சந்திர கிரகணம் யாருக்கு பாதிப்பு?... கிரகண நேரத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
சென்னை: ராகு கிரஹஸ்த சந்திர கிரகணம் மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் நிகழ்கிறது. 28ஆம் தேதி நள்ளிரவில் நிகழும் சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியும் என்பதால் சில மணி நேரங்கள் தோஷ காலமாக இருக்கும். சில ராசிகளில் பிறந்தவர்களுக்கும் தோஷமாகும். சந்திர கிரகண நாளில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.
சந்திர கிரகணம்: சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சந்திரனும் சூரியனும் பூமியின் எதிரெதிர் பக்கங்களில் இருக்கும்போது முழு சந்திர கிரகணம் நிகழும். அப்போது, பூமியின் நிழலின் ஒரு பகுதி மட்டுமே சந்திரனை மறைக்கும் போது ஒரு பகுதி சந்திர கிரகணம் நிகழ்கிறது.

கிரகண தோஷம்: 2023ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் வரும் 29ஆம் தேதி நள்ளிரவில் அதாவது 1 மணி 3 நிமிடத்தில் தொடங்குகிறது. நள்ளிரவு 02 மணி 23 நிமிடத்தில் கிரகணம் முடிவடைகிறது. இந்த கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியும் என்பதால் கிரகணம் தொடங்குவதற்கு 7 மணி நேரத்திற்கு முன்பாகவே தோஷ காலம் தொடங்குகிறது. கோவில்களில் நடை அடைக்கப்பட்டு விடும். கிரகணம் முடிந்த பிறகு கோவில்களில் சுத்தம் செய்து பரிகார பூஜைகள் முடிந்த பின்னரே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
தோஷ பரிகாரம்: ஐப்பசி பவுர்ணமி நாளில் நிகழும் சந்திர கிரகணம் அஸ்வினி நட்சத்திரத்தில் நிகழ்வதால் ரேவதி, அஸ்வினி, பரணி, ரோகிணி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு தோஷம் உள்ளது. எனவே இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்ய வேண்டும். கிரகணம் முடிந்த மறுநாள் குளித்து விட்டு கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது நல்லது.
என்ன செய்யக்கூடாது: கிரகண நேரத்தில் சமையல் செய்ய கூடாது. முக்கியமாக சாப்பிடக்கூடாது. தண்ணீர் அருந்தக்கூடாது. நகம் கிள்ளக் கூடாது. எந்த வேலையும் செய்யக்கூடாது. கிரகண கதிர்கள் தாக்காமல் இருக்க உணவுப் பொருட்களில் தர்பையை போட்டு வைப்பது மரபாகும். கிரகண நேரத்தின் போது, எதுவும் சாப்பிடக் கூடாது. முன்னதாகவே சாப்பிட்டுக் கொள்ளலாம். அதேபோல், கிரகணம் முடியும் போது, தர்ப்பணம் செய்வது மிகவும் புண்ணியங்களையும் மனோபலத்தையும் தரும் என்கிறது சாஸ்திரம்.
கவனம் தேவை: கர்ப்பிணி பெண்கள் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கிரகணம் நிகழும்பொழுது பொது ஜனங்களை விட, கர்ப்பிணி பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். கர்ப்பிணிப் பெண்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதே நல்லது. அப்படியே வெளியே வந்து வெளி வெளிச்சம் பட்டால், கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கக்கூடிய சில கதிர் வீச்சுகள் தாக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறன. அதன் காரணமாக பிறக்ககூடிய குழந்தைகளுக்கு சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளன.
என்ன செய்யலாம்: சந்திரகிரகண நேரத்தில், யாகசாலை அமைத்து ஹோமங்கள் செய்வது மிகவும் பலம் தரும். நூறு மடங்கு புண்ணியங்களையும் பலத்தையும் தரும் ஹோமமானது இந்த வேளையில் செய்யப்படும் போது ஆயிரம் மடங்கு புண்ணியமும் பலமும் உண்டாகும். சந்திர கிரகணத்தின் போது, ஜபம், தியானம் செய்து கொண்டிருக்கலாம். தெரிந்த ஸ்லோகங்களை சொல்லிக் கொண்டிருக்கலாம். விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம், சிவ புராணம் சொல்வது, கேட்பது நன்மை தரும். சந்திர கிரகணம் முடிந்து வீட்டில் விளக்கேற்றி வழிபட்டு விட்டு அருகில் கோயில்களுக்குச் சென்று அர்ச்சனை செய்யலாம். அரிசி, நல்லெண்ணெய் முதலானவற்றை தானம் தருவது மிகுந்த பலனையும் புண்ணியத்தையும் தரும்.
சூரிய கிரகணம்: மங்களகரமான சோபகிருது வருடம் பங்குனி மாதம் 28ஆம் தேதி ஏப்ரல் 8ஆம் நாள் திங்கட்கிழமை இரவு 09.12 மணி முதல் இரவு 02.22 மணி வரை ரேவதி நட்சத்திரத்தில் ராகு கிரஹஸ்த சூரிய கிரகணம் நிகழ்கிறது. இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது என்பதால் தோஷம் இல்லை. வட அமெரிக்கா, கனடா, நார்வே நாடுகளில் முழு சூரிய கிரகணத்தை பார்க்கலாம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications