Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

March matha rasi palan 2020: மார்ச் மாதம் இந்த 2 ராசிக்காரங்களும் கல்யாண யோகம் வந்திருச்சு

மார்ச் மாதம் சூரியன் கும்பம் ராசியிலும் மீனம் ராசியிலும் சஞ்சரிக்கிறார். கன்னி மற்றும் துலாம் ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் சஞ்சாரம் ராசி மாற்றங்களினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்

Subscribe to Oneindia Tamil

மதுரை: சென்னை: மார்ச் மாதம் பனிக்காலம் முடிந்து வசந்த காலம் துவங்கப்போகிறது. மார்ச் மாதத்தில் மாசி மாதத்தின் பிற்பகுதியும், பங்குனி மாதத்தின் முற்பகுதியும் இணைகிறது. மார்ச் மாதம் சூரியன் கும்பம், மீனம் ராசிகளில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் குரு, கேது, செவ்வாய், மிதுனத்தில் ராகு மேஷம் ராசியில் சுக்கிரன் மகரம் ராசியில் சனி , கும்பம் ராசியில் புதன் வக்ர நிலையில் இருக்கிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரம் ராசி மாற்றங்களினால் கன்னி மற்றும் துலாம் ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

கிரகங்கள் இந்த மாதம் ராசி மாற்றம் அடைகின்றன. மார்ச் 10ஆம் தேதி புதன் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் சஞ்சரிக்கிறார். 14ஆம் தேதி சூரியன் மீனம் ராசிக்கு மாறுகிறார். தனுசு ராசியில் குரு உடன் இருக்கும் செவ்வாய் 22ஆம் தேதி மகரம் ராசிக்கு மாறுகிறார். மாத பிற்பகுதியில் செவ்வாய் மகரம் ராசியில் உச்சம் பெற்று சனியோடு இணைகிறார். குரு மாத இறுதியில் அதிசாரமாக சஞ்சரித்து மகரம் ராசியில் உள்ள செவ்வாய், சனியோடு இணைகின்றார். மாத இறுதியில் 28ஆம் தேதி சுக்கிரன் ரிஷபம் ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார்.

சூரியன் இடப்பெயர்ச்சி, செவ்வாய், சனி சேர்க்கை கிரகங்களின் பார்வையால் சில ராசிக்காரர்களுக்கு நன்மையும், சிலருக்கு பாதிப்பும் ஏற்படும். குருவின் அதிசார சஞ்சாரமும் சில ராசிக்காரர்களுக்கு மாற்றங்களை ஏற்படுத்தும். கன்னி, துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தில் என்னென்ன நன்மைகள் நடக்கும் என்று பார்க்கலாம்.

 மாணவர்கள் கவனம்

மாணவர்கள் கவனம்

கன்னி ராசிக்கு சூரியன் ஆறில் சூரியன் புதன் சஞ்சரிக்கிறார். புதிய வேலைகள் போராட்டங்களுக்கு பிறகு நடக்கும். சுக்கிரன் 8 ல் இருந்து தன ஸ்தானத்தை பார்ப்பபதால் தன வரவு உண்டு. மாத பிற்பகுதியில் சூரியன் ஏழாம் வீட்டிற்கு மாறுகிறார். மாத இறுதியில் குரு, செவ்வாய், சனி ஐந்தாம் வீட்டில் இணைகின்றனர். செவ்வாய் சனி சேர்க்கை ஐந்தாம் வீட்டில் சேர்வதால் பிள்ளைகள் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். பாகப்பிரிவினையில் பிரச்சினை வரலாம். சிலர் சொத்துக்களை விற்கலாம். மாணவர்கள் பெரியவர்கள் ஆசிரியர்களின் ஆலோசனைகளை கேட்டு முடிவு எடுங்க. தேர்வு நேரம் என்பதால் நன்றாக படிங்க தெளிவாக எழுதி பாருங்க. எதையும் யோசித்து முடிவு பண்ணுங்க. மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்க. சுறுசுறுப்பாக படித்தால் மட்டுமே தேர்வில் வெற்றி பெற முடியும். இல்லாவிட்டால் உங்களுக்கு கஷ்டம்தான். படிப்பு விசயத்தில் அதிகமாக உழைக்கணும்.

 தொழிலில் லாபம்

தொழிலில் லாபம்

மாத ஆரம்பத்தில் நிதி சிக்கல்கள் வரலாம். முதலீடுகளை தவிர்த்து விடுங்கள். உங்க தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள். உங்க தன்னம்பிக்கை இந்த மாதம் குறையும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். மாத பிற்பகுதியில் புதிய தொழில் வேலை அமையும். வருமானத்தில் தடைகள் ஏற்பட்டு விலகும். மாத இறுதியில் செய்யும் தொழிலில் லாபம் அதிகமாகும். திருமண பேச்சுவார்த்தையில் தடங்கல்கள் வரலாம் எனவே பொறுமையாக பேசி முயற்சி பண்ணுங்க நல்லதே நடக்கும்.

 திருமண யோகம்

திருமண யோகம்

மாத கடைசியில் குரு நீச பங்க ராஜயோகம் அடைந்து உங்க ராசியை பார்க்கிறார். இதனால் உங்க ராசிக்கு திருமண யோகம் வரப்போகிறது. வேலை தேடுபவர்களுக்கு ரொம்ப சந்தோஷமான மாதம் இண்டர்வியூ நன்றாக இருக்கும். எதையும் தைரியமாக செய்வீர்கள். தொழில் வியாபாரம் ரொம்ப நன்றாக இருக்கும். லாபங்களும் வரும். பெண்கள் குடும்பத்தில் இருப்பவர்களுடன் பேசும் போது கவனமாக பேசுங்க. உங்க பேச்சில் கோபம் வேண்டாம். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

 கடன்கள் அடைபடும்

கடன்கள் அடைபடும்

மார்ச் மாதம் துலாம் ராசிக்காரர்களுக்கு சந்தோஷமான மாதம். ராசிநாதனின் பார்வை உங்க ராசிக்கு ஏழாம் வீட்டின் மீது விழுகிறது. புதன் ஐந்தாம் வீட்டில் வக்ரமடைந்து பின்னர் வக்ர நிவர்த்தி அடைகிறார். மாணவர்களுக்கு இது ரொம்ப நல்ல மாதம் படிப்பில் உற்சாகம் அதிகமாகும் தேர்வு நேரம் என்பதால் நன்றாக படிப்பீர்கள். எதிர்கால மேற்படிப்பு பற்றி நன்றாக திட்டமிடலாம். மாணவர்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம் வரும். விசா கிடைக்கும். பாக்ய ஸ்தானத்தில் உள்ள ராகுவின் மீது குருவின் பார்வை விழுவதால் நிறைய பண வருமானம் வரும்.

 பயணங்களில் கவனம்

பயணங்களில் கவனம்

அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். 22ஆம் தேதிக்கு மேல் செவ்வாய் மூன்றாம் வீட்டிற்கு நகர்கிறார். சனி, செவ்வாய் சேர்க்கை நான்காம் வீட்டில் சஞ்சரிக்கிறார். சசமகா யோகம் பெற்றுள்ள சனியோடு செவ்வாய் இணைவதால் ராஜயோகம் கிடைக்கும் மாத பிற்பகுதியில் அதிசாரம் பெற்ற குரு செவ்வாய் சனியோடு நான்காம் வீட்டில் இணைகிறார். குரு பகவான் ஏழாம் வீட்டில் இருந்து உங்க ராசிக்கு எட்டாம் வீட்டிற்கு நகர்கிறார். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. பயணங்களில் கவனமாக இருங்க. வண்டி வாகனங்களில் போகும் போது நிதானமாக இருங்க.
வயதானவர்கள் கவனமாக இருங்க. உங்களின் தன்னம்பிக்கை அதிகமாகும்.

 சந்தோஷமான மாதம்

சந்தோஷமான மாதம்

மாத பிற்பகுதியில் சூரியன் ஆறாம் வீட்டிற்கு நகர்கிறார். உங்க கடன்கள் அடைபடும். நான்காம் வீட்டில் அர்த்தாஷ்டம சனியோடு செவ்வாய் இணையப்போவதால் புதிய வேலை மாற்றத்தை கொடுக்கும். அந்த வேலை நல்ல உற்சாகத்தை கொடுக்கும். குருவும் அதிசாரமாக நான்காம் வீட்டில் இணைவதால் எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு பண்ணுங்க. மாத இறுதியில் திருமண பேச்சுவார்த்தை நல்ல முறையில் முடிவடையும். நீங்க தைரியமாக முயற்சி செய்து வெற்றி பெறலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+