மார்கழி மாத ராசி பலன் 2022: தனுசு ராசியில் கிரகங்களின் கூட்டணி..5 ராசிக்காரர்களுக்கு திடீர் லக்!
சென்னை: மார்கழி மாதம் மகத்துவம் நிறைந்த மாதம். தனுர் மாதம் என்று போற்றப்படுகிறது. குரு பகவானின் வீடான தனுசு வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம். நவகிரகங்களில் அரசன் ஆகிய சூரியன், குருகுலவாசம் செய்யும் நேரம் என்பதால் அந்நாளில் அரசர்கள் உட்பட சத்திரியர்கள் யாரும் போர்த் தொழிலில் ஈடுபட மாட்டார்கள். பக்தி மார்க்கத்திற்கு வழிகாட்டும் மாதமாக மார்கழியைக் கருதினார்கள். நவகிரகங்களின் கூட்டணியால் 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
மார்கழி மாதத்தில் சூரியன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். மேஷ ராசியில் ராகு அமர்ந்திருக்கிறார். ரிஷப ராசியில் செவ்வாய் வக்கிரமடைந்து பின்னோக்கி வந்திருக்கிறார். புதன் 12 ஆம் தேதி மகர ராசிக்கு செல்கிறார். மீன ராசியில் குரு இருக்கிறார். தனுசு ராசியில் அமர்ந்திருக்கும் சுக்கிரன் மார்கழி 14 ஆம் தேதி மகர ராசிக்கு செல்கிறார். சனி மகரத்தில் அமர்ந்திருக்கிறார். கேது துலா ராசியில் இருக்கிறார்.
தனுசு ராசியில் இந்த மாதம் மூன்று கிரகங்கள் கூட்டணி சேருகின்றன. மாத பிற்பகுதியில் சுக்கிரனும் புதனும் மகர ராசியில் இடப்பெயர்ச்சி அடைகின்றன. இந்த மாதம் சனியோடும் சூரியனுடனும் கிரகங்கள் கூட்டணி சேருவதால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. மகத்துவம் நிறைந்த மார்கழி மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்
வீரத்தை அணிகலனாகக் கொண்ட செவ்வாயை அதிபதியாக பெற்றுள்ள மேஷ ராசி அன்பர்களே...
உங்களுக்கு வருகின்ற வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்க. பங்குச்சந்தையில் அதிக ஈடுபாடு காட்டுங்க. தேவையில்லாத விஷயத்தில் தலையிடாதீங்க. வியாபாரத்தில் ஏற்படுகின்ற சிக்கல்களை களைவீங்க. உறவினர்கள் உதவி கிடைப்பது சற்று கடினமுங்க. வெளியூர் பயணங்களில் நல்ல பலன் ஏற்படுமுங்க. அரசு ஊழியர்கள் எச்சரிக்கையாக வேலை பார்க்க வேண்டுமுங்க. தனியார் துறையில் முதலாளிகளின் பாராட்டை பெறுவது கடினமுங்க. பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்க. பணத்தை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்க. இந்த மாதம் திருச்செந்தூர் முருகனை வழிபடுங்கள். விருப்பமான காரியங்கள் நிறைவேறுமுங்க.

ரிஷபம்
கலைநயம் மிளிரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபராசி அன்பர்களே....
வியாபாரத்திற்கு தேவையான உதவிகளை நண்பர்கள் செய்வாங்க. எதிலும் முட்டுக்கட்டை போட்டாலும் உறவினர்களால் உதவி உண்டுங்க. திருமண நிகழ்ச்சிகள் சில காரணங்களால் தள்ளிப் போகுமுங்க. அரசு வேலையில் கவனமா இருங்க. ஆன்லைன் வர்த்தகங்கள் லாபத்தை கொடுக்குமுங்க. மரியாதை நிமித்தமாக அரசியல்வாதிகளை சந்திப்பீங்க. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவாங்க. குடும்பத்தில் கொஞ்சம் குழப்பம் நிலவுமுங்க. வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகுமுங்க. எதற்கெடுத்தாலும் கோபப்படுறத கொஞ்சம் நிறுத்திக்குங்க. திட்டம் போட்டு செலவு பண்ணுங்க. இல்லைன்னா கடன் வாங்கி கஷ்டப்பட வேண்டிய நிலை உருவாகுமுங்க. திருவண்ணாமலை சென்று வாங்க. பெருமையும் புகழும் அதிகரிக்குமுங்க.

மிதுனம்
எதிர்ப்புகளை புத்திசாலித்தனத்தால் முறியடிக்கும் புதனை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே... தொழிலில் இருந்த இடையூறுகள் விலகி ஓடுமுங்க. வியாபாரம் விறுவிறுப்பாக நடக்குமுங்க. அரசாங்க வேலையில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்குமுங்க. மருத்துவர்கள் புகழின் உச்சத்தை தொடுவாங்க. ரியல் எஸ்டேட் தொழில் சிறப்பாக நடக்குமுங்க. பங்குச்சந்தை வியாபாரத்தில் கொஞ்சம் எச்சரிக்கை தேவைங்க. உடல் நிலையில் சில பாதிப்புகள் வந்து விலகுமுங்க. வெளியூர் பயணங்கள் எதிர்பார்த்த அளவு தொழிலுக்கு உதவியாக அமையாதுங்க. சின்ன சின்ன வியாபாரிகள் நல்ல லாபம் அடைவார்கங்க. ஜவுளி வியாபாரம் சிறப்பாக நடக்குமுங்க.
திருமோகூர் காளமேகப் பெருமாளை வழிபடுங்க. சூழும் துன்பங்கள் தூர ஓடுமுங்க.

கடகம்
வளர்ச்சிகளை சீராக அள்ளித் தருகின்ற சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே...
ஆடம்பரமான விருந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சியாக இருப்பீங்க. குழந்தை பாக்கியம் இல்லாத வீட்டில் மழலை சத்தம் மகிழ்ச்சியை கொண்டுவருமுங்க. எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கிடைக்குமுங்க. கடன் ஓரளவு கட்டுக்குள் இருக்குமுங்க. சகோதரர் வகையில் சில சங்கடங்களை சந்திப்பீங்க. போட்டி சூதாட்டங்களை கொஞ்சம் ஒதுக்கி வையுங்க. ஷேர் மார்க்கெட் தொழில் ஏற்றமான நிலையில் இருக்குமுங்க.
கணவன் மனைவி உறவில் கசப்பான அனுபவம் கிடைக்குமுங்க. வெளிநாட்டு பயணத்தின் மூலமாக தொழிலுக்கு தேவையான நிதி திரட்டுவீங்க. இரவு நேரத்தில் அதிக நேரம் கண் விழிக்காதீங்க.
தஞ்சை பிரகதீஸ்வரர் பெருமானை வழிபடுங்க. நெஞ்சத்து ஆசைகள் எல்லாம் நிறைவேறுமுங்க.

சிம்மம்
அரசரைப் போல் கோலோச்சும் ஆற்றல் மிக்க சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே...
எதிர்பார்த்த காரியங்கள் தடையில்லாமல் நடக்குமுங்க. வியாபாரத்தில் இருந்த இடர்பாடுகளை விளக்கி முன்னேற்றமான நிலையை அடைவீங்க. உங்களின் வளர்ச்சியை பார்த்து உறவினர்கள் பொறாமைப் படுவாங்க. பிள்ளைகளின் கல்விக்காக அதிகம் செலவு செய்வீங்க. ரியல் எஸ்டேட் தொழில் சற்று சுணக்கமாக நடக்கும் விவசாய வேளையில் அதிக ஆர்வம் காட்டுவீங்க வீட்டை புதுப்பித்து வர்ணம் பூசி அழகுபடுத்துவீங்க மனைவியின் ஆசையை நிறைவேற்ற நகைகள் வாங்கிக் கொடுப்பீங்க வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருங்கபைனான்ஸ் தொழிலில் பக்குவமாக முதலீடு செய்யுங்கள் புதிய நண்பர்களிடம் அதிகமாக பண வரவு செலவு வச்சுக்காதிங்க
காளகஸ்திநாதரை வழிபடுங்க. கஷ்டங்கள் பறந்தோடுமுங்க.

கன்னி
அறிவுத் திறனை அள்ளித்தரும் புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே...
என்னதான் செல்வமும் செல்வாக்கும் இருந்தாலும் குடும்பப் பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் மனம் சங்கட்டப்படுவீங்க. தொழிற்சாலையில் இருந்த வேலையாட்கள் பிரச்சனையை வெற்றிகரமாக சரிப்படுத்துவீங்க. ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்வதற்கு அடிப்படையான உரிமங்களை அரசாங்கத்தில் பெறுவீங்க. குடும்பத்தின் நலனுக்காக இரவு பகல் பார்க்காமல் வேலை செய்வீங்க. வியாபாரங்களை நுணுக்கமாக நடத்தி எதிரிகளின் முகத்தில் கரியை பூசுவீங்க. வெளியூர் பயணங்களால் சில நன்மைகள் கிடைக்குமுங்க. உடல் நலனில் அக்கறையாக இருப்பது நல்லதுங்க. காரைக்குடி முத்துமாரியம்மனை வழிபடுங்க. நிறைவான செல்வம் பெறுவீங்க.

துலாம்
தர்ம அதர்மங்களுக்கு ஏற்ப பலன்தரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசி அன்பர்களே...
நீண்ட காலமாக நடந்து வந்த சொத்து சம்பந்தப்பட்ட வழக்கு உங்களுக்கு சாதகமாக முடியுமுங்க. மாமனார் வீட்டில் இருந்து சில உதவிகள் கிடைக்குமுங்க. வியாபாரத்தில் இருந்த தடைகளை சாணக்கியத்தனமாக தாண்டி வருவீங்க. எதிர்பாராத பண வரவு வருவதற்கான வாய்ப்பு உண்டுங்க. அரசாங்க வேலை பார்ப்பவர்களுக்கு இடம் மாறுதல் ஏற்படுமுங்க. தனியார் துறை ஊழியர்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை பெறுவாங்க. தக்க சமயத்தில் மனைவியிடம் இருந்து பண உதவி கிடைக்குமுங்க. புதிய வாகனங்கள் வாங்கி வீட்டில் நிறுத்துவீங்க.
திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாளை வழிபடுங்க. சகல சௌபாக்கியங்களும் சித்திக்குமுங்க.

விருச்சிகம்
போர்க்குணம் கொண்ட பூமிகாரகன் செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே...
எதற்கெடுத்தாலும் டென்ஷன் ஆவதை கட்டுப்படுத்துங்க. இல்லை என்றால் கையில் இருந்த காசு பையில் இருந்த பணம் கரைந்து போவதற்கான வழி ஏற்படுமுங்க. வியாபாரம் எதிர்பார்த்த அளவு இல்லாட்டியும் பொருளாதார முன்னேற்றம் தடைபடாதுங்க. பணம் கொடுக்கல் வாங்கலில் சில நல்ல உறவுகளை பகைத்துக் கொள்ள வேண்டிய நிலை உருவாகும்ங்க. பிள்ளைகளை கண்காணிப்பது ரொம்ப முக்கியம்ங்க. சிலர் தன்மூப்பாக முடிவெடுத்து பெத்தவங்க மனசை நோகடிப்பாங்க. திருமண காரியங்கள் தள்ளி போக வாய்ப்பு உண்டுங்க. ஆன்லைன் வர்த்தகங்களில் கவனமாக ஈடுபடுங்க. பங்கு முதலீடுகளில் அதிகம் பணம் போட வேண்டாமுங்க.
பழனிமலை முருகனின் பாதம் பணியுங்க. கழனி செழித்து செல்வம் பெருகுமுங்க.

தனுசு
வினைப்பயனை அறுக்கின்ற வியாழ பகவானை அதிபதியாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே...
அரசாங்க தரப்பிலிருந்து ஒரு நல்ல வாய்ப்பு வீடு தேடி வருமுங்க. அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்க. கட்டுமான தொழில் சுறுசுறுப்பாக நடக்குமுங்க. தினக்கூலி வேலையாட்கள் கூட வருமானம் அதிகரித்து சந்தோஷப்படுவாங்க. கலைத்துறையில் உள்ளவங்க சில கஷ்டங்களை சந்தித்து பின்னர் பெரும் புகழ் அடைவாங்க. பண வரவு செலவு சில உறவு சிக்கல்களை ஏற்படுத்தலாமுங்க. ஆடம்பரமாக செலவு செய்வதை கட்டுப்படுத்துங்க. பழைய கடன்களை வசூல் செய்து நிம்மதி அடைவீர்ங்க. குடும்பத்தில் இருந்த சின்ன சின்ன பிரச்சனைகள் விலகி மகிழ்ச்சி பெருகுமுங்க. பெரிய மனிதர்களின் சந்திப்பால் அனுகூலமான பலன் கிடைக்குமுங்க.
பட்டமங்கலம் சென்று தட்சிணாமூர்த்தியை வணங்கி வாங்க. தொட்டதெல்லாம் துலங்குமுங்க.

மகரம்
வியூகங்கள் மூலம் வெற்றிகளை காணும் மந்தனின் ஆதிக்கம் கொண்ட மகர ராசி அன்பர்களே....
நினைத்த காரியங்கள் தடையில்லாமல் நடக்குமுங்க. பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக இருக்குமுங்க. கையில் தாராளமாக பணம் காசு புரளுமுங்க. ஒரு காலத்தில் உங்களுக்கு உதவி செய்த நண்பருக்கு இப்பொழுது இக்கட்டான நிலையில் நீங்களும் உதவி செய்வீங்க. பிரிந்து போன உறவுகளை சேர்ப்பதில் அக்கறை காட்டுவீங்க. மங்கள நிகழ்ச்சிகளால் வீட்டில் சந்தோஷம் நிலவுங்க. கணவன் மனைவிக்கு இடையே இருந்த கசப்பு விலகி இன்பமான சூழ்நிலை உருவாகுமுங்க. வீட்டில் உள்ளவர்களின் ஆசையை நிறைவேற்றுவதற்காக உங்கள் விருப்பத்தை தியாகம் செய்வீங்க. திருநள்ளாறு தர்ப்ப ஆரண்ய ஈஸ்வரரை வழிபடுங்க. அவமிருத்த யோகம் விலகுமுங்க.

கும்பம்
சாணக்கியத்தனத்தால் சாதனை புரியும் சனிபகவானை அதிபதியாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே... புதிய தொழில் தொடங்க தேவையான முயற்சிகளில் இறங்குவீங்க. கூட்டுத்தொழில் சிறப்பான நிலையை அடையுமுங்க. வியாபாரம் பொருளாதார முன்னேற்றத்தை கொண்டு வருமுங்க. நுணுக்கமான வேலைகளில் இறங்கி மற்றவர்களின் பாராட்டை பெறுவீங்க. பிள்ளைகள் அதிக அக்கறையுடன் படித்து பெற்றவர்களின் மனதை குளிர வைப்பாங்க. வெளியூரிலிருந்து நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்குமுங்க. முதுகு வலி பிரச்சனை முழங்கால் பிரச்சனை ஏற்பட்டு அதற்காக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வீங்க. திடீர் திடீரென்று செலவு வந்து கையிருப்பு கரையுமுங்க. உறவினர்களின் பொறாமை பார்வை உங்களுக்கு சில சங்கடங்களை கொடுக்குமுங்க.
ஒத்தக்கடை யோக நரசிம்மரை வழிபடுங்க. ஆயுள் விருத்தியாகும்முங்க.

மீனம்
பார்வையால் பலன்களை அள்ளித்தரும் குரு பகவானை அதிபதியாகக் கொண்ட மீனராசி அன்பர்களே...
உங்களுக்கு எதிர்ப்பாக இருந்த நபர்கள் கூட இந்த காலகட்டத்தில் உங்கள் மனதை புரிந்து கொண்டு உதவி செய்வாங்க. குடும்பத்தில் இருந்த மனக்கலக்கம் விலகி மகிழ்ச்சி நிலவுமுங்க. வேண்டுதலை நிறைவேற்ற குலதெய்வம் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வருவீங்க. வீட்டிலிருந்த சின்ன சின்ன குறைகளை நீக்கி பராமரிப்பு வேலை செய்வீங்க. சகோதரர் வெளிநாடு செல்வதற்கு பணம் கொடுத்து உதவுவீங்க. எந்த வகையிலாவது வருமானம் அதிகரித்து மன மகிழ்ச்சி அடைவீங்க. பிள்ளைகளுக்காக வாங்கிய கல்விக் கடனை செலுத்துவீங்க. தந்தையார் வகையில் மருத்துவ செலவு வரலாமுங்க. அழகர்கோவில் கள்ளழகர் பெருமானை வழிபடுங்க. தொழில் விருத்தி அடையும்முங்க.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications