மார்கழி மாத ராசி பலன் 2020: தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு எப்படி

மார்கழி மாதம் பிறந்து விட்டது. இந்த மாதத்தில் நவகிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி, பார்வையால் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகத்துவம் நிறைந்த மார்கழி மாதம் பிறந்து விட்டது. சூரியனின் பயணம் இந்த மாதத்தில் தனுசு ராசியில் உள்ளது. தனுசு குருபகவானின் வீடு. குருவின் வீட்டில் சஞ்சரிக்கும் சூரியனால் சில ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். இந்த மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ரிஷபம் ராசியில் ராகு, விருச்சிகம் ராசியில் கேது, சுக்கிரன், தனுசு ராசியில் சூரியன், புதன், மகரம் ராசியில் குரு, சனி, மீனம் ராசியில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சந்திரன் சஞ்சாரம் தனுசு ராசியில் தொடங்கி தனுசு ராசியில் முடிகிறது. மார்கழி மாதத்தில் 16-12-2020 முதல் 13-01-2021 வரை தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

இந்த மாதம் சில கிரகங்கள் இடப்பெயர்ச்சி அடைகின்றன. சனிபகவான் வாக்கியப்பஞ்சாங்கப்படி தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். மார்கழி 2ஆம் தேதி புதன் பகவான் தனுசு ராசிக்கு மாறுகிறார். செவ்வாய் 9ஆம் தேதி மேஷ ராசிக்கு மாறுகிறார்.19ஆம் தேதி சுக்கிரன் தனுசு ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றனர். 20ஆம் தேதி புதன் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.

மார்கழி மாதத்தில் முக்கிய விஷேசங்கள் உள்ளன. மார்கழி 10ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி, மார்கழி 15 ஆருத்ரா தரிசனம், 27ஆம் தேதி கூடாரவல்லி ஆண்டாள் தரிசனம் செய்ய திருமண தடைகள் நீங்கும். 28ஆம் தேதி அமாவாசை தினம் அனுமன் ஜெயந்தி ஆகிய திருவிழாக்கள் உள்ளன. பல்வேறு சிறப்புகள் கொண்ட மார்கழி மாதத்தில் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு பலன்கள், பரிகாரங்கள் என்ன என்று பார்க்கலாம்.

தனுசு

தனுசு

குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் பயணம் செய்கிறார். அப்பா சம்பாதித்த சொத்து கிடைக்கும் உத்தியோக நிலை சிறப்படையும். செவ்வாய் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் இருக்கிறார். 9ஆம் தேதிக்குப் பின்னர் அரசாங்க வேலை கிடைக்க யோகம் உண்டு. இடமாற்றங்கள் வரலாம் ஏற்றுக்கொள்ளுங்கள். புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் புத்தி கூர்மை அதிகரிக்கும் கலைகளில் நிபுணத்துவம் பெறுவீர்கள். 20ஆம் தேதிக்குப் பின்னர் வாக்கு வன்மை அதிகரிக்கும். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும், சமுதாயத்தில் மரியாதை உயரும். சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் பொன்னகைகளில் முதலீடுகள் அதிகரிக்கும், 19ஆம் தேதிக்குப் பின்னர் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சனி இரண்டாமிடத்தில் இருக்கிறார் தேவையற்றா வீண் பேச்சை தவிர்க்கவும். பண வருமானம் அதிகரிக்கும் கடன்கள் அடைபடும். குருவும் சாதகமாக இருப்பதால் பேச்சில் சாதகம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் லாபம் வரும். கண் பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. குடும்பத்தில் சிறு மனஸ்தாபங்கள் வரலாம். கோபமான பேச்சுக்களை தவிர்க்கவும். வீண் செலவுகளை தவிர்க்கவும். இடம் சொத்துக்களை வாங்க அவசரம் காட்ட வேண்டாம். நகை, பணம் விசயங்களில் கவனம் தேவை. வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும். மன பாரங்கள் நீங்கும். குருவாயூரப்பனை வணங்கி வர பாதிப்புகள் குறையும்.

மகரம்

மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு மார்கழி மாதம் மகத்துவம் நிறைந்த மாதமாக அமையும். சூரியன் பன்னிரெண்டாமிடத்தில் விரைய ஸ்தானத்தில் இருக்கிறார் வேலைக்காக வெளியூர் செல்வீர்கள் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் இருக்கிறார் உடன் பிறப்புகளின் உதவி கிடைக்கும், வீடு மாறும் நிலை உண்டாகும். 9ஆம் தேதிக்குப் பின்னர் வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். புதன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அதிக செலவுகள் ஏற்படும் ஷேர்மார்க்கெட் முதலீடுகளை தவிர்ப்பது நல்லது 20ஆம் தேதிக்குப் பின்னர் ஷேர் மார்க்கெட் தொழிலில் லாபம் அதிகரிக்கும். பிள்ளைகள் விசயத்தில் கவனம் தேவை. சுப காரியங்களில் ஏற்பட்டிருந்த தடைகள் நீங்கும். வேலை விசயமாக பிரிந்து இருந்தவர்கள் ஒன்றிணைவார்கள். வீட்டில் சுப காரியங்கள் ஏற்படும். உறவினர்கள் வீட்டு விசேசங்களில் பங்கேற்பீர்கள். சின்னச் சின்ன உடல் நலக் கோளாறுகள் வரும் மருத்துவ ஆலோசனை அவசியம். பயணங்கள் செல்லும் போது எலுமிச்சை கனியை உடன் கொண்டு செல்லவும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். திடீர் இடமாற்றம், டிரான்ஸ்பர் ஏற்படும். கணவன் மனைவி இடையே தர்க்கம் வரலாம் விட்டுக்கொடுத்து செல்லவும். சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனைவியால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் 19ஆம் தேதிக்குப் பிறகு செலவுகள் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும், கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். விரைய செலவுகள் வரும். உறவினர்களுக்கு அதிக கடன் கொடுப்பதை தவிர்த்து விடவும். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் அக்கறையும் கவனமும் தேவை. காலபைரவரை ஞாயிறு கிழமைகளில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

கும்பம்

கும்பம்

சூரியன் 11ஆம் வீட்டில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொட்டது துலங்கும். அரசு காரியங்கள் வெற்றிகரமாக முடியும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும் ஷேர் மார்க்கெட் மூலம் திடீர் பணவரவு வரும். சொத்து சேர்க்கை ஏற்படும். பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். நண்பர்களால் ஆதரவு கிடைக்கும். செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் நிலம் வீடு மூலம் பண வருமானம் உண்டாகும் குடும்ப சந்தோஷம் அதிகரிக்கும். 9ஆம் தேதிக்கு மேல் செவ்வாய் மூன்றாம் வீட்டில் அமர்வதால் தைரியம் தன்னம்பிக்கை கூடும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த சண்டை சச்சரவு முடிவுக்கு வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய ஏஜென்சி எடுக்க முயற்சி செய்யலாம். வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும் புது வேலைக்கு முயற்சி செய்யலாம். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். இந்த மாதம் உற்சாக மனநிலையில் இருப்பீர்கள். விலை உயர்ந்த தங்க நகைகள் வண்டி வாகனங்கள் வாங்குவீர்கள். ராகு நான்காமிடத்தில் இருக்கிறார் வீடு நிலம் போன்ற அசையா சொத்துகளை வாங்கும் யோகம் உண்டாகும் கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். இந்த மாதம் உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல மாதம் வேண்டிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வும் கிடைக்கும். பண விசயங்களில் யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம். சொந்த பந்தங்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள். பச்சைப்பயிறு தானம் செய்யுங்கள்.

மீனம்

மீனம்

சூரியன் பத்தாம் வீட்டில் சஞ்சரிப்பதால் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். ராசிக்குள் இருந்த செவ்வாய் இரண்டாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைவதால் பணவரவு அதிகரிக்கும். மனதில் இருந்த கோபம் நீங்கும். புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் ஒப்பந்தத் தொழில் சிறப்படையும்,20ஆம் தேதிக்குப் பின்னர் தரகு கமிஷன் வியாபாரம் லாபத்தைத் தரும். அடகு வைத்த தங்க நகைகளை மீட்பீர்கள். உறவினர்கள் உதவி கிடைக்கும். சுக்கிரன், புதன் சாதகமாக இருப்பதால் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். தொட்ட காரியம் துலங்கும் வெற்றி அதிகரிக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் வரும். சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் வெற்றியாக இருக்கும் 19ஆம் தேதிக்குப் பின்னர் வேலைக்காக செய்யும் முயற்சிகளெல்லாம் வெற்றியடையும். குருவும் சனியும் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் சஞ்சரிப்பதால் நீண்ட நாட்கள் ஆசைகள் நிறைவேறும், தொழில் லாபம் அதிகரிக்கும். புதிய வேலை கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். புதிய வண்டி வாகனம் வாங்கலாம். பிள்ளைகளுக்கு திருமணம் உறுதி செய்வீர்கள். பசுமாட்டிற்கு பழம் கொடுங்கள். வியாழக்கிழமைகளில் குரு பகவானை வணங்கி கொண்டைக்கடலை தானமாக கொடுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+