மார்ச் மாதம் காதலும் கல்யாண யோகமும் இந்த ராசிக்காரங்களுக்கு தேடி வருது

மார்ச் மாதம் வசந்தகால மாதம். இந்த மாதத்தில் சில கிரகங்களின் இடப்பெயர்ச்சி நடக்கப்போகிறது. செவ்வாய் சனி சேர்க்கை நடைபெறுகிறது. குரு அதிசாரமாக மகரம் ராசிக்கு செல்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மார்ச் மாதம் வசந்தகாலம் பிறக்கப்போகிறது. கிரகங்களின் இடப்பெயர்ச்சியால் நிறைய சந்தோஷ சம்பவங்கள் நடைபெறப்போகிறது.
மார்ச் 10ஆம் தேதி புதன் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் சஞ்சரிக்கிறார். 14ஆம் தேதி சூரியன் மீனம் ராசிக்கு மாறுகிறார். தனுசு ராசியில் குரு உடன் இருக்கும் செவ்வாய் 22ஆம் தேதி மகரம் ராசிக்கு மாறுகிறார். மாத பிற்பகுதியில் செவ்வாய் மகரம் ராசியில் உச்சம் பெற்று சனியோடு இணைகிறார். குரு மாத இறுதியில் அதிசாரமாக சஞ்சரித்து மகரம் ராசியில் செவ்வாய், சனியோடு இணைகின்றார். மாத இறுதியில் 28ஆம் தேதி சுக்கிரன் ரிஷபம் ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சி கூட்டணியால் எந்த ராசிக்காரர்களுக்கு கல்யாண யோகம் வந்து விட்டது என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

மேஷம் ராசியில் சுக்கிரன் சஞ்சரிக்கிறார். செவ்வாய் பகவானின் பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது. சிங்கிளாக இருக்கும் இந்த ராசிக்காரர்களுக்கு இந்த வசந்த காலத்தில் காதல் மலரும் நேரம் வந்து விட்டது. காதலித்துக்கொண்டிருப்பவர்களுக்கு கல்யாண யோகமும் வந்து விட்டது. எத்தனையோ தடைகளைத் தாண்டி உங்களுக்கு திருமண பேச்சுவார்த்தை சுபமாக முடியும். இந்த மார்ச் மாதத்தில் திருமணம் முடிந்து கோடை விடுமுறையில் சந்தோஷமாக ஹனிமூனை கொண்டாடத் தயாராகுங்கள்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சந்தோஷமும் காதலும் நிறைந்த மாதம் உங்க ராசி நாதன் சுக்கிரன் காதல் காரகன், மார்ச் மாதத்தில் உங்க ராசிக்கு 12 ஆம் வீட்டிலும் மாத இறுதியில் உங்க ராசியிலும் ஆட்சி பெற்று அமரப்போகிறார். காதல் நாயகன் சுக்கிரனின் மீதும் உங்க ராசியின் மீதும் காதல் காரகன் செவ்வாயின் பார்வையும் விழுகிறது. நீங்களும் காதலிக்க தயாராகி விட்டீர்கள். உங்க காதலும் கல்யாணத்தில் முடியப்போகிறது.
மாத இறுதியில் சுக்கிரன் உங்க ராசியில் ஆட்சி பெற்று அமரப்போவதால் மாளவியா யோகம் கிடைக்கிறது. கிரகங்களின் சஞ்சாரத்தினால் நிறைய யோகங்கள் கிடைக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு கல்யாண யோகம் வரப்போகிறது. புத்திர பாக்கியத்திற்காக காத்திருக்கும் தம்பதியினருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். உங்களின் ஆசைகள் நிறைவேறப்போகிறது.

சிம்மம்

சிம்மம்

சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ஐந்தாம் வீட்டில் உள்ள செவ்வாயின் பார்வை ஒன்பதாம் வீட்டில் உள்ள சுக்கிரன் மீது விழுகிறது. காதலும் நெருக்கமும் தம்பதியர் இடையே அதிகமாகும். மாத இறுதியில் சுக்கிரன் பத்தாம் வீட்டில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். சுக்கிரன் சஞ்சாரம் சிம்மம் ராசிக்காரர்களுக்கு மாளவியா யோகத்தை தரப்போகிறது. வீட்டில் கணவன் மனைவி இடையே அன்பும் புரிதலும் நேசமும் அதிகரிக்கும். குருவின் பார்வையும் உங்க ராசியின் மீது விழுவதால் உற்சாகம் கூடும்.

துலாம்

துலாம்

மார்ச் மாதம் துலாம் ராசிக்காரர்களுக்கு சந்தோஷமான மாதம். ராசிநாதனின் பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது. உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் உள்ள சுக்கிரன் மீது உங்க குடும்ப ஸ்தான அதிபதியும் களத்திர ஸ்தான அதிபதியுமான செவ்வாயின் பார்வை விழுகிறது. திருமண பேச்சுவார்த்தை நல்ல முறையில் முடிவடையும். நீங்க தைரியமாக முயற்சி செய்து வெற்றி பெறலாம். மன்மதன் அம்பு உங்க மனதில் பாயும். காதல் கணையால் உங்கள் கண்களில் மனதிற்கு பிடித்தவரை பார்க்கும் நேரம் வந்து விட்டது.

கும்பம்

கும்பம்

கும்பம் ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் சுக்கிரனால் சந்தோஷ சம்பவங்கள் அதிகம் நடைபெறப்போகிறது. இந்த மாதம் கல்யாண யோகம் வந்துவிட்டது. திருமண பேச்சுவார்த்தையை மாத முற்பகுதியில் ஆரம்பித்து விடுங்கள். மாசி மாதத்திலேயே நிச்சயத்தை முடித்து விட்டால் சித்திரை வைகாசியில் கல்யாணத்தை முடித்து விடலாம். சிங்கிள்ஸ் ஆக இருந்தவர்கள் இந்த மாதம் கமிட்டட் என்று ஸ்டேட்டஸ் போடும் காலம் வந்து விட்டது.

மீனம்

மீனம்

குடும்ப ஸ்தானத்தில் உள்ள சுக்கிரன் மீது தொழில் ஸ்தானத்தில் உள்ள செவ்வாயின் மீது விழுகிறது. செவ்வாய் இடப்பெயர்ச்சியாகி லாப ஸ்தானத்திற்கு வருகிறார். செவ்வாயின் பார்வை உங்க குடும்ப ஸ்தானத்தின் மீது விழுகிறது முயற்சி ஸ்தானத்தின்மீதும் விழுகிறது. இந்த கிரகங்களின் பார்வை வீட்டில் தம்பதியர் இடையே நெருக்கத்தையும் காதலையும் உருவாக்கும். இந்த மார்ச் மாதம் மீனம் ராசிக்காரர்களுக்கு வசந்தத்தை வீட்டிற்கு கொண்டு வரப்போகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+