மார்ச் மாத ராசிபலன் 2023: ராஜ யோக காலம்..பண மழை..2 ராசிக்காரர்களுக்கு கை கொடுக்கும் கிரகங்கள்
மார்ச் மாதம் நவகிரகங்களின் சஞ்சாரம் கூட்டணியால் ரிஷபம், மிதுனம் ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும், அதிர்ஷ்டம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
சென்னை: மார்ச் மாதத்தில் சூரிய பகவான் கும்பம், மீன ராசியில் பயணம் செய்வார். குரு பகவான் மீன ராசியிலும் சனி பகவான் கும்ப ராசியிலும் பயணம் செய்ய, ராகு மேஷத்திலும் கேது துலாம் ராசியிலும் பயணம் செய்வார்கள். செவ்வாய், சுக்கிரன்,புதன் ஆகிய கிரகங்களும் வரிசையாக இடப்பெயர்ச்சியாகி கிரகங்களுடன் கூட்டணி சேருகின்றன. நவ கிரகங்களின் பயணம் பார்வை ஆகியவைகளைப் பொறுத்து ரிஷபம், மிதுனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

ரிஷப ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு சூரியன் 10,11ஆம் வீட்டில் பயணம் செய்வார். ராகு விரைய ஸ்தானத்திலும் கேது ஆறாம் வீட்டிலும் பயணிக்கின்றனர். குரு லாப வீட்டிலும் சனி தொழில் ஸ்தானத்திலும் பயணம் செய்கிறார். உங்கள் தசாபுத்தி நன்றாக இருந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். சுக்கிரன் லாப ஸ்தானத்தில் இருந்து விரைய ஸ்தானத்திற்கு வருவதால் புதிய முக்கிய முடிவுகளை எடுக்காதீர்கள். திருமணம் சுப காரியம் தொடர்பாக முடிவு எடுப்பதற்கு இது ஏற்ற நேரமல்ல பொறுமையை கடைபிடிக்கவும். செவ்வாய் பகவான் மாத பிற்பகுதியில் ராசியில் இருந்து இரண்டாம் வீட்டிற்கு செல்லப்போகிறார். பேசும் வார்த்தைகளில் கவனமும் நிதானமும் தேவைப்படும். வேலையில் புதிய மாற்றங்கள் கிடைக்கும். நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். தொழில் ஸ்தானத்தில் புதன், சனி கூட்டணியால் பண வரவு அதிகரிக்கும். புதிய நல்ல வாய்ப்புகள் தேடி வரும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். திருமணம் சுப காரியம் உற்சாகத்தை தரும். மார்ச் 13ஆம் தேதி முதல் திருமணம் சுப காரியம் தொடர்பாக பேசலாம். பெண்களுக்கு உற்சாகமான மாதம் என்றாலும் சுக்கிரன் ராகு உடன் இணைவதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். கண்களில் கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்டுங்கள். நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெறுவீர்கள். சத்தான உணவுகளை சாப்பிடுங்கள்.
மிதுன ராசிக்காரர்களே உங்களுக்கு மார்ச் மாதத்தில் நிறைய நன்மைகள் நடைபெறும். அஷ்டமத்து சனி பிரச்சினை முடிவுக்கு வந்து விட்டது. ஹம்ச யோகமும், மாளவியா யோகம் தேடி வந்துள்ளது. ராஜயோகம் கை கூடி வரப்போகிறது. எதிர்பார்க்காத திடீர் அதிர்ஷ்டங்கள் தேடி வரும். சுக்கிரன் லாப ஸ்தானத்திற்கு வரப்போவதால் செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் முடிவுக்கு வரும். திருமணம் தொடர்பாக பேசி முடிக்கலாம். பெண்களுக்கு நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான யோகம் வந்து விட்டது. நல்ல நேரம் கைகூடி வந்து விட்டது. எதிர்காலத்திற்காக மாணவர்கள் திட்டமிடுவீர்கள். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். மன நிம்மதி அதிகரிக்கும். மார்ச் மாதத்தில் செய்யும் முயற்சிகளுக்கு வெற்றிகள் தேடி வரும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications