March Matha Rasi Palan 2020 மார்ச் மாதம் இந்த 3 ராசிக்காரங்களுக்கும் யோகமான மாதம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மார்ச் மாதம் பனிக்காலம் முடிந்து வசந்த காலம் துவங்கப்போகிறது. மார்ச் மாதத்தில் மாசி மாதத்தின் பிற்பகுதியும், பங்குனி மாதத்தின் முற்பகுதியும் இணைகிறது. மார்ச் மாதம் சூரியன் கும்பம், மீனம் ராசிகளில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் குரு, கேது, செவ்வாய், மிதுனத்தில் ராகு மேஷம் ராசியில் சுக்கிரன் மகரம் ராசியில் சனி , கும்பம் ராசியில் புதன் வக்ர நிலையில் இருக்கிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரம் ராசி மாற்றங்களினால் மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

கிரகங்கள் இந்த மாதம் ராசி மாற்றம் அடைகின்றன. மார்ச் 10ஆம் தேதி புதன் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் சஞ்சரிக்கிறார். 14ஆம் தேதி சூரியன் மீனம் ராசிக்கு மாறுகிறார். தனுசு ராசியில் குரு உடன் இருக்கும் செவ்வாய் 22ஆம் தேதி மகரம் ராசிக்கு மாறுகிறார். மாத பிற்பகுதியில் செவ்வாய் மகரம் ராசியில் உச்சம் பெற்று சனியோடு இணைகிறார். குரு மாத இறுதியில் அதிசாரமாக சஞ்சரித்து மகரம் ராசியில் உள்ள செவ்வாய், சனியோடு இணைகின்றார். மாத இறுதியில் 28ஆம் தேதி சுக்கிரன் ரிஷபம் ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார்.

சூரியன் இடப்பெயர்ச்சி, செவ்வாய், சனி சேர்க்கை கிரகங்களின் பார்வையால் சில ராசிக்காரர்களுக்கு நன்மையும், சிலருக்கு பாதிப்பும் ஏற்படும். குருவின் அதிசார சஞ்சாரமும் சில ராசிக்காரர்களுக்கு மாற்றங்களை ஏற்படுத்தும். மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தில் என்னென்ன நன்மைகள் நடக்கும் என்று பார்க்கலாம்.

சுகமான மாதம்

சுகமான மாதம்

மகரம் ராசிக்கு மார்ச் மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் 12ல் குரு, செவ்வாய், கேது சூரியன் இரண்டாம் வீட்டில் புதனோடு இருக்கிறார். நான்காம் வீட்டில் சுக்கிரன், ஆறாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. மாணவர்களுக்கு கல்வி சார்ந்த முயற்சிகள் வெற்றியை தரும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க. பேசும் வார்த்தைகளில் கவனமாக இருங்க காரணம் சூரியன் வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நீங்க நிதானமாக பேசுங்க. அலுவலகத்திலோ வீட்டிலோ சூடான வார்த்தைகளை பேச வேண்டாம். இந்த மாதம் உங்க ராசிக்கு ஏழரை சனியில் ஜென்ம சனி நடக்கிறது. உங்களுக்கு ரியல் எஸ்டேட் தொழில் சிறப்பாக நடக்கும். சுக்கிரன் உங்களுக்கு நிறைய சுகங்களை தருவார். புதன் வருமானத்தை கொடுப்பார். நிறைய லாபத்தை கொடுப்பார். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகமாகும். படிப்பில் உற்சாகமாக இருப்பீர்கள்.

வெளிநாடு யோகம்

வெளிநாடு யோகம்

மாத பிற்பகுதியில் சூரியன் மூன்றாம் வீட்டிற்கு நகர்கிறார் நீங்க எடுக்கிற முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். 22ஆம் தேதி செவ்வாய் பெயர்ச்சியாகி உங்க ராசியில் உச்சமடைகிறார். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வேலை கிடைக்கும். புதிய வேலை கிடைத்தால் தைரியமாக சேரலாம். வெளிநாடு யோகம் தேடி வருகிறார். விமான பயணம் வெற்றிகரமாக நடைபெறும். சொத்துக்கள் சேரும். சுப பேச்சுவார்த்தைகள் நன்மைகள் முடியும். திருமண முயற்சிகள் சுபமாக கை கூடி வரும் காரணம் உச்சமடைந்த செவ்வாய் உங்க ராசிக்கு ஏழாம் வீடு மற்றும் எட்டாம் வீட்டினை பார்க்கிறார். யோகங்கள் அதிகமாகும். இது அதிர்ஷ்டகரமான மாதம். புதிய வாகனம் வாங்கலாம், வீடு மாறலாம். உங்க தன்னம்பிக்கை அதிகமாகும்.

ஏழரை சனி செலவு

ஏழரை சனி செலவு

கும்பம் ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் சூரியன், புதன் உங்க ராசியில் சஞ்சரிக்கின்றனர். மூன்றாம் வீட்டில் சுக்கிரன், விரைய ஸ்தானத்தில் சனி, லாப ஸ்தானத்தில் குரு, கேது, செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சூரியன் உங்க ராசியில் புதனோடு இணைந்திருக்கிறார். மாணவர்களுக்கு புத்திக்கூர்மை அதிகமாகும். மாத முற்பகுதியில் உங்களுக்கு மேற்படிப்பு தொடர்பான முடிவுகளை எடுப்பீர்கள்.
ஏழரை சனி காலம் ஆரம்பமாகியுள்ளது. விரைய சனி என்பதால் நிறைய விரைய செலவுகள் வந்தாலும் அதை சுப செலவுகளாக மாற்றுங்கள். சிலருக்கு சோதனையான காலமாக இருக்கிறது. மாணவர்களுக்கு படிப்பில் சில பிரச்சினைகள் வரலாம். ஏழரை சனி தொடக்கத்தில் இருப்பவர்களுக்கு சில தடைகள் தாமதங்கள் வரலாம். நிறைய வருமானம் வந்தாலும் நிறைய விரையங்கள் வரலாம்.

யோகமான மாதம்

யோகமான மாதம்

திருமணம் தொடர்பான பேச்சுவார்தைகளை மாத முற்பகுதியில் முடித்து விடுவது நல்லது. மார்ச் 22ஆம் தேதி செவ்வாய் பெயர்ச்சியாகி சனியோடு இணைகிறார். மாத இறுதியில் குருவும் அதிசாரமாக சனியோடு இணைகிறார். நிலம் சொத்துக்களை விற்று கடன்களை அடைப்பீர்கள். குருவின் பார்வையும் சில சந்தோஷங்களை தரும். சுப செலவுகள் ஏற்படும். மாத இறுதியில் சுக்கிரன் ரிஷபம் ராசிக்கு நகரும் போது உங்களுக்கு மாளவியா யோகத்தை தரப்போகிறார். புதிய வீடு வாங்கும் யோகம் வரும் வண்டி வாகனங்கள் வாங்குவீர்கள். மொத்தத்தில் கும்பம் ராசிக்காரர்களுக்கு சுபமான யோகங்களை தரக்கூடிய மாதமாகும். மாத இறுதியில் விரைய ஸ்தானத்தில் கிரகங்கள் இணைவதால் எதிலும் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருங்க பதற்றப்படாதீர்கள். நிதானமாக இந்த மாதத்தை கடந்து விடுங்கள்.

தொழிலில் வளர்ச்சி

தொழிலில் வளர்ச்சி

மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கிரகங்கள் விரைய ஸ்தானத்தில் சூரியன் புதன், லாப ஸ்தானத்தில் சனி, தொழில் ஸ்தானத்தில் குரு, செவ்வாய், கேது, இரண்டாம் வீட்டில் சுக்கிரன், நான்காம் வீட்டில் ராகு என சஞ்சரிக்கின்றன. இந்த மாதம் உங்களுக்கு தர்ம கர்மாதிபதி யோகம் கூடியுள்ளது. உங்களுக்கு முக்கிய கிரகங்கள் கூட்டணி நல்ல முறையில் உள்ளது. தொழிலில் வளர்ச்சி ஏற்படும். வேலையில் மாற்றம் கிடைக்கும். மாத பிற்பகுதியில் சூரியன் உங்க ராசிக்கு வருவது சிறப்பு. புதிய வேலை தேடுபவர்களுக்கு உதவி கிடைக்கும். நண்பர்களின் உதவி தேடி வரும்.

தொழிலில் லாபம் அதிகமாகும்

தொழிலில் லாபம் அதிகமாகும்

உங்களுக்கு தொழிலுக்குத் தேவையான வங்கிக் கடன் கிடைக்கும். தொழில் ஸ்தானத்தில் உள்ள செவ்வாய் 22ஆம் தேதி லாப ஸ்தானத்தில் உள்ள சனியோடு இணைவது சந்தோஷமான இணைவு. பணப்புழக்கம் அதிகமாகும். மாணவர்களுக்கு இந்த மாதம் கல்வியில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தேர்வுகளை நன்றாக எதிர்கொள்வீர்கள். தொழிலில் முதலீடு செய்யுங்கள் லாபம் கிடைக்கும். பண வருமானம் வரும். பூர்வீக சொத்துக்கள் விற்பனை செய்வதன் மூலம் ஆதாயம் கிடைக்கும். குருவின் அதிசார பெயர்ச்சி அற்புதமான பலன்களை கொடுக்கும். சுப பலன்கள் அதிகம் நடைபெறும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+