வீடு கட்டும் யோகம்... பணம் வருவாய் - மகர சங்கராந்தி பலன்கள்
மகர சங்கராந்தி புருஷன் கோரா என்ற பெயர் கொண்டிருப்பதால் அரசாங்கத்தினால் நற்பலன்கள் கிட்டாது. எருமை வாகனத்தில் வருவதால் மழை அதிகரிக்கும், தீய குணம் கொண்வர்கள் அழிவை சந்திப்பார்கள்.
Recommended Video

சென்னை: சங்கராந்தி என்பது சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்வதைக் குறிக்கிறது. மகர சங்கராந்தி என்பது சூரியன் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குச் செல்வதைக் குறிக்கிறது.
தேவர்களுக்குப் பகல் காலமான உத்திராயணத்தின் முதல் நாளான தை மாதம் 01ம் நாள் ஏற்படக்கூடிய கிழமை, திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மகர சங்கராந்தியின் பலன்கள் ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீஸ்வஸ்திஸ்ரீ மங்களகரமான ஹேவிளம்பி வருடம் தை மாதம் 01ம் நாள் 14-01-2018 ஞாயிற்றுக் கிழமை கிருஷ்ண பட்சம் திரயோதசி திதி, மூலம் நட்சத்திரம், துருவம் நாம யோகம், வணிசை கரணம் அன்று பகல் 01-46 மணி அளவில் மேஷம் லக்கினம் தனுசு நவாம்சம் உதயமாகும் காலத்தில் சங்கராந்தி பகவான் மகரம் ராசியில் பிரவேசிக்கிறார்.

பலன்கள் என்ன
மகர சங்கராந்தி புருஷன் கோரா என்ற பெயர் கொண்டிருப்பதால் அரசாங்கத்தினால் நற்பலன்கள் கிட்டாது. எருமை வாகனத்தில் வருவதால் மழை அதிகரிக்கும், தீய குணம் கொண்வர்கள் அழிவை சந்திப்பார்கள். கம்பிளி வஸ்திரம் அணிந்திருப்பதால் புது வகையான நோய்கள் தாக்கும்.

ஆரோக்கியம்
முத்து ஆபரணங்கள் அணிந்திருப்பதால் கெட்ட நடவடிக்கை கொண்ட பெண்களுக்கு கெடுதி உண்டாகும். நீர் அபிசேகம் செய்யப்படுவதால் வியாதிகள் பெருகும். சக்கரம் ஆயுதம் கொண்டிருப்பதாலும், நீலோத்பலம் புஷ்பம் அணிந்திருப்பதனாலும் நோய்களின் தாக்கம் அதிகரிக்கும். சிவப்பு குடையும், மாணிக்க விசிறியும் கொண்டிருப்பதால் எந்த நோய்கள் உண்டானாலும் உடல் ஆரோக்கியம் சீராகும்.

விளைச்சல் அதிகமாகும்
மத்தளத்தை வாத்தியமாக கொண்டிருப்பதால் கலைத்துறையினருக்கு தீய பலன்கள் உண்டாகும். தயிர் சாப்பிடுவதால் கால்நடைகளின் அழிவு அதிகமாக இருக்கும். கிழக்கு திசையிலிருந்து வருவதால் கற்றறிந்த மேலோருக்கு பெருமை உண்டாகும். மேஷம் லக்கினத்தில் உதிப்பதால் தானிய உற்பத்தி பெருகும்.

வீடு கட்டும் யோகம்
அசுவினி, பரணி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இடம் மாற்றம் உண்டாகும்.
கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு புதிதாக வீடு கட்டும் யோகம் உண்டாகும்.

அரசு உதவி
ஆயில்யம், மகம், பூரம் ஆகிய நட்ச்த்திரங்களில் பிறந்தவர்களுக்கு அரசாங்கத்தினால் தொல்லை உண்டாகும்.
உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு அரசாங்கத்திலிருந்து பரிசு, பட்டம், அனுகூலம் கிடைக்கும்.

பணம் வருவாய் கிடைக்கும்
கேட்டை, மூலம், பூராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு பணம் அதிகமாக செலவாகும். உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு செல்வ வளம் அதிகரிக்கும்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications