மார்ச் மாத ராசி பலன் 2024: 18 ஆண்டுகளுக்குப் பின் கிரகங்களின் அபூர்வ சேர்க்கை.. தேடி வரும் ஜாக்பாட்
சென்னை: மார்ச் மாதத்தில் சூரியன் கும்பம், மீனம் ராசிகளில் சஞ்சரிக்கிறார். இந்த மாதம் புதன், சுக்கிரன், செவ்வாய் பெயர்ச்சி நடைபெறுகிறது. சூரியன் கும்ப ராசியில் உதயமாகிறார். முழு பலனையும் தரப்போகிறார் சூரிய பகவான். கும்பம், மீனம் ராசிகளில் புது கூட்டணி உருவாகிறது. இந்த கிரகப்பெயர்ச்சியால் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
துலாம்: உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டில் சூரியன், சனி, புதன் இணைந்திருக்கின்றன. மாத பிற்பகுதியில் ராகு உடன் சூரியன் இணையப்போகிறார். நினைத்த காரியம் நிறைவேறும். சுப காரியங்கள் எளிதில் கைகூடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலனை அடைவீர்கள். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். குருவின் பார்வை இருப்பதால் புரமோசன் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும்.

விருச்சிகம்: மாத முற்பகுதியில் சூரியன் நான்காம் வீட்டில் சனியோடு இணைந்திருக்கிறார். உங்கள் வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். பிள்ளைகள் மூலம் சந்தோஷ செய்திகள் தேடி வரும். சகோதரர்களால் சந்தோஷம் அதிகரிக்கும். அடிக்கடி வெளியூர் செல்வீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் உண்டாகும், சிறு உல்லாச பயணம் செல்வீர்கள். வீடு, வேலை மாறும் சூழ்நிலை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் மாத முற்பகுதியில் மூன்றாம் வீட்டில் உச்சம் பெற்று பயணம் செய்கிறார். கிரகங்கள் சாதகமான நிலையில் இருப்பதால் ராஜாதி ராஜயோகம்தான் இந்த மாதம் வேலை செய்யும் இடத்தில் திடீர் புரமோசன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வரும் பண வருமானம் இரட்டிப்பாகும். செய்யும் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். அர்த்தாஷ்டம சனியாக இருப்பதால் இல்லத்தரசிகள் கவனமாக இருப்பது அவசியம்.
தனுசு: உங்கள் ஜென்ம ராசிக்கு 2ஆம் வீட்டில் செவ்வாய் சுக்கிரன் இணைந்திருப்பது சிறப்பு மாதமுற்பாதியில் 3ஆம் வீட்டில் சூரியன் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பேசும் வார்த்தைகளில் கோபத்தை கட்டுப்படுத்தவும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எடுக்கும் காரியங்களில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிடைக்கும். தொழில் வியாபார ரீதியாக ஓரளவுக்கு முன்னேற்றங்கள் உண்டாகும் எதிர்பார்க்கும் லாபங்களும் கிடைக்கும். வேலையில் இருப்பவர்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்களின் கல்வி திறன் சிறப்பாகவே இருக்கும்.
மகரம்: சூரியன் சனியோடு இணைந்து ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்வது சிறப்பு. உங்கள் ராசியில் செவ்வாய் சுக்கிரன் சேர்ந்திருப்பதால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும். மாத பிற்பாதியில் 3ஆம் வீட்டிற்கு சூரியன் இடப்பெயர்ச்சியாகி ராகு உடன் பயணம் செய்யப்போவதால் புதிய முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விட முடியும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முன் கோபத்தை குறைப்பது நல்லது. உஷ்ண கிரகங்கள் பயணத்தால் முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
கும்பம்: உங்கள் ராசியில் சூரியன், சனி இணைந்து பயணம் செய்கின்றனர். 12ஆம் வீட்டில் செவ்வாய் சூரியன் பயணம் செய்வதால் சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். இந்த மாதம் அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணம் கொடுக்கல் - வாங்கல் விசயம் சாதகமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். வேலையில் இருப்பவர்கள் கவனத்தோடு செயல்படுவது நல்லது.
மீனம்: விரைய ஸ்தானத்தில் பயணம் செய்யும் சூரியன் மாத பிற்பகுதியில் ராகு உடன் இணைந்து உங்கள் ராசிக்கு வரப்போகிறார். சுக்கிரன் 11ஆம் வீட்டில் செவ்வாயுடன் பயணம் செய்வதால் அசையும் அசையா சொத்துக்கள் வாங்கலாம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் உடனே சரியாகி விடும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும்.












Click it and Unblock the Notifications