சந்திரகிரகணம் 2019: திருப்பதி ஏழுமலையானை ஜூலை 16 இரவு முதல் தரிசிக்க முடியாது
சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை 16ம் தேதி இரவு 7 மணி முதல் 17ஆம் தேதி காலை 5 மணி வரை கோவில் நடை அடைக்கப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி: சந்திரகிரகணத்தை முன்னிட்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கீழ் செயல்படும் அனைத்து கோவில்களும் மூடப்பட உள்ளன. ஜூலை 17 ஆம் தேதி காலை அதிகாலை 1.31 மணி முதல் 4.29 மணி வரை சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. இதையொட்டி 16ஆம் தேதி இரவு 7மணி முதல் 17 ஆம் தேதி காலை 5 மணி வரை ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்பட உள்ளது.
கிரகணத்தின் போது காளஹஸ்தி கோவிலை மட்டும் மூட மாட்டார்கள். இதற்கு காரணம், இந்தியாவிலேயே இங்கே மட்டும் தான் ராகுவுக்கும் கேதுவுக்கும் பூஜை நடக்கிறது.
வானவியலின் அடிப்படையில் தான் ஜோதிடம் அமைந்திருக்கிறது என்றாலும் கிரகணம் பற்றிய கருத்தில் வானிவியலும் ஜோதிடமும் சிறிது மாறுபட்டு நிற்கிறது. வானவியலில் சூரியன் அல்லது சந்திரன் மீது ஏற்படும் நிழலை கிரகணம் என கூறுகிறது. சூரிய கிரகணம், அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் முழு நிலவு நாளிலும் உண்டாகிறது. எல்லா முழு நிலா நாளிலும் சந்திர கிரகணம் உண்டாவது இல்லை.

தனுசு ராசியில் சந்திரன் கேது
ஜோதிடத்தில் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேதுவும் சூரியன் மற்றும் சந்திரனோடு இணைவதை கிரகணம் என கூறுகிறது. சூரிய கிரகணம் ஏற்படும் அமாவாசை நாளில் - சூரியன், சந்திரன், ராகு ஒரே வீட்டில் இருக்கும். சந்திர கிரகணம் ஏற்படும் பௌர்ணமி நாளில் அதாவது ஜூலை 16 ஆம் தேதி இரவு தனுசு ராசியில் சந்திரன் கேது சனியோடு இணைந்திருக்க, சூரியன் ராகு சம சப்தம ராசியில் நின்று கொண்டிருக்கும்.

திருப்பதி ஏழுமலையான் கோவில்
திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜூலை 17 ஆம் தேதி காலை அதிகாலை 1.31 மணி முதல் 4.29 மணி வரை சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. இதையொட்டி 16ஆம் தேதி இரவு 7மணி முதல் 17 ஆம் தேதி காலை 5 மணி வரை கோவில் நடை அடைக்கப்பட உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கீழ் செயல்படும் அனைத்து கோவில்களும் மூடப்பட உள்ளது. திருப்பதியில் உள்ள தேவஸ்தான தங்கும் விடுதியில் செயல்பட்டு வரும் அன்னதான கவுன்ட்டர்களும் மூடப்படும்.

சர்வ தரிசன அனுமதி
ஜூலை 17ஆம் தேதி அதிகாலையில் கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு சுப்ரபாத சேவையுடன் திறக்கப்பட உள்ளது. இதை தொடர்ந்து தோமாலை சேவை, பஞ்சாங்கம் படித்து, அர்ச்சனை போன்ற சேவைகள் ஏகாந்தமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் அர்ச்சகர்கள் மட்டும் நடத்த உள்ளனர். இதைத் தொடர்ந்து 11 மணிக்கு பிறகு சர்வ தரிசனத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

பக்தர்கள் அனுமதி
16 ஆம் தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்துடன் சந்திர கிரகணமும் ஏற்பட உள்ளதால் அஷ்டதள பாத பத்ம ஆராதனை சேவை, வசந்த உற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. இதேபோன்று 17ஆம் தேதி ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் ,வசந்த உற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காளஹஸ்தியில் சிறப்பு பூஜை
கிரகணத்தின் போது காளஹஸ்தி கோவிலை மட்டும் மூட மாட்டார்கள். இதற்கு காரணம், இந்தியாவிலேயே இங்கே மட்டும் தான் ராகுவுக்கும் கேதுவுக்கும் பூஜை நடக்கிறது. அதனால் இங்கே கிரகணங்களின் தாக்கம் இருக்காது என்று சொல்லப்படுகிறது. ஜூலை 16ஆம் தேதி ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் நள்ளிரவு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடைபெற உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications