மார்கழி மாத ராசி பலன்கள் 2021: தனுசு, மகரம், கும்பம், மீன ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி
மார்கழி மாதத்தில் சூரிய பகவான் தனுசு ராசியில் சஞ்சரிப்பதால் இதை தனுர் மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. தனுசு ராசிக்கு அதிபதியான குரு பகவான் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் இது. இந்த மாதத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு ய
சென்னை: மார்கழி மாதம் மகத்துவம் நிறைந்த மாதம் தனுசு ராசியில் குருவின் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம். நவகிரகங்களில் அரசன் ஆகிய சூரியன், குருகுலவாசம் செய்யும் நேரம் என்பதால் அந்நாளில் அரசர்கள் உட்பட சத்திரியர்கள் யாரும் போர்த் தொழிலில் ஈடுபட மாட்டார்கள். பக்தி மார்க்கத்திற்கு வழிகாட்டும் மாதமாக மார்கழியைக் கருதினார்கள். நவகிரகங்களின் கூட்டணியால் தனுசு, மகரம், கும்பம், மீன ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
'மாதங்களில் நான் மார்கழி' என்று கீதையில் கண்ணன் சொன்னது பக்தி மார்க்கத்தால் என்னை அடைய முடியும் என்பதை சுட்டிக்காட்டவே என்பதை நாம் உணர வேண்டும். வீடுபேறு எனும் மோட்சத்தினை அடைய உதவும் மாதம் இது. பொதுமக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பக்தி மார்க்கத்தில் ஈடுபட வேண்டிய காலமாக மார்கழியைக் கொண்டிருந்தார்கள் இந்த ஒரு மாதமாவது இறைவனின் மேல் நமது முழு சிந்தனையையும் செலுத்த வேண்டும் என்ற காரணத்தினால்தான் மார்கழியில் திருமணம் முதலான சுபநிகழ்ச்சிகளைத் தவிர்த்தார்கள் நம் முன்னோர்கள். பகவான் கண்ணனை கணவனாக அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆண்டாள் விரதமிருந்த மாதம் இது. அதே போன்று ராம நாம ஜபத்தினையே தனது உயிராகக் கொண்டிருக்கும் ஆஞ்சநேயர் பிறந்ததும் மார்கழி மாத அமாவாசை நாளில்தான்.
இந்த மாதம் மூன்று கிரகங்கள் இடப்பெயர்ச்சி அடைகின்றன. புதன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். மகர ராசியில் சனியோடு இருக்கும் சுக்கிரன் வக்கிரம் அடைகிறார். 15ஆம் தேதி தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி, திருவாதிரை பண்டிகை கொண்டாடுகிறோம். தனுசு, மகரம், கும்பம், மீன ராசிகளில் பிறந்தவர்களுக்கு மகத்துவம் நிறைந்த மார்கழி மாதத்தில் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

தனுசு
சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் அப்பா சம்பாதித்த சொத்து கிடைக்கும் உத்தியோக நிலை சிறப்படையும். செவ்வாய் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும் பிரயாணத்தினால் அலைச்சல் உண்டாகும். புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் புத்தி கூர்மை அதிகரிக்கும் கலைகளில் நிபுணத்துவம் பெறுவீர்கள். 15ஆம் தேதிக்குப் பின்னர் வாக்கு வன்மை அதிகரிக்கும். குரு மூன்றாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களுடன் நல்லுறவு நிலவும், அக்கம் பக்கத்தரின் உதவி கிடைக்கும். சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பொன் நகைகளை வாங்குவீர்கள், 15ஆம் தேதிக்குப் பின்னர் வீடு மாறும் நிலை உண்டாகும். முகத்தில் பொலிவு கூடும். சனி இரண்டாமிடத்தில் இருக்கிறார் தேவையற்றா வீண் பேச்சை தவிர்க்கவும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளின் பணம் கிடைக்கும். கேது உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் கோயில்களுக்காக அதிக செலவுகள் செய்வீர்கள். சிவ ஆலயங்களுக்கு மாலை நேரங்களில் சென்று தரிசனம் செய்ய நன்மைகள் அதிகம் நடைபெறும்.

மகரம்
சூரியன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வேலைக்காக வெளியூர் செல்வீர்கள் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும், வெளிநாடு செல்ல முயற்சிகள் செய்யலாம். செவ்வாய் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எண்ணியவை யாவும் எளிதில் நிறைவேறும் தொழில் லாபம் அதிகரிக்கும். புதன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அதிக செலவுகள் ஏற்படும் ஷேர்மார்க்கெட் முதலீடுகளை தவிர்ப்பது நல்லது 14 ஆம் தேதிக்குப் பின்னர் ஷேர் மார்க்கெட் தொழிலில் லாபம் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் வங்கி சேமிப்பு உயரும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும் 14ஆம் தேதிக்குப் பிறகு திடீர் செலவுகள் வரும். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் வாக்கு வன்மை அதிகரிக்கும், கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும், கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும். இந்த மாதம் பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி இலையால் அர்ச்சனை செய்ய அதிகம் நன்மைகள் நடைபெறும்.

கும்பம்
சூரியன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும் செயல்கள் சிறப்படையும். செவ்வாய் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் நிலபுலன் வகையில் நன்மை உண்டாகும். புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் தொழிலில் லாபம் உண்டாகும், 14ஆம் தேதிக்குப் பின்னர் வியாபாரத்திற்காக கடன் வாங்கும் நிலை உண்டாகும். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும், சமுதாயத்தில் மரியாதை உயரும். சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் பொன்னகைகளில் முதலீடுகள் அதிகரிக்கும், 15ஆம் தேதிக்குப் பின்னர் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழிலுக்காக செலவுகள் அதிகரிக்கும், வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். ராகு நான்காமிடத்தில் இருக்கிறார் வீடு நிலம் போன்ற அசையா சொத்துகளை வாங்கும் யோகம் உண்டாகும் கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். சனி பகவானை சனிக்கிழமைகளில் எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

மீனம்
சூரியன் பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்கள் சிறப்படையும் வேலைப்பளு அதிகரிக்கும். புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் ஒப்பந்தத் தொழில் சிறப்படையும், 14ம் தேதிக்குப் பின்னர் தரகு கமிஷன் வியாபாரம் லாபத்தைத் தரும். குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளுக்கு மருத்துவச் செலவுக்காக நகைகளை விற்கும் நிலை ஏற்படும். சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனைவியால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் 14ஆம் தேதிக்குப் பிறகு செலவுகள் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாட்கள் ஆசைகள் நிறைவேறும், தொழில் லாபம் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறப்புகளால் நன்மை உண்டாகும் கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வக் கோயிலுக்கு செல்வீர்கள். சிவ ஆலயத்தில் நடைபெறும் பிரதோஷ வழிபாட்டில் பங்கேற்று பாலபிஷேகத்திற்கு பால் வாங்கிக் கொடுக்கவும். நன்மைகள் நடைபெறும்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications