திரன். ராகு ஒரு தலைக்காதல் காரகன்.
காதலில் துணிவான முடிவெடுக்க உதவுபவர், தைரியத்துக்கு காரகர் செவ்வாய். காதல் வெற்றி பெற உதவி தோவை. காதலுக்கு இனம் புரியாத பாசத்திற்கும், இன்பத்திற்கும்.ஆடம்பரம் அழகு, எதிர்பாலினத்தை ஈர்க்கும் சக்தியை தருபவர், வசீகரத்தின் காரகர் சுக்கிரன்.
சுக்கிரன் செவ்வாய் 5ஆம் பாவகத் தொடர்பு ஏற்பட்டால் காதல் கனியும்.
சுக்கிரனுக்கும் ஏழாம் அதிபதிக்கும் தொடர்பு ஏற்பட்டால் காதல் திருமணம் அமையும். பொதுவாக எந்த ராசிகளுக்கும் 5 மற்றும் 9ஆம் ராசியாகி அமைபவருடன், காதல் ஏற்படும். ஒரு ராசிக்கு ஏழாவது ராசிக்காரருடன் காதல் மலர வாய்ப்புண்டு. ஐந்தாம் அதிபதி ஏழாம் அதிபதியும் இணைந்திருப்பது. அல்லது அதிபதி ஐந்தாம் இடத்தில் இருப்பது அல்லது ஏழாம் அதிபதிக்கும் ஐந்தாம் அதிபதி பார்வை பெறுவது அல்லது ஏழாம் அதிபதியின் நட்சத்திரத்தில் ஐந்தாம் அதிபதி இருப்பது, ஐந்தாம் அதிபதியின் நட்சத்திரத்தில் ஏழாம் அதிபதி இருப்பது காதல் திருமணம் அமையும்.
ஒருவருக்கு காதல் திருமணம், கலப்பு திருமணம் போன்றவை அமைய களத்திர ஸ்தானம் எனப்படும் 7ம் வீடு, களத்திரகாரகன், கர்ம காரகன், பாம்பு கிரகங்கள் என்று கூறப்படும் ராகு கேது கிரகங்களுடன் சம்பந்தப்பட்டு இருந்தால் அந்த பெண்ணுக்கோ பையனுக்கோ தூரத்து சொந்தத்தில் அல்லது காதல் திருமணம், கலப்பு திருமணம் அமையும் என்றும் கூறலாம். உங்களுடைய ஜாதகத்தில் எந்த கிரகங்கள் எந்த ராசியில் யாருடன் கூட்டணி அமைத்துள்ளன என்று பார்த்து உங்கள் காதல் ஜெயிக்குமா? சொதப்புமா என காதலர் தினத்தில் முடிவு செய்து கொள்ளுங்கள்.
செவ்வாய் ராசி அதிபதியாகக் கொண்ட மேஷம் விருச்சிக ராசிக்காரர்களோ, மேஷம் மேஷம் ராசிக்காரர்களே திருமணம் செய்தால் முட்டல் மோதல்தான். மேஷம் ராசி நெருப்பு குணம் கொண்ட ராசி. இரண்டு நெருப்பு ஒன்று சேர்ந்தாலும் ஆபத்துதான். நெருப்பு நீருடன் சேர்ந்தாலும் பாதிப்புதான். இவர்கள் இருவருக்கும் விட்டுக் கொடுக்கும் பண்பு இருக்காது. அதனால்தான் ஜோடி சேர்க்கும் போது மேஷத்துடன் விருச்சிகத்தை சேர்க்க வேண்டாம். நீர் ராசியான விருச்சிக ராசிக்காரர்கள் நில ராசிக்காரர்களுடன் இணையலாம்.
காதல் நாயகன் சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்டவர் ரிஷபம் ராசிக்காரர்கள். ரிஷபம் ராசியில் பிறந்தவர்களுக்கு விருச்சிக ராசிகாரர்களுடன் திருமண வாழ்க்கை அமையும். ரிஷபம் நில ராசி, விருச்சிகம் நீர் ராசி எனவே நீரும் நிலமும் இணைந்து இல்லறத்தில் காதல் கெமிஸ்ட்ரி அதிகரிக்கும். இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு அன்போடு காதல் வாழ்க்கையை அனுபவிப்பார்கள்.
புதனை ராசி அதிபதியாகக் கொண்டவர்கள் மிதுன ராசிக்காரர்கள். இவர்கள் தங்களுடைய துணையை அளவுக்கு அதிகமாக விரும்புவார்கள். மிதுன ராசிக்காரர்கள் மிகவும் பொறுமையானவர்கள். மிதுன ராசிக்காரர்களுக்கும் சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடகம் ராசிக்காரர்களுக்கும் காதல் புரிந்துணர்வு அபரிமிதமாக இருக்கும்.
சிம்மம் நெருப்பு ராசி. தனுசு,மேஷம் ராசிக்காரர்கள் காதல், திருமண வாழ்க்கையில் இணையலாம். அதே நேரத்தில் கன்னிராசிக்காரர்களும் மிதுன ராசிக்காரர்களும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டால் சின்னச் சின்ன பிரச்சினை கூட பூதாகரமாக வெடிக்கும். கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு மகரம், விருச்சிகம் ராசி உள்ள வாழ்க்கை துணைகள் பொருத்தமாக இருப்பார்கள். கன்னி ராசி நிலம் ராசி மகரம் ராசி நில ராசி, விருச்சிகம் நீர் ராசி. இவர்களுடைய வாரிசு அறிவாளியாக இருக்கும்.
துலாம் காற்று ராசி, மீனம் நீர் ராசி இவர்கள் இணைந்தால் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்காது வாழ்க்கையே போர்க்களமாக மாறி விடும். தனுசு ராசிக்காரர்கள் தனது துணையை முழுவதுமாக நேசிப்பார்கள். இவர்களுக்கு காதல் திருமணம் மிகவும் சிறப்பாக அமையும். இந்த ராசிக்காரர்கள் மகர ராசிக்காரர்களுடன் இணையக்கூடாது. மேஷம், சிம்ம ராசிக்காரர்களுடன் காதல் வாழ்க்கை சிறப்பாக அமையும். உங்கள் சொந்த ஜாதகத்தில் உள்ள கட்டங்களில் கிரகங்கள் அமைந்திருக்கும் தன்மையை பொருத்து காதல் சரிவருமா என்று பார்த்து முடிவு செய்யுங்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications