மார்ச் மாத ராசிபலன் 2023: நினைத்தது பலிக்கும்..எந்த ராசிக்காரருக்கு அதிசயங்கள் நடக்கும் தெரியுமா?
மார்ச் மாதம் நவகிரகங்களின் சஞ்சாரம் கூட்டணியால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும், அதிர்ஷ்டம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
சென்னை: வசந்த காலம் பிறக்கப்போகிறது.. மார்ச் மாதத்தில் சூரிய பகவான் கும்பம், மீன ராசியில் பயணம் செய்வார். குரு பகவான் மீன ராசியிலும் சனி பகவான் கும்ப ராசியிலும் பயணம் செய்ய, ராகு மேஷத்திலும் கேது துலாம் ராசியிலும் பயணம் செய்வார்கள். செவ்வாய், சுக்கிரன்,புதன் ஆகிய கிரகங்களும் வரிசையாக இடப்பெயர்ச்சியாகி கிரகங்களுடன் கூட்டணி சேருகின்றன. நவ கிரகங்களின் பயணம் பார்வை ஆகியவைகளைப் பொறுத்து மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே.. மார்ச் மாதத்தில் நவகிரகங்களின் பயணத்தை பார்த்தால் லாப ஸ்தானத்தில் சூரியன், சனி இணைந்திருக்கிறார். விரைய ஸ்தானத்தில் சுக்கிரனும் குருவும் இணைந்து பயணம் செய்கின்றனர். ராசி நாதன் செவ்வாய் பகவான் 2ஆம் வீட்டில் இருந்து 13 ஆம் தேதி 3ஆம் வீடான மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். சுக்கிர பகவான் 12ஆம் தேதி இடப்பெயர்ச்சியாகி மேஷ ராசியில் ராகு உடன் இணைகிறார். மாத பிற்பகுதியில் சூரியன் இடப்பெயர்ச்சியாகி விரைய ஸ்தானத்தில் குரு பகவானுடன் இணைகிறார்.
இந்த மாதம் முற்பகுதியில் சுப விரையங்கள் அதிகரிக்கும். திருமணம் சுப காரியம் கைகூடி வரும். வேலை செய்யும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வேலைப்பளு அதிகரிக்கும். மதிப்பு மரியாதை கூடும். புரமோசனும் சம்பள உயர்வும் அதிகரிக்கும். பல வழிகளில் இருந்தும் பணம் வரும். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் வேலை செய்ய வேண்டியிருக்கும்.

வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளுடன் கார சார விவாதங்கள் வந்து போகும். புதிய வேலை கிடைக்கும். கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைப்பதால் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
வேலை விசயமாக வெளியூர் பயணங்கள் செல்வீர்கள். நிறைய பண வரவு வரும். திருமணம் சுப காரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடிவுக்கு வரப்போகிறது. சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். தைரியம் தன்னம்பிக்கை கூடும். வைகாசி மாதத்திற்கு மேல் திருமண தேதி குறிப்பது நல்லது. கணவன் மனைவி இடையேயான புரிதல் அதிகரிக்கும். நெருக்கம் கூடி வரும். மார்ச் 16ஆம் தேதிக்கு மேல் நோய்கள் நீங்கும் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். வெளியிடங்களில் பொறுமையும் நிதானமும் தேவை. வாயைக் கொடுத்து வம்பாக மாட்டிக்கொள்ளாதீர்கள். மீன ராசியில் சூரியன் புதன் குரு கூட்டணியால் மாணவர்களுக்கு அற்புதமான கால கட்டம் உள்ளது. நன்றாக படித்து தேர்வு எழுதுவது அவசியம். பெண்களுக்கு மார்ச் மாதம் அதிசயங்களை நிகழ்த்தக்கூடிய மாதமாக உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications