Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மார்ச் மாத ராசிபலன் 2022: சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு மனமகிழ்ச்சி நிறைந்த மாதம்

மார்ச் மாதம் நவகிரகங்களின் சஞ்சாரம் கூட்டணியால் சிம்மம், கன்னி ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும், அதிர்ஷ்டம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சூரியபகவான் கும்ப ராசியில் பாதி நாட்களும் மீன ராசியில் பாதி நாட்களும் பயணம் செய்கிறார். சனி, செவ்வாய், சுக்கிரன்,புதன் என கிரகங்கள் மகர ராசியில் இணைந்திருக்கின்றன. ராகு ரிஷபத்திலும் கேது விருச்சிக ராசியிலும் பயணம் செய்கின்றன. கிரகங்களின் கூட்டணி பார்வையால் சிம்மம், கன்னி ராசிகளில் பிறந்தவர்கள் இந்த மாதம் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.

மார்ச் 6ஆம் தேதி புதன் பெயர்ச்சி நிகழப்போகிறது. மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி. மார்ச் 24ஆம் தேதி மீன ராசிக்கு குரு பகவான் இடப்பெயர்ச்சி அடைகிறார். 15ஆம் தேதி சூரியன் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.

மழை காலமும் பனி காலமும் முடிந்து இன்னும் சில நாட்களில் வசந்த காலம் தொடங்கப்போகிறது. மாசி, பங்குனி இணைந்த மார்ச் மாதத்தில் சிம்மம் மற்றும் கன்னி ராசிகளில் பிறந்தவர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும். பண வரவு வருமா? வேலையில் புரமோசன் கிடைக்குமா என்று பார்க்கலாம்.

 சிம்ம ராசி

சிம்ம ராசி

சூரியனை பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே, மார்ச் மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராசிக்கு நான்கில் கேது, ஆறாம் வீட்டில் சனி, செவ்வாய், சுக்கிரன், புதன் என கிரகங்கள் கூட்டணி சேர்ந்துள்ளன. ஏழாம் வீட்டில் சூரியன், குரு, பத்தாம் வீட்டில் ராகு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. ருண ரோக சத்ரு ஸ்தானம் வலுவடைந்துள்ளது. இந்த மாதம் நிறைய நன்மைகள் நடைபெறும். எதிரிகள் தொல்லை நீங்கும். நோய் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஒன்றாம் அதிபதியும் ஐந்தாம் வீட்டு அதிபதியும் இணைந்திருப்பதால் குல தெய்வ அருள் கிடைக்கும்.

பண வரவு வரும்

பண வரவு வரும்

நல்ல தன வரவு வரும். பதவி உயர்வு ஊதிய உயர்வு கிடைக்கும். வேலையில் திடீர் இடமாற்றங்கள் ஏற்படும். புகழும் செல்வம் செல்வாக்கும் அதிகரிக்கும். ராசி அதிபதியுடன் குரு இணைந்து பார்வையிடுகிறார். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் திறன் அதிகரிக்கும். வெளிநாடு வெளியூர் சென்று படிக்க வாய்ப்பு வரும். 15ஆம் தேதிக்கு மேல் சூரியன் எட்டாம் வீட்டிற்கு செல்வதால் கவனம் தேவை. கணவன் மனைவிக்கு இடையே சில ஊடல்கள் வந்து போகும்.

ஆரோக்கியத்தில் அக்கறை தேவை

ஆரோக்கியத்தில் அக்கறை தேவை

புதிய தொழில் ஆரம்பித்தல் அல்லது முதலீடு செய்தல் போன்றவற்றை தவிர்த்தல் நன்மை பயக்கும். வியாபாரத்தில் போட்டி பொறாமை அதிகம் காணப்படும். கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
சரியான நேரத்தில் சாப்பிடுங்கள். சத்தான உணவுகளை சாப்பிடுங்கள். தோல் நோய்கள் வர வாய்ப்பு உள்ளது சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. வெற்றிகள் அதிகரிக்க நீங்கள் குல தெய்வ வழிபாடு செய்வது நல்லது.

கன்னி

கன்னி

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, இந்த மாத நவ கிரகங்களின் பயணங்களைப் பார்த்தால் ராசிக்கு மூன்றாம் வீட்டில் கேது, ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி,செவ்வாய், புதன், சுக்கிரன், ஆறாம் வீட்டில் சூரியன், குரு, எட்டாம் வீட்டில் ராகு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. இந்த மாதத்தில் உங்களுக்கு அற்புதங்கள் அதிகம் நடைபெறும். குல தெய்வ அருள் நிறைந்த மாதம். வேலை தொழிலில் நல்ல உயர்வு உண்டாகும் தன வருமானம் அதிகரிக்கும்.

திருமணம் கை கூடி வரும்

திருமணம் கை கூடி வரும்

பிள்ளைகள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சி ஏற்படும்.பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி தேடி வரும். வீட்டில் கெட்டி மேளச்சத்தம் கேட்கும். செவ்வாய் சுக்கிரன் கூட்டணியால் இளைஞர்களுக்கு மனதில் காதல் மணியடிக்கும். புதிய தொழில் தொடங்குவீர்கள். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். புதன் சுக்கிரன் இணைந்திருப்பது யோகம். வங்கி லோன் கிடைக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பண வருமானம் இரட்டிப்பாகும். புதிய வாய்ப்புகளை
நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

வெற்றிகரமான மாதம்

வெற்றிகரமான மாதம்

பிசினஸ் வளர்ச்சியடையும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்களுக்கு புதிய முயற்றி திருவினையாக்கும். மூத்த உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வேலையில் மாற்றம் ஏற்படும். வெளிநாடு செல்ல நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு தேடி வரும். அப்பாவின் நலத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும். உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். மொத்தத்தில் இந்த மாதம் மனமகிழ்ச்சி நிறைந்த சிறப்பான மாதமாக மார்ச் மாதம் அமைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+