கும்ப ராசியில் செவ்வாய் சனி கூட்டணி.. மார்ச் மாதத்தில் பகையாளிகள் இணைவது யாருக்கு பாதிப்பு
சென்னை: மார்ச் மாதம் வசந்த காலம் தொடங்கும் மாதம். இந்த மாதத்தில் நெருப்பு கிரகமான செவ்வாய் தனது பகை கிரகமான சனியோடு கும்ப ராசியில் இணையப்போகிறார். மகர ராசியில் உச்சம் பெற்றுள்ள செவ்வாய் மார்ச் 15ஆம் தேதி முதல் கும்ப ராசியில் ஆட்சி பெற்றுள்ள சனியோடு இணையப்போகிறார். பகை கிரகங்களின் கூட்டணி யாருக்கு சாதகமாக இருக்கும் யாருக்கு பாதகமாக இருக்கும் என்று பார்க்கலாம்.
ஆரோக்கியம்: செவ்வாய் பகவான் ஒரு மனிதனுக்கு உடல் வலிமை, ரத்த ஒட்டம், நோய் எதிர்ப்பு திறன், அதிகாரப் பதவி, உடன் பிறப்பு, நிர்வாக திறன் போன்றவற்றிற்கு காரகனாக இருக்கிறார். நம் உடலில் ரத்தத்திற்கும், வெப்பத்திற்கும் காரணமாகவும், காரகமாகவும் இருப்பவர் செவ்வாய். ரத்த ஓட்டம் சீராக இருக்கவும், ரத்த அணுக்கள் வேறு சில தன்மைகள் குறையாமலும், கூடாமலும் இருக்க செவ்வாய்தான் காரணம். மூளைக்கு ஆற்றலும், சக்தியும் தரக்கூடிய கிரகம்.

வேலை வாய்ப்பு: லக்னத்திற்கு பத்தாம் இடமான ஜீவன ஸ்தானத்திற்கு செவ்வாயின் தொடர்பு ஏற்பட்டால் அதாவது, பத்தாம் வீட்டில் செவ்வாய் இருப்பது அல்லது பார்ப்பது, பத்தாம் அதிபதியுடன் சேர்க்கை, பார்வை பரிவர்த்தனை பெற்று இருப்பது உத்யோகத்திற்கு பலம் தரும் அமைப்பாகும். முயற்சி செய்த உடனேயே நல்ல வேலை கிடைத்துவிடும்.
மேஷம்: உங்கள் ராசி நாதன் செவ்வாய் 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சனியுடன் இணையப்போகிறார். அற்புதமான கால கட்டம். ராசி அதிபதி செவ்வாய் சனியோடு சேர்ந்தாலும் பணம் மழையாக பொழியும். காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது என்று பாடக்கூடிய கால கட்டமாகும். வேலையில் இருப்பவர்களுக்கு உயர் பதவி கிடைக்கும். எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் துறைகளில் பணி செய்பவர்களுக்கு நன்மைகள் அதிகம் நடைபெறும்.
ரிஷபம்: செவ்வாய் உங்கள் ராசிக்கு 10 ஆம் வீடான தொழில் ஸ்தானத்தில் சனியோடு இணையப்போவதால் உற்சாகமாக காணப்படுவீர்கள் என்றாலும் பணியில் கவனம் தேவை. பணப்புழக்கம் தாரளமாக இருக்கும். கூடவே செலவும் அதிகரிக்கும் என்பதால் சிக்கனமாக இருக்கவும். தம்பதியர் இடையே ரொமான்ஸ் உணர்வுகள் அதிகரிக்கும். கோபம் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் ஆலய வழிபாடு மன அமைதியை தரும். மலைமேல் இருக்கும் முருகனை வழிபட மேலும் நன்மைகள் கிடைக்கும்.
மிதுனம்: உங்கள் ராசிக்கு 9 ஆம் வீட்டில் பாக்கிய ஸ்தானத்தில் சனியுடன் கூட்டணி சேரும் செவ்வாயினால் சின்னச் சின்ன பிரச்சினைகள் வர வாய்ப்பு உண்டு. விபத்தில் சிக்காமல் தவிர்க்க ரத்த தானம் செய்யுங்கள். கையில் இருந்த பணம் கரையக்கூடும் என்பதால் கவனமாக செலவு செய்யவும். சின்னச் சின்ன பிரச்சினைகள் எட்டிப்பார்க்கும். உடன்பிறப்புகளுடன் வாக்குவாதங்கள் வந்து செல்லும் உரிய பரிகாரம் செய்தால் பலன் கிடைக்கும். செவ்வாய் கிழமைகளில் சிவப்பு நிற ஆடைகளை அணியலாம்.
கடகம்: எட்டாம் வீட்டில் சனியோடுஇணைந்து பயணம் செய்யப்போகும் செவ்வாயினால் எதைக்கண்டாலும் பயம் உண்டாகும். சிரமமான கால கட்டம்தான் என்றாலும் பரிகாரம் செய்தால் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். தேவையற்ற கோபமும் எரிச்சலும் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் மீதே கோபப்பட்டு சண்டைக்கு செல்வீர்கள். சின்னச் சின்ன உடல் உபாதைகள் வந்து செல்லும். செவ்வாய் தலமாக திகழும் பழனிக்கு சென்று மலைமேல் முருகனை தரிசனம் செய்து வர பிரச்சினைகள் தீரும்.
சிம்மம்: களத்திரஸ்தானமான ஏழாம் வீட்டில் சனியோடு கூட்டணி சேரப்போகிறார் செவ்வாய் பகவான். வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே சண்டை சச்சரவுகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் பலரின் செயல்கள் எரிச்சலை தரும். வேலைப்பளு அதிகரிக்கும். கண்களில் எரிச்சலுடன் கூடிய வலி வந்து நீங்கும். உடல் சூட்டினால் வயிறு வலி வரும். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. விட்டுக்கொடுத்து செல்லவும்.
கன்னி: ஆறாம் வீட்டில் சனியோடு செவ்வாய் அமர்வது அற்புதமான கால கட்டம். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். புதிய இடத்திற்கு மாற வாய்ப்பு உள்ளது. வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனுடன் கூடிய இடமாற்றம் ஏற்படும். சிலர் புதிய தொழில்களை தொடங்குவார்கள். திருச்செந்தூர் முருகனை வியாழக்கிழமைகளில் வணங்க எண்ணற்ற நன்மைகள் நடைபெறும்.
துலாம்: பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உள்ள சனியோடு செவ்வாய் இணையப்போகிறார். பிள்ளைகளால் தொல்லைகள் ஏற்படும். உடல் உபாதைகளும் எதிர்ப்புகளும் ஏற்படும் என்றாலும் அதனை சமாளிக்கும் தைரியம் பிறக்கும். அதிக செலவுகளினால் அவதிகள் ஏற்படும். வழக்கு விவகாரங்களில் அதிக எச்சரிக்கை தேவை. பிள்ளைகளை சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். பண விசயங்களில் கவனம் தேவை.
விருச்சிகம்: நான்காம் வீட்டில் செவ்வாய் பகவான் சனியுடன் இணைந்து பயணம் செய்யப்போவதால் வீடு, நிலம் தொடர்பான பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். உடல் உபாதைகள் ஏற்படும். மனதில் சஞ்சலம் பிறக்கும். கடன் தொல்லைகள் அதிகரிக்கும் என்பதால் இந்த கால கட்டத்தில் லட்சுமி நரசிம்மரை வணங்கி வர மனக்குழப்பங்களும், போராட்டங்களும் நீங்கும்.
தனுசு: மூன்றாம் வீட்டில் சனி உடன் செவ்வாய் கூட்டணி சேரப்போவதால் முயற்சிகள் வெற்றியடையும். எங்கிருந்தாவது பணம் கொட்டும். பங்குச்சந்தைகள் மூலம் லாபம், மறைமுகமான வருமானம் கிடைக்கும் கால கட்டம் இதுவாகும். வருமானம் அதிகரித்து பாக்கெட்டில் பணம் நிறைய மகிழ்ச்சியும் அதிகரிக்கும். வீடு, வாகனம், நிலம் வாங்க ஏற்ற கால கட்டம் என்பதால் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ளவும்.
மகரம்: உங்கள் ராசியில் பயணம் செய்யும் செவ்வாய் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானத்தில் சனியோடு கூட்டணி சேரப்போகிறார். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. குடும்பத்தில் சின்னச் சின்ன சண்டைகள், சச்சரவுகள் ஏற்படும். கலக்கமும், கலவரமும் அதிகரிக்கும். பணம், நகை போன்ற விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வையுங்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். யாரிடமும் கொடுத்து ஏமாந்து போக வேண்டாம். முருகப்பெருமானுக்கு செவ்வாய்கிழமைகளில் பாலபிஷேகம் செய்ய பாதிப்புகள் குறையும்.
கும்பம்: ராசி சனியோடு செவ்வாய் இணையப்போகிறார். பகையாளி சனியின் வீட்டில் செவ்வாய் கூட்டணி சேருவது சிறப்பானதல்ல. வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. அலுவலகத்தில் உள்ளவர்கள் செய்யும் வேலையில் கவனமாக இருக்கவும். பிரச்சினைகள் வருவது சகஜம்தான் டென்சனாகாமல் இருப்பது நல்லது. சனி, செவ்வாய்கிழமைகளில் இரவு நேர பயணத்தை தவிர்ப்பது நல்லது. பழனிமலை ஆண்டவரை தரிசனம் செய்ய தீமைகள் விலகி நன்மைகள் அதிகம் நடைபெறும்.
மீனம்: விரைய ஸ்தானமான 12வது வீட்டில் உள்ள சனியோடு செவ்வாய் பயணம் செய்யப்போகிறார். உடல்நலப்பிரச்சினைகள் அவ்வப்போது எட்டிப்பார்க்கும். வேலையில் குறை சொல்பவர்களைப் பற்றி கண்டு கொள்ள வேண்டாம். இரவு நேர பயணத்தை தவிர்க்கவும். உங்களின் வேலையில் பிறரை தலையிட விட வேண்டாம். இந்த காலகட்டத்தில் ரத்த தானம் செய்யுங்கள் மிகப்பெரிய பாதிப்பில் இருந்து விடுபடலாம்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications