2020 மார்ச் மாதம் இந்த ராசிக்காரங்களுக்கு காதல் மலரும் கவனம்
மதுரை: மார்ச் மாதம் பனிக்காலம் முடிந்து வசந்த காலம் துவங்கப்போகிறது. மார்ச் மாதத்தில் மாசி மாதத்தின் பிற்பகுதியும், பங்குனி மாதத்தின் முற்பகுதியும் இணைகிறது. மார்ச் மாதம் சூரியன் கும்பம், மீனம் ராசிகளில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் குரு, கேது, செவ்வாய், மிதுனத்தில் ராகு மேஷம் ராசியில் சுக்கிரன் மகரம் ராசியில் சனி , கும்பம் ராசியில் புதன் வக்ர நிலையில் இருக்கிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரம் ராசி மாற்றங்களினால் விருச்சிகம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
கிரகங்கள் இந்த மாதம் ராசி மாற்றம் அடைகின்றன. மார்ச் 10ஆம் தேதி புதன் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் சஞ்சரிக்கிறார். 14ஆம் தேதி சூரியன் மீனம் ராசிக்கு மாறுகிறார். தனுசு ராசியில் குரு உடன் இருக்கும் செவ்வாய் 22ஆம் தேதி மகரம் ராசிக்கு மாறுகிறார். மாத பிற்பகுதியில் செவ்வாய் மகரம் ராசியில் உச்சம் பெற்று சனியோடு இணைகிறார். குரு மாத இறுதியில் அதிசாரமாக சஞ்சரித்து மகரம் ராசியில் உள்ள செவ்வாய், சனியோடு இணைகின்றார். மாத இறுதியில் 28ஆம் தேதி சுக்கிரன் ரிஷபம் ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார்.
சூரியன் இடப்பெயர்ச்சி, செவ்வாய், சனி சேர்க்கை கிரகங்களின் பார்வையால் சில ராசிக்காரர்களுக்கு நன்மையும், சிலருக்கு பாதிப்பும் ஏற்படும். குருவின் அதிசார சஞ்சாரமும் சில ராசிக்காரர்களுக்கு மாற்றங்களை ஏற்படுத்தும். விருச்சிகம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தில் என்னென்ன நன்மைகள் நடக்கும் என்று பார்க்கலாம்.

தம்பதியர் ஒற்றுமை
விருச்சிக ராசிக்கு கிரகங்கள் சஞ்சாரத்தை பார்த்தால் நான்காம் வீட்டில் சூரியன் புதன், இரண்டாம் வீட்டில் கேது, செவ்வாய், குரு, மூன்றாம் வீட்டில் சனி, ஆறாம் வீட்டில் சுக்கிரன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சனி சந்தோஷமாக இருக்கிறார். மாணவர்களுக்கு ரொம்ப நல்ல மாதம். பிசினஸ் செய்பவர்களுக்கு ரொம்ப நல்ல மாதம். மாத தொடக்கத்தில் சுக்கிரன் ஆறாம் வீட்டில் இருப்பதால் கணவன் மனைவி உறவில் விட்டுக்கொடுத்து போங்க. தேவையில்லாத வீண் விவாதங்களை தவிர்த்து விடுங்கள். வம்பு வழக்குகளை தவிர்த்து விடுங்கள்.

பணவரவு அதிகமாகும்
மார்ச் 22ஆம் தேதி உங்க ராசிநாதன் செவ்வாய் இரண்டாம் வீட்டில் இருந்து மூன்றாம் வீட்டிற்கு சென்று உச்சம் பெற்று அமரப்போகிறார். மூன்றாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ள சனியோடு செவ்வாய் உச்சம் பெற்று இணைகிறார். சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். பணவரவு அதிகமாகும். புதிய தொழில் தொடங்கலாம். சிலருக்கு நல்ல வேலைகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவிகள் கிடைக்கும். மகரம் ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாயின் பார்வை மேஷம் ராசியில் இருக்கும் சுக்கிரன் மீதும் விழுவதால் காதல் மலரும். காதல் உறவில் கவனம் தேவை.

திருமண பேச்சுவார்த்தை
குரு பகவான் மாத இறுதியில் அதிசாரமாக மூன்றாம் வீட்டிற்கு செல்கிறார். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்க. மாத இறுதியில் சுக்கிரன் ஆறாம் வீட்டில் இருந்து ஏழாம் வீட்டிற்கு சென்று சஞ்சரிக்கும் காலத்தில் சந்தோஷம் அதிகமாகும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகமாகும். சுக்கிரன் பார்வை உங்க ராசியின் மீது விழுவதால் இந்த மாதம் நீங்க ரொம்ப பொறுமையாக இருங்க. நிதானமாக இருந்தால் நிறைய நல்லது நடக்கும் ரொம்ப உணர்ச்சிவசப்படாதீங்க. திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை இந்த மாதம் வேண்டாம்.

யோகமான மாதம்
மார்ச் மாதம் உங்க ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ராசியில் குரு, கேது, செவ்வாய், இரண்டாம் வீட்டில் சனி, சூரியன்,புதன் 3ஆம் வீட்டிலும் சுக்கிரன் ஐந்தாம் வீட்டிலும் சஞ்சரிக்கின்றனர். ராகுவின் சஞ்சாரம் ஏழாம் வீட்டில் இருக்கிறது. இந்த மாதம் உங்க ராசிக்கு யோகம் தரக்கூடிய புதன் வக்ர நிலையில் இருந்து வக்ர நிவர்த்தி அடைகிறார். வேலையில் நல்ல மாற்றம் வரும். புதனின் சஞ்சாரம் உங்களுக்கு யோகத்தை கொடுக்கும். சூரியன் உங்க ராசிக்கு மாத முற்பகுதியில் முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீட்டிலும் மாத பிற்பகுதியில் நான்காம் வீட்டிலும் சஞ்சரிக்கிறார். பாக்ய ஸ்தான அதிபதி சூரியன் நான்காம் வீட்டில் சஞ்சரிக்கும் போது சுகங்களை கொடுப்பார். சுக்கிரன் உங்களுக்கு சாதகங்களை செய்ய மாட்டார். என்றாலும் செவ்வாயின் பார்வை சுக்கிரன் மீது விழுவதால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

சொத்துக்களினால் லாபம்
தனுசு ராசிக்கு ஜென்ம சனி விலகி விட்டது என்றாலும் பாத சனியாக இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். பேச்சில் நிதானம் தேவை. கோபப்பட்டு பேச வேண்டாம். வீட்டிலும் அலுவலகங்கள் பொது இடங்களில் நாவடக்கம் தேவை. 22ஆம் தேதிக்கு மேல் உங்க ராசியில் உள்ள செவ்வாய் உச்சம் பெற்று சனியோடு இணைகிறார். உச்சம் பெற்ற செவ்வாய் ஆட்சி பெற்ற சனியோடு மாத இறுதியில் இணைவது யோகம். முக்கிய மாற்றங்கள் ஏற்படும். பூமி யோகம் வரும். நிலம், வீடு வாங்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு எண்ணங்கள் நிறைவேறும். உச்சம் பெற்ற செவ்வாயின் பார்வை உங்க ராசிக்கு ஐந்தாம் வீடான மேஷம் ராசியின் மீது விழுகிறது. பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் கிடைக்கும்.

உயர்கல்வி யோகம்
மாத இறுதியில் குரு உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டிற்கு செல்கிறார். சுப பேச்சுக்கள் ஆரம்பிக்கலாம். திருமண பேச்சுவார்த்தைகள் சுபமாக நடைபெறும். குடும்பம் குதூகலமாக இருக்கும். தடைகள் இடைஞ்சல்கள் நீங்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு ரொம்ப நல்ல மாதம். நினைவாற்றல் அதிகமாகும். உயர்கல்வி படிக்க யோகம் வரும். மாத பிற்பகுதியில் நிறைய நன்மைகள் நடக்கும். உடல் ஆரோக்கியம் அதிகமாகும். உடல் உபாதைகள் நீங்கும். மார்ச் மாதம் தனுசு ராசிக்காரர்களுக்கு யோகமான மாதமாக அமையும்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications