சுக்கிரன்... சூரியன்... கூடவே புதன் 12 ராசிக்கும் லவ் கெமிஸ்ட்ரி எப்படி?

மகரத்தில் சுக்கிரனும் சூரியனும் ஞான காரகன் கேது உடன் கூட்டணி அமைத்திருக்க வரும் 28ஆம் தேதி புதனும் குடியேறப்போகிறார். இந்த வாரம் 12 ராசிக்காரர்களுக்கும் காதல் கெமிஸ்ட்ரி எப்படியிருக்கும் என பார்க்கலா

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    காதல், கல்யாணம் எப்படி உங்கள் ராசிக்கு?- வீடியோ

    சென்னை: காதல் கிரகங்களின் கூட்டணியினால் இந்த வாரம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படியிருக்கும் என்று பார்க்கலாம். செவ்வாய் தனது ராசியான விருச்சிகத்தில் அமர்ந்திருக்க, மகரத்தில் சூரியனுடன் கூட்டணி அமைத்துள்ளார் சுக்கிரன்.

    இந்த வாரத்தில் 28ஆம் தேதியன்று புதனும் மகரம் ராசியில் குடியேறப்போகிறார். தனுசு ராசியில் சனியிருக்க துலாம் ராசியில் அமர்ந்துள்ளார் குருபகவான், கடகத்தில் ராகு என கிரகங்களின் அமர்வு இருக்க இந்த வாரம் சந்திரன் மீனம், மேஷம், ரிஷபம் என உலா வருகிறார்.

    இந்த கோள்களின் கூட்டணியினால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் காதல் கெமிஸ்ட்ரி எப்படி என்று பார்க்கலாம்.

    மேஷம்

    மேஷம்

    ராசிநாதன் செவ்வாய் விருச்சிகத்தில் 8வது இடத்தில் அமர்ந்திருக்க சூரியன் 10வது இடத்தில் அமர்ந்துள்ளார். அங்கேயே கேது, சுக்கிரன் அமர்ந்துள்ளார். சந்திரன் உங்கள் ராசிக்குள் அமரப் போகிறார். கொஞ்சம் வாயை மூடி பேசுவது உத்தமம். இந்த வாரம் கொஞ்சம் குழப்பமான மனநிலையே நீடிக்கும். வாழ்க்கைத்துணையுடன் பேச்சுவார்த்தையில் முட்டல் மோதல் தேவையில்லை.

    ரிஷபம்

    ரிஷபம்

    உங்கள் ராசி நாதன் சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் சூரியன், கேது உடன் இணைந்து இருக்கிறார். செவ்வாய் ஏழாமிடத்தில் இருக்கிறார் தம்பதிகளிடையேயும், காதலர்களிடையேயும் இணக்கம் ஏற்படும். புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் இன்னும் சில நாட்களில் 9ஆம் இடத்திற்கு நகரப்போகிறார். உற்சாகம் பிறக்கும். நரம்புகளின் நாயகனின் நகர்வு முகத்தில் தோற்றப்பொலிவை தரும். ராகு மூன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் குழப்பம் ஏற்பட்டாலும் காதல் விவகாரங்களில் உற்சாகமான வாரம் இது.

    மிதுனம்

    மிதுனம்

    உங்கள் ராசி நாதன் ராசிக்கு 7ஆம் இடத்தில் தனுசு ராசியில் அமர்ந்துள்ளர். 28ஆம் தேதியன்று 8ஆம் இடமான மகரத்திற்கு நகர்கிறார். மகரத்தில் ஏற்கனவே சூரியன், சுக்கிரன், கேது அமர்ந்திருக்கிறார்கள். உங்கள் வாழ்க்கைத் துணைக்கு லேசான உடல்நலக்குறைவு ஏற்படும். பேசும் போது பாசிட்டிவ்வான வார்த்தைகளை உபயோகிக்கவும்.

    கடகம்

    கடகம்

    ராசிநாதன் சந்திரன் மீனம் ராசியில் 9வது இடத்தில் அமர்ந்துள்ளார். மெதுவாக நகர்ந்து ஞாயிறு வரை 11வது வீடான மேஷத்தில் அமர்ந்திருப்பார். செவ்வாய் 5ஆம் வீடான விருச்சிகத்தில் அமர்ந்துள்ளார். வேலையில் இந்த வாரம் ரொம்பவும் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். கூடவே ரொமான்ஸ் அதிகரிக்கும். புத்திநாதன் புதன் இப்போது 6 ஆம் இடமான தனுசுவில் சனியோடு அமர்ந்துள்ளார். ஞாயிறன்று 7வது வீடான மகரத்தில் சூரியன், சுக்கிரன், கேது உடன் இணைகிறார். வார பிற்பகுதியில் உற்சாகம் அதிகரிக்கும்.

    சிம்மம்

    சிம்மம்

    ராசி நாதன் சூரியன் 6வது இடத்தில் அமர்ந்துள்ளார். 6வது வீட்டில் கேது, சுக்கிரன் அமர்ந்துள்ளனர். குருபகவான் 3வது வீட்டில் அமர்ந்துள்ளார். சனியும், புதனும் இணைந்து 5வது வீட்டில் அமர்ந்துள்ளார். துணையுடன் எதையும் வெளிப்படையாக பேசுங்கள். இந்த வாரம் வாழ்க்கைத் துணையின் உதவி கிடைக்கும். காதலிக்காமல் இருப்பவர்களுக்கு இந்த வாரம் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி ஏற்படும். புதிய நட்புக்கள் பூக்கும்.

    கன்னி

    கன்னி

    ராசிநாதன் புதன் சனியோடு இணைந்து 4வது வீட்டில் அமர்ந்துள்ளார். ஞாயிறன்று புதன் 5ஆம் வீட்டில் அமர்கிறார். சூரியன், கேது சுக்கிரனுடன் இணைந்து 5ஆம் வீட்டில் அமர்ந்துள்ளார். கற்பனை வளம், உற்சாகம் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். காதல் துணையுடன் புதிய கெமிஸ்ட்ரி உருவாகும். வார இறுதியில் கொஞ்சம் எச்சரிக்கை அவசியம்.

    துலாம்

    துலாம்

    காதல் நாயகனும், ராசி நாயகனுமாகிய சுக்கிரன் 4வது வீடான மகரத்தில் சூரியன், கேது உடன் இணைந்து அமர்ந்துள்ளார். குரு உங்களின் ராசியில் அமர்ந்துள்ளார். துணையுடன் ஈகோ மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது ஆனால் அதை வளர விட வேண்டாம். வார மத்தியில் காதல் துணையுடன் சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் ஏற்படும் எச்சரிக்கையாக பேசவும். காதலியோ, மனைவியோ, நல்ல நட்பாக நடத்தினால் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இல்லை.

    விருச்சிகம்

    விருச்சிகம்

    ராசி நாதன் செவ்வாய் ராசியிலேயே அமர்ந்துள்ளார். குரு பகவான் 12ஆம் வீட்டில் இருக்கிறார். மனோகாரகன் சந்திரன் 5ஆம் வீட்டில் அமர்துள்ளார். இந்த வாரம் டோன்ட் ஒர்ரி பி ஹேப்பி மூடில் இருங்க மக்களே. இந்த வாரம் பல துறை வல்லுநராக வளர்ச்சியடைவீர்கள். சின்ன விசயமானாலும் அசால்ட்டாக இருக்க வேண்டாம். கவனமாக கையாண்டால் துணையின் கையில் இருந்து அடிவாங்காமல் தப்பிக்கலாம்.

    தனுசு

    தனுசு

    ராசி நாதன் குருபகவான் ராசிக்கு 11 வது இடமான லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். வீரிய நாயகன் செவ்வாய் ராசிக்கு 12வது இடத்தில் அமர்ந்துள்ளார். ராசியில் சனியும், புதனும் கூட்டணி போட்டு அமர்ந்துள்ளனர். இந்த வாரம் காதல் வாழ்க்கையில் கூடுதல் உற்சாகமாக இருக்கும். உங்கள் துணையுடன் உற்சாக பேச்சில் ஈடுபடுவீர்கள். எதையும் பாசிட்டிவ் ஆக பேசவும். இந்த வார இறுதியில் சில ரொமான்டிக் ஐடியா உடன் உங்கள் காதல் துணையை அணுகுவீர்கள். இது காதல் வாரம்.

    மகரம்

    மகரம்

    ராசிநாதன் சனி, புதனுடன் இணைந்து 12வது இடத்தில் அமர்ந்துள்ளார். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்க செலவு செய்யுங்கள். உங்களின் இனிய இதயத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுங்க. ராசிக்குள் கேது, சூரியன், சுக்கிரன் அமர்ந்துள்ளனர். காதல் வாழ்க்கை இந்த வாரம் இனிக்கும். நடந்தவை நல்லவையாக இருக்கட்டும். காதல் வாழ்வில் திடீர் அதிர்ஷ்டங்கள் உருவாகும். உங்கள் கனவுகளை துணையுடன் காணும் வாரம் இது.

    கும்பம்

    கும்பம்

    உங்கள் ராசிநாதன் சனி லாப ஸ்தானமான 11வது இடமான தனுசுவில் அமர்ந்துள்ளார். இது நன்மையான நிலையாகும். குருவின் வீட்டில் சனி அமர்ந்துள்ளார். ராசி நாதன் குரு சனியின் உச்சவீடான துலாமில் அமர்ந்துள்ளார். எதையும் ஆழமாக யோசித்து முடிவெடுக்கவும். உணர்வு ரீதியாக பேசுவதை விடுத்து அறிவுப்பூர்வமாக பேசுவது நல்லது. துணையோடு இந்த வாரம் அட்ஜஸ்ட் செய்து செல்லவும்.

    மீனம்

    மீனம்

    உங்கள் ராசியில் சந்திரன் அமர்ந்துள்ளார். அவர் விரைவில் நகர்ந்து இரண்டாம் இடத்திற்கு சென்று விடுவார். ராசி நாதன் குரு 8வது வீட்டில் அமர்ந்துள்ளார். 5 இடத்தில் ராகு அமர்ந்துள்ளது துணை உடனான பிணைப்பை அதிகரிக்கும். ராசிக்கு 11வது வீட்டில் சூரியன், சுக்கிரன், கேது அமர்ந்துள்ளனர். புத்தி நாயகன் புதனும் விரைவில் இவர்களுடன் இணைய உள்ளார். இந்த வாரம் விட்டுக்கொடுத்து சென்றால் காதல் வாழ்க்கை உற்சாகமாக இருக்கும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+