Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகரசங்கராந்தி பலன் 2024.. தை பொங்கல் முதல் ராஜாதி ராஜயோகம்.. 2025 வரை வீட்டில் குவியும் செல்வம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சூரிய பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் நுழையும் நாள் மகர சங்கராந்தியாக கொண்டாடப்படுகிறது. மகரசங்கராந்தியின் சஞ்சாரத்தினால் 2024 ஜனவரி 14ஆம்தேதி தொடங்கி 2025 ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி வரை என்ன பலன்கள் நடைபெறும் என்றும் எந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ராஜ யோகமும் வெகுமானமும் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மகரசங்கராந்தி: ஸ்ரீஸ்வஸ்திஸ்ரீ மங்களகரமான சோபகிருது வருடம் மார்கழி மாதம் 29ஆம் தேதி ஜனவரி 14, 2024ஆம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமை சுக்லபட்சம், சதுர்த்தி திதி சதயம் நட்சத்திரம், வரீயான் நாமயோகம் பத்ரை கரணத்தில் சித்த யோகத்துடன் கூடிய சுபயோக சுப தினத்தில் நள்ளிரவு 2.43 மணிக்கு சூர்ய உதயாதி 50.12 நாழிகை அளவில் விருச்சிக லக்னம் சிம்ம நவாம்சையில் சங்கராந்தி பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசியில் பிரவேசிக்கிறார்.

Makar Sankranti rasi palan 2024: Thai Pongal days these 12 stars people gets Rajayogam

வளம் தரும் சூரியன்: சூரியன், தனது பயணத்தை தைமாத பிறப்பன்று வடக்கு திசையை நோக்கி தொடங்குகிறார். இதை உத்திராயண புண்ணியகாலம் என்பர். உத்திராயணம் என்றால் வடக்குப்புறமான வழி என்று பொருள். இக்காலம் தேவர்களுக்கு பகல் பொழுதாகும். தை மாதத்தில் சூரியனுக்கு பகன் என்று பெயர். தை மாதம் சூரியனை வழிபட்டவர்களுக்கு எல்லா வளங்களும், பால்பாக்கியமும் உண்டாகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

தை பொங்கல் திருநாள்: ஆண்டுதோறும் தை மாதம் முதல் ஆனி மாதம் வரையுள்ள ஆறு மாதங்கள் உத்தராயணம் என்றும் ஆடி முதல் மார்கழி வரையுள்ள மாதங்கள் தட்சிணாயணம் என்றும் கூறப்படுகிறது. தெற்கு திசையில் பயணித்து வந்த இதில் தை மாதம் முதல் வட திசையில் பயணத்தை தொடங்குவார். இந்த நாளை தமிழகத்தில் தைப் பொங்கல் என்று கொண்டாடுகிறோம். மகர சங்கராந்தி என்று ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் கொண்டாடுகின்றனர்.

மகரசங்கராந்தி பலன்: மகரசங்கராந்தி தேவதையின் பெயர், தோற்றம், உடை, வாகனம், உணவு, அணிந்திருக்கும் ஆபரணம், புஷ்பம் போன்றவற்றுக்குத் தக்கபடி தேசத்தின் அப்போதைய நன்மை தீமைகளுக்குப் பலன் கூறுவார்கள். இந்த ஆண்டு மகரசங்கராந்தி தேவதை எப்படி எதன் மீதேறி வருகிறார் அதற்கான பலன்கள் எப்படி என்று பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாங்கம் பலன்: ஒவ்வொரு ஆண்டுக்கும் சங்கராந்தி தேவதைக்கு ஒரு பெயர் உண்டு. 60 வருடங்களுக்கு தனித்தனிப் பெயருடைய சங்கராந்தி தேவதைகள் உள்ளன. இந்த ஆண்டு தேவதையின் பெயர், வாகனம், உடை பற்றி பஞ்சாங்கத்தில் என்ன பலன் சொல்லியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

மகரசங்கராந்தி தேவதையின் பெயர்: கோரா - ராஜகோபம்

வாகனம்: நாய் - செல்வந்தர்களுக்கு கெடுதி

வஸ்திரம் : தோல் - பீடை

ஆபரணம்: வெள்ளி - வெள்ளி வியாபாரிகளுக்கு பீடை

அபிஷேகம் : சுத்த ஜலம் - வியாதி பெருக்கம்

ஆயுதம் : சர்ப்பம் - ஜுர பீடை

கந்தம் : தாம்பூலம் - ஸ்திரி ஜன பீடை

புஷ்பம் : அசோகம் - சௌக்கியம்

சத்திரம் (குடை) : சிவப்பு குடை, பத்திரிக்கை நிருபர்களுக்குள் யுத்தம்

சாமரம் ( விசிறி) : மாணிக்கம் - ஜனங்களுக்கு சௌக்கியம், நிருபர்களுக்கு பீடை

வாத்தியம்: மத்தளம் - பாடகர்களுக்கு பீடை

பாத்திரம்: இரும்பு - அரசனுக்கு பீடை

போஜனம்: சித்ரனங்கள் - ரஸவர்க்கங்களுக்கு நாசம்

முகபலன் : ஹாஸ்யம் - பயிர்களுக்கு கெடுதி

ஜாதி : பிசாசு - ஜனங்களுக்குப் பீடை

திக்கு: தெற்கு - மேற்கு, சகலருக்கும் சகலவிதமான சம்பத்துக்களும் ஏற்படும்.

பட்சம் : சுக்லபட்சம் - சுபிட்சம்

வாரம் : ஞாயிற்றுக்கிழமை- அற்பு விருஷ்டி

காலம் : ராத்திரி காலம் - ராணுவம், காவல்துறையினருக்கு பீடை

லக்கினம் : ஸ்திர லக்கினம் - தானிய குறைவு

விருச்சிக லக்கினம் - மத்திம பலன், யுத்தமுண்டாகும்.

யாருக்கு நன்மை: மகர சங்கராந்தியின் பிரவேசத்தினால் அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆகிய 3 நாட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு தன நாசமும், உத்திரட்டாதி, ரேவதி, அஸ்வினி, பரணி, கிருத்திகை, ரோகிணி ஆகிய 6 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு தன லாபமும் உண்டாகும். மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம் ஆகிய 3 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஸ்தான நாசமும் பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி,அசுவினி,பரணி,கிருத்திகை, ஆகிய 6 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஸ்தான லாபமும் ஏற்படும்.

தன லாபம்: பூசம், ஆயில்யம், மகம்,பூரம்,உத்திரம்,ஹஸ்தம் ஆகிய 6 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு தன லாபமும் உண்டாகும். சித்திரை, சுவாதி, விசாகம் ஆகிய 3 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ராஜ கோபமும் உண்டாகும் என பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ வெகுமானம்: அனுசம், கேட்டை, மூலம், பூராடம், உத்திரம், திருவோணம் ஆகிய 6 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ராஜ வெகுமானமும் கிடைக்கும் என்பது மகர சங்கராந்தி பலன்களாகும். பஞ்சாங்கத்தில் கூறியுள்ளபடி மகர சங்கராந்தியினால் பாதிப்பு ஏற்படும் என்று அறிந்தவர்கள் தினசரியும் சூரிய நமஸ்காரம் செய்ய பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+