மார்ச் மாத ராசிபலன் - 12 ராசிக்கும் பலன்கள்
மார்ச் மாதம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் பலன்கள் எப்படி என பார்க்கலாம்.
சென்னை: மார்ச் மாதத்தின் நடுவில் சூரியன் மீனம் ராசிக்கு வருகிறார். இன்னும் சில நாட்களில் சுக்கிரன், புதன், செவ்வாய் பெயர்ச்சி நடைபெற உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் பலன்கள் எப்படி என பார்க்கலாம்.
மார்ச் மாதத்தின் கிரக நிலைப்படி சூரியன் கும்பத்தில் இருந்து மீனத்தை நோக்கி நகர்கிறார். மீனம் ராசியில் புதனும், சுக்கிரனும் சஞ்சாரம் செய்ய உள்ளனர். கடகத்தில் ராகு, மகரத்தில் கேது. தனுசு ராசியின் சனி துலாம் ராசியில் குரு அமர்ந்துள்ளனர்.
விருச்சிகத்தில் உள்ள செவ்வாய் இன்னும் சில நாட்களில் தனுசு ராசியில் சனியுடன் இணையப் போகிறார்.
மார்ச் மாதம் பல்வேறு திருவிழாக்கள் நிகழ உள்ளன. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களை காணலாம்.

மேஷம்
சூரியன் இந்த மாதம் 15ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் அரசு ஊழியர்களுக்கு தாங்கள் விரும்பிய இடத்திற்கு பணியிடமாற்றம் கிடைக்கும். செவ்வாய் 07ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் முன்னோர்களின் சொத்துக்களில் பங்கு கிடைக்கும். புதன் 03ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருவது படிப்புக்காக அதிகமாக செலவழிக்கும் நிலையைத் தரும். சுக்கிரன் 02ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருவது ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கச் செய்யும் 26ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருவது மனதில் சந்தோஷத்தை அதிகரிக்கச் செய்யும். குரு ஏழாம் இடத்திலிருப்பது அடிக்கடி பயணம் செய்யும் நிலையை கொடுக்கும். சனி ஒன்பதாமிடத்தில் இருப்பது உழைப்பின் மூலம் உன்னத நிலையை அடையும் வழியைக் காட்டும். ராகு இந்த ஆண்டு முழுவதும் நான்காமிடத்தில் இருப்பது படிப்பில் கவனம் அதிகம் தேவை என்பதை சுட்டிக் காட்டுகிறது. கேது இந்த ஆண்டு முழுவதும் பத்தாமிடத்திலிருப்பது எல்லா வெற்றியைக் கொடுக்கும்.

ரிஷபம்
சூரியன் இந்த மாதம் 15ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் அரசு ஊழியர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். செவ்வாய் 07ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் வாகன விபத்துக்கள் உண்டாகலாம் கவனம் தேவை. புதன் 03ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருவது தரகு கமிஷன் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சுக்கிரன் 02ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருவது மனைவியால் சந்தோஷம் அதிகரிக்கும் 26ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருவது வீட்டுக்கு ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். குரு ஆறாம் இடத்திலிருப்பது அடிக்கடி குழந்தைகளால் மனக் கஷ்டம் உண்டாகும். சனி ராசிக்கு 8வது இடத்தில் அஷ்டம சனியாக சஞ்சாரம் செய்கிறார். ராகு மூன்றாமிடத்தில் இருப்பது மனதில் குழப்பத்தைக் கொடுக்கும். கேது ஒன்பதாமிடத்திலிருப்பது ஆன்மீகத்தில் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும்.

மிதுனம்
சூரியன் இந்த மாதம் 15ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் தொழில் உத்தியோகம் சிறப்படையும். செவ்வாய் 07ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் காவல் துறையில் பணிபுரிபவர்களுக்கு இடமாற்றம் ஏற்படும் புதன் 03ம் தேதி பத்தாமிடத்திற்கு வருவது தொழில் கல்வியில் மேன்மை நிலை உண்டாகும். சுக்கிரன் 02ம் தேதி பத்தாமிடத்திற்கு வருவது தொழில் உத்தியோகத்தில் வாழ்க்கைத் துணையின் உதவி கிடைக்கும் 26ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருவது புதிதாக பொன்னகைகளை வாங்குவீர்கள். குரு ஐந்தாம் இடத்திலிருப்பது அடிக்கடி பரம்பரை சொத்திலிருந்து பண வரவைக் கொடுக்கும். சனி 7வது வீட்டில் கண்டக சனியாக சஞ்சாரம் செய்கிறார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நல்லுரவு ஏற்படும். ராகு இரண்டாமிடத்தில் இருப்பது வங்கியில் டெபாசிட் சேமிப்பு அதிகரிக்கும். கேது எட்டாமிடத்திலிருப்பது எதிர்பாராத இடத்திலிருந்து பண வரவை அதிகரிக்கச் செய்யும்.

கடகம்
சூரியன் இந்த மாதம் 15ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் உத்தியோக வகையில் இட மாற்றம் உண்டாகும் செவ்வாய் 07ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் சகோதரர்களுடன் பிரச்சினை உண்டாகும் புதன் 03ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருவது கடவுள் பக்தியை அதிகரிக்கச் செய்யும் சுக்கிரன் 02ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருவது பெண்களால் நன்மை உண்டாகும் 26ம் தேதி பத்தாமிடத்திற்கு வருவது வேலை தேடும் பெண்களுக்கு வேலை கிடைக்கும். குரு நான்காம் இடத்திலிருப்பது புதிதாக வாகனம் வாங்கும் அதிர்ஷ்டத்தை தரும். சனி இந்த ஆண்டு முழுவதும் ஆறாமிடத்தில் இருப்பது உடல் உழைப்பை அதிகரிக்கச் செய்யும். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருப்பது புத்தியில் குழப்பத்தை கொடுக்கும் கேது ஏழாமிடத்திலிருப்பது உறவினர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சிம்மம்
சூரியன் இந்த மாதம் 15ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் தொழில் காரணமாக மனதில் பாரம் உண்டாகும் செவ்வாய் 07ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் தீயணைப்பு துறையில் வேலை வேண்டுபவர்களுக்கு வேலை கிடைக்கும். புதன் 03ம் தேதி எட்டாமிடத்திற்கு வருவது வியாபார கூட்டாளிகளுடன் சச்சரவு உண்டாகும். சுக்கிரன் 02ம் தேதி எட்டாமிடத்திற்கு வருவது விலை உயர்ந்த பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ளவும் 26ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருவது கடவுளின் அனுகிரகம் கிடைக்கும். குரு மூன்றாம் இடத்திலிருப்பது அடிக்கடி வெளியூருக்கு பிரயாணம் செல்லும் நிலையைக் கொடுக்கும். சனி ஐந்தாமிடத்தில் இருப்பது மன சந்தோஷத்தை அதிகரிக்கச் செய்யும். ராகு பன்னிரெண்டாமிடத்தில் இருப்பது செலவுகள் அதிகரிக்கும். ஆறாமிடத்திலிருப்பதால் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

கன்னி
சூரியன் இந்த மாதம் 15ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் அரசாங்க பணி வகையில் வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும்.. செவ்வாய் 07ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் வீடு கட்டும் ஆசை நிறைவேறும். புதன் 03ம் தேதி ஏழாமிடத்திற்கு வருவது வியாபாரத்த்தில் மேன்மை நிலை உண்டாகும். சுக்கிரன் 02ம் தேதி ஏழாமிடத்திற்கு வருவது பெண்களால் நன்மை உண்டாகும் 26ம் தேதி எட்டாமிடத்திற்கு வருவது மனதில் பாரம் உண்டாகும். குரு இரண்டாம் இடத்திலிருப்பது செல்வ நிலையை அதிகரித்துக் கொடுக்கும். சனி மூன்றாமிடத்தில் இருப்பது வெளியூர் பிரயாணத்தை அதிகரிக்கச் செய்யும். ராகு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருப்பது ஆண்டு முழுவதும் பண வரவு தாராளமாக இருக்கும். கேது ஆறாமிடத்திலிருப்பது உடல் ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

துலாம்
சூரியன் இந்த மாதம் 15ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.. செவ்வாய் 07ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் உடன் பிறப்புகளால் நன்மை உண்டாகும் புதன் 03ம் தேதி ஆறாமிடத்திற்கு வருவது தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகும். சுக்கிரன் 02ம் தேதி ஆறாமிடத்திற்கு வருவது பெண்களால் தொல்லை உண்டாகும் 26ம் தேதி ஏழாமிடத்திற்கு வருவது வாழ்க்கைத்துணையுடன் நல்லுறவு உண்டாகும். குரு ஜென்ம ராசியில் அமர்ந்துள்ளார். மனதில் மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும். சனி மூன்றாமிடத்தில் இருப்பது இடமாற்றத்தைக் கொடுக்கும் ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருப்பது ஆண்டு முழுவதும் எடுத்த காரியமெல்லாம் வெற்றி பெறச் செய்யும் கேது நான்காமிடத்திலிருப்பது வீடு கட்டும் யோகத்தைக் கொடுக்கும்

விருச்சிகம்
சூரியன் இந்த மாதம் 15ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் கல்வியில் ஆர்வம் உண்டாகும். செவ்வாய் 07ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் நிலம் குத்தகை வாடகை மூலம் வருமானம் உண்டாகும் புதன் 03ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருவது தரகு கமிஷன் வியாபாரத்தில் முன்னேற்றத்தைக் கொடுக்கும். சுக்கிரன் 02ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருவது உல்லாசப்பயணம் செல்வீர்கள் 26ம் தேதி ஆறாமிடத்திற்கு வருவது கடன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. குரு பன்னிரெண்டாமிடத்தில் இருப்பது தேவையற்ற வீண் செலவு அதிகரிக்கும். சனி இரண்டாமிடத்தில் இருப்பது பொருளாதார சிக்கலைக் கொடுக்கும் ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருப்பது பரம்பரை சொத்துக்களிலில் வில்லங்கத்தைக் கொடுக்கும் கேது மூன்றாமிடத்திலிருப்பது மன சஞ்சலத்தைக் கொடுக்கும்.

தனுசு
சூரியன் இந்த மாதம் 15ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் அரசாங்க பள்ளியில் வேலை கிடைக்கும் செவ்வாய் 07ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் மனதில் கோபம் அதிகமாக உண்டாகும் புதன் 03ம் தேதி நான்காமிடத்திற்கு வருவது படிப்பில் முன்னேற்றத்தைக் கொடுக்கும். சுக்கிரன் 02ம் தேதி நான்காமிடத்திற்கு வருவது புதிதாக வாகனம் வாங்குவீர்கள் 26ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருவது பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். குரு பதினொன்றாமிடத்தில் இருப்பது பண புழக்கம் சரளமாக இருக்கும்
சனி உங்கள் ஜென்ம ராசியில் இருப்பது கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும் ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருப்பது தேவையற்ற மனக் குழப்பம் உண்டாகும் கேது இரண்டாமிடத்திலிருப்பது குடும்பத்தில் சிறு சிறு சச்சரவைக் கொடுக்கும்.

மகரம்
சூரியன் இந்த மாதம் 15ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் அரசாங்க ஊழியர்களுக்கு இடமாற்றம் உண்டாகும் செவ்வாய் 07ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் மின்சார சாதனங்கள் பழுது பார்க்கும் வகையில் செலவுகள் அதிகமாக உண்டாகும் புதன் 03ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருவது தகவல் தொடர்பு சிறப்பாக இருக்கும். சுக்கிரன் 02ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருவது வெளியூர் பயணம் அதிகரிக்கும் 26ம் தேதி நான்காமிடத்திற்கு வருவது புதிதாக கார் வாங்கும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை பொதுவாக நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.
குரு பத்தாமிடத்தில் இருப்பது தொழில் நிலை சிறப்பாக இருக்கும். சனி பன்னிரெண்டாமிடத்தில் இருப்பது தொழில் முதலீடுகளை அதிகரிக்கச் செய்யும் ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருப்பது அனைவரிடமும் நல்லுறவை நிலவச் செய்யும் கேது உங்கள் ஜென்ம ராசியில் இருப்பது ஆன்மீகத்தில் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும்.

கும்பம்
சூரியன் இந்த மாதம் 15ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் பண வரவு அதிகரிக்கும். செவ்வாய் 07ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் வீடு நிலம் வகையில் வருமானம் அதிகமாக உண்டாகும் புதன் 03ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருவது பேச்சில் திறமை அதிகரிக்கும். சுக்கிரன் 02ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருவது நகைகளின் சேர்க்கை அதிகரிக்கும் 26ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருவது மனதில் சந்தோஷம் அதிகரிக்கும்.
குரு ஒன்பதாமிடத்தில் இருப்பது பொருளாதார விஷயங்கள் திருப்திகரமாக இருக்கும். சனி பதினொன்றாமிடத்தில் இருப்பது தொழிலில் லாபம் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருப்பது இதுவரை பட்ட கடன்களை எல்லாம் திருப்பி கொடுத்துவிடுவீர்கள் கேது பன்னிரெண்டாமிடத்தில் இருப்பது ஆன்மீகத்திற்காக செலவுகளைஅதிகரிக்கச் செய்யும்.

மீனம்
சூரியன் இந்த மாதம் 15ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும் செவ்வாய் 07ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் தீயணைப்பு துறையில் பணி புரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் புதன் 03ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருவது கல்வியில் நாட்டத்தை அதிகரிக்கச் செய்யும் சுக்கிரன் 02ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருவது மனதில் மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும் 26ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருவது பொன்னகைகளின் சேர்க்கை அதிகரிக்கும். குரு எட்டாமிடத்தில் இருப்பது பண வரவில் தாமதமாகும். சனி பத்தாமிடத்தில் இருப்பது கடுமையான உழைக்க வேண்டியிருக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருப்பது பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும் கேது பதினொன்றாமிடத்தில் இருப்பது பல நாட்களாக நினைத்திருந்த எண்ணங்கள் நிறைவேறும்.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications