Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மார்கழி மாத ராசி பலன்.. பண மழையில் நனையும் 6 ராசிக்காரர்கள்.. மகத்துவம் யாருக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மார்கழி மாதத்தில் சூரியன் தனுசு ராசியில் பயணம் செய்வதால் தனுர் மாதம் என்று அழைக்கப்படுகிறது. குளிர்காலம் தொடங்கும் மார்கழியில் நவ கிரகங்களின் பயணத்தால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மார்கழி மாதத்தில் சூரியன் தனுர் ராசியில் சஞ்சரிக்கிறார். மார்கழி 29ஆம் தேதி மகர ராசிக்கு இடம் மாறுகிறார். செவ்வாய் விருச்சிக ராசியில் அமர்ந்திருக்கிறார். செவ்வாய் 12ஆம் தேதி தனுசு ராசிக்கு செல்கிறார். புதன் விருச்சிக ராசியில் அமர்ந்திருக்கிறார். 23 ஆம் தேதி தனுசு ராசிக்கு செல்கிறார். குரு மேஷ ராசியில் இருக்கிறார். சுக்கிரன் துலாம் ராசியில் நிற்கிறார். மார்கழி10 ஆம் தேதி சுக்கிரன் விருச்சிக ராசிக்கு மாறுகிறார். சனி கும்ப ராசியில் அமர்ந்திருக்கிறார். ராகு மீன ராசியில் இருக்கிறார். கேது கன்னி ராசியில் பயணம் செய்கிறார்.

Margazhi Month rasi palan 2023 Prediction for Mesham to Meenam

மேஷம்: வீரத்தை அணிகலனாகக் கொண்ட செவ்வாயை அதிபதியாக பெற்றுள்ள மேஷ ராசி அன்பர்களே...
விளையாட்டுப் பேச்சை மூட்டை கட்டி வைத்துவிட்டு வியாபாரத்தை கவனிங்க. வாடிக்கையாளரை வசப்படுத்தி விற்பனையை பெருக்கும் வழியை பாருங்க. குடும்பத்தில் இருந்த குழப்பம் மாத இறுதியில் சரியாகி சந்தோசத்தில் திளைப்பீங்க. தொழில்துறைக்கு தேவையான ஏற்பாடுகளை நண்பர்கள் மூலமாக செய்வீங்க. மார்கழி மாதமாக இருந்தாலும் மகளுக்கான திருமண முயற்சிகளை முன்னெடுத்து ஆரம்ப ஏற்பாடுகளை செய்வீங்க. தை மாதம் புதிய தொழில் தொடங்குவதற்கு திட்டம் போடுவீங்க. வாங்கிய இடத்தில் கட்டிய வீட்டை பூர்த்தி செய்து அடுத்த மாதம் கிரகப்பிரவேசம் செய்வீங்க. உறவினர்களிடமிருந்த சண்டை சச்சரவுகளை நீக்கி உற்சாகமாக இருப்பீங்க. இரும்பு சம்பந்தப்பட்ட தொழிலில் கணிசமான லாபம் பார்ப்பீங்க. திருச்செந்தூர் முருகனை வழிபடுங்க. விருப்பமான காரியங்கள் நிறைவேறுமுங்க.

ரிஷபம்: கலைநயம் மிளிரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபராசி அன்பர்களே....
எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்த காரியத்திலும் இறங்காதீங்க. நுரையீரல் சம்பந்தப்பட்ட கோளாறு வராமல் எச்சரிக்கையாக இருங்க. மனைவி ஏதாவது கோபத்தில் பேசினாலும் மனதில் வைத்துக் கொள்ளாதீங்க. கூடிய வரை விட்டுக் கொடுத்து நடந்து கொள்ள தவறாதீங்க. தொழிலில் உள்ள போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவீங்க. வியாபாரத்தில் நுணுக்கங்களை புகுத்தி அதிக லாபம் பார்ப்பீங்க. காதலிக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் தடுமாற்றம் அடைவீங்க. அரசாங்க வேலை பார்ப்பவர்கள் அலைச்சல் அதிகமாகி அவதிப்படுவீங்க. பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனையை தீர்த்துக் கொள்ள நீதிமன்ற உதவியை நாடுவீங்க. திருவண்ணாமலை சென்று வாங்க. பெருமையும் புகழும் அதிகரிக்குமுங்க.

மிதுனம்: எதிர்ப்புகளை புத்திசாலித்தனத்தால் முறியடிக்கும் புதனை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே...
பொருளாதாரத்தில் சில சிக்கல் சிரமங்களை சந்திப்பீங்க. வரவுக்கு மேல் செலவு வந்து கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுமுங்க. ரியல் எஸ்டேட் தொழிலில் அதிக லாபம் பெறுவீங்க. தவறுதலாக வேறு ஒருவர் பெயருக்கு மாறிய பட்டாவை மீட்டு நிலத்தை உரிமையாக்கி கொள்வீங்க. திடீரென்று குடும்பத்தோடு ஆன்மீக சுற்றுலா செல்வீங்க. கடுமையாக உழைத்து பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவீங்க. அடுத்த மாதம் வீட்டில் நடக்கும் மங்கள நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை நண்பர்கள் மூலமாக செய்வீங்க. தீபாவளி விற்பனையை செம்மையாக செய்த வியாபாரிகள் பொங்கலுக்கான ஜவுளி கொள்முதலில் இறங்குவீங்க. கரும்பு வியாபாரிகள் செங்கரும்பை நடவு செய்து பொங்கலுக்கு விற்க தயார் நிலையில் இருப்பீங்க. திருமோகூர் காளமேகப் பெருமாளை வழிபடுங்க. சூழும் துன்பங்கள் தூர ஓடுமுங்க.

கடகம்: வளர்ச்சிகளை சீராக அள்ளித் தருகின்ற சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே...
பிள்ளைகள் விஷயத்தில் சற்று கண்டிப்பாக இருக்க தவறாதீங்க. இல்லை என்றால் சில பிரச்சனைகளை சந்தித்து தலை குனிவை அடைவீங்க. குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்து குறுக்கு வழியில் இறங்காதீங்க. மனைவியோடு மல்லு கட்டிக் கொண்டு திரியாமல் மனம் விட்டு பேசி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வாங்க. அரசாங்கத்திலிருந்து கிடைக்க வேண்டிய காண்ட்ராக்ட் சம்பந்தப்பட்ட விஷயத்தில் தாமதம் ஏற்படுமுங்க. உடல் நலக்குறைவு ஏற்பட்ட தந்தையாரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வீங்க. எந்த விஷயத்தை தொட்டாலும் தாமதமாகிறதே என்று மனம் சங்கடப்படுவீங்க. குடும்பத்தில் தேவையில்லாத செலவு ஏற்பட்டு கடன் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவீங்க. தஞ்சை பிரகதீஸ்வரர் பெருமானை வழிபடுங்க. நெஞ்சத்து ஆசைகள் எல்லாம் நிறைவேறுமுங்க.

சிம்மம்: அரசரைப் போல் கோலோச்சும் ஆற்றல்மிக்க சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே...
வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான நிலையை சந்திப்பீங்க. புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என்ற திட்டத்தை ஒத்தி வைப்பீங்க. நெருங்கிய நண்பருக்கு இக்கட்டான நேரத்தில் பண உதவி செய்வீங்க. வெளியூர் பயணங்கள் மூலமாக தொழிலுக்கு தேவையான ஆர்டர்களை பெறுவதில் முனைப்பு காட்டுவீங்க. தேவையில்லாத செலவுகளை கட்டுப்படுத்த பாருங்க. பழைய கடன்களை அடைக்க கடுமையாக உழைப்பீங்க. பிள்ளைகளின் படிப்பு செலவுக்காக அரசாங்க உதவியை எதிர்பார்த்து இருப்பீங்க. தனியார் துறை ஊழியர்கள் கடுமையாக உழைத்து முதலாளிகளின் பாராட்டை பெறுவீங்க. மனதிற்குப் பிடித்த பெண்ணை மனம் முடிக்க நண்பர்கள் உதவியோடு தேவையான ஏற்பாடுகளை செய்வீங்க. காளகஸ்திநாதரை வழிபடுங்க. கஷ்டங்கள் பறந்தோடுமுங்க.

கன்னி: அறிவுத் திறனை அள்ளித்தரும் புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே...
சின்ன சின்ன எதிர்ப்புகள் தானே என்று எதையும் அலட்சியப்படுத்தாதீங்க. அதுவே தொழிலுக்கு சிக்கலை ஏற்படுத்தி விடுமுங்க. இருசக்கர வாகனத்தில் நீண்ட தூரம் செல்வதை தவிர்த்து விடுங்க. அரசாங்க ஊழியர்கள் கடுமையான சோதனைகளுக்கு ஆளாவீங்க. அக்கறையாக வேலை பார்க்கவில்லை என்றால் மேலதிகாரிகளிடம் திட்டு வாங்குவீங்க. போட்டி பந்தயங்களில் ஈடுபடாதீங்க. ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக எச்சரிக்கையோடு முதலீடு செய்யுங்க. நண்பர்களாக இருந்தாலும் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக நடந்து கொள்ள தவறாதீங்க. பெண்கள் ஆசைப்படும் பொருளை உடனே வாங்கி கொடுத்து விடுங்க. பிள்ளைகளின் தேவையை உடனுக்குடன் நிறைவேற்றி வைப்பீங்க. காரைக்குடி முத்துமாரியம்மனை வழிபடுங்க. நிறைவான செல்வம் பெறுவீங்க.

துலாம்: தர்ம அதர்மங்களுக்கு ஏற்ப பலன்தரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசி அன்பர்களே...
உங்கள் பக்கம் நியாயம் இருந்தாலும் உறவினர்களிடம் கோபத்தை காட்டி உறவுகளை சிதைத்து விடாதீங்க. தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைந்து பண வரவை அதிகரித்துக் கொள்வீங்க. வங்கிக் கணக்கில் உங்கள் சேமிப்பு உயர்ந்து மகிழ்ச்சியை ஏற்படுத்துமுங்க. கூடிய விரைவில் ஒரு நல்ல செய்தி கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்குங்க. வெளியூர் பயணங்கள் நல நல்ல பலனை கொண்டு வருமுங்க. வியாபாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை நோக்கி முன்னேறி செல்வீங்க .பொதுக் காரியங்களில் ஈடுபட்டு உறவினர்கள் மத்தியில் செல்வாக்கை உயர்த்திக் கொள்வீங்க.நீண்ட காலமாக விற்பனையாகமல் இருந்த இடத்தை விற்று நிம்மதி அடைவீங்க. சகோதர சகோதரிகளுக்கு தேவையான உதவிகளை செய்து உறவை மேம்படுத்திக் கொள்வீங்க. திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாளை வழிபடுங்க. சகல சௌபாக்கியங்களும் சித்திக்குமுங்க.

விருச்சிகம்: போர்க்குணம் கொண்ட பூமிகாரகன் செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே...
யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக் கொடுத்துப் போக மாட்டீங்க. பைனான்ஸ் தொழிலில் அதிக முதலீடு செய்வீங்க. அரசாங்க ஊழியர்கள் சம்பள உயர்வு இடமாற்றம் பெறுவீங்க. தனியார் ஊழியர்கள் முதலாளிகளின் பாராட்டை பெறுவீங்க. பிள்ளைகள் நல்ல முன்னேற்றமடைந்து படிப்பில் கவனம் செலுத்தி அதன் மூலமாக நீங்கள் சந்தோஷப்படுவீங்க. காரியத்திற்காக வருகின்ற உறவுகளை அடையாளம் கண்டு ஒதுக்கி வைப்பீங்க. தொழிற்சாலையில் உற்பத்தியை பெருக்குவதற்காக புதிய மாற்றங்களை கொண்டு வருவீங்க. தொழிலாளர்களுக்கு தேவையான ஊதியத்தை கொடுத்து உற்சாகப்படுத்துவீங்க. வண்டி வாகனங்களில் போகும் போது அதிக எச்சரிக்கையுடன் செல்ல வேண்டுமுங்க . பழனிமலை முருகனின் பாதம் பணியுங்க. கழனி செழித்து செல்வம் பெருகுமுங்க.

தனுசு: வினைப்பயனை அறுக்கின்ற வியாழ பகவானை அதிபதியாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே...
நில விற்பனையில் எதிர்பாராத லாபத்தை அடைவீங்க. கண் திருஷ்டி அதிகமாக இருப்பதால் அதற்கான பரிகார பூஜை செய்து கொள்வீங்க. முகம் தெரியாத எதிரிகள் மூலமாக இனம் தெரியாத எதிர்ப்புகளை சந்திப்பீங்க. சாமர்த்தியமான காய் நகர்த்தலால் அதையெல்லாம் தாண்டி வருவீங்க. வியாபாரத்தை விரிவுபடுத்தி அதிக லாபம் பெற்று பொருளாதார மேம்பாடு காண்பீங்க. அரசாங்கத்திலிருந்து உரிய உதவிகள் தாமதமின்றி கிடைக்குமுங்க. நண்பர்கள் மூலமாக சிக்கலான பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீங்க. வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுக்காக மருத்துவரை பார்ப்பீங்க. மனைவி மக்களின் சந்தோஷத்திற்காக உல்லாச பயணம் புறப்படுவீங்க. சுற்றத்தார்களின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீங்க. பட்டமங்கலம் சென்று தட்சிணாமூர்த்தியை வணங்கி வாங்க. தொட்டதெல்லாம் துலங்குமுங்க.

மகரம்: வியூகங்கள் மூலம் வெற்றிகளை காணும் மந்தனின் ஆதிக்கம் கொண்ட மகர ராசி அன்பர்களே....
எண்ணிய காரியமெல்லாம் தடையின்றி நடக்குமுன்னு நினைக்காதீங்க. சின்ன சின்ன இடையூறுகள் வந்து மனதை வேதனைப்படுத்துமுங்க. தொழில்துறைகளில் மந்தமான நிலையே காணப்படுதுங்க. வியாபாரம் சுமாராக நடந்து வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்குமுங்க. அடுத்த வீட்டு விஷயத்தில் அனாவசியமாக தலையிடாதீங்க. வெளியூர் பயணங்களின் போது பணத்தையும் ஆவணங்களையும் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்க. அரசாங்க ஊழியர்களுக்கு மேலதிகாரிகள் மூலமாக இடையூறு ஏற்படுமுங்க .எந்திரம் சம்பந்தப்பட்ட தனியார் துறை ஊழியர்கள் கவனமாக பணி செய்ய வேண்டுமுங்க.
திருநள்ளாறு தர்ப்ப ஆரண்ய ஈஸ்வரரை வழிபடுங்க. அவமிருத்த யோகம் விலகும்முங்க.

கும்பம்: சாணக்கியத்தனத்தால் சாதனை புரியும் சனிபகவானை அதிபதியாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே...
எந்த காரணம் கொண்டும் அடுத்தவர் பேச்சை கேட்டு நகைச் சீட்டு போடாதீங்க. ஆன்லைன் வர்த்தகங்களில் மிகுந்த கவனமாக ஈடுபட வேண்டுமுங்க. கணவனுக்கும் மனைவிக்கும் கண்டிப்பாக மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பு உண்டுங்க. கவனமாக கையாண்டு குடும்பத்தில் குழப்பம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்க. பிள்ளைகளின் நடவடிக்கைகளை அணுக்கமாக கண்காணிக்க தவறாதீங்க. தேவையில்லாத சிக்கலில் மாட்டிக் கொள்ள வாய்ப்பு உண்டுங்க.நெருங்கிய நண்பரே உங்களுக்கு எதிராக காரியம் செய்ய தயங்க மாட்டாருங்க. வியாபாரத்தில் வெற்றி கண்டு பணவரவை அதிகரிப்பீங்க. தொழில்துறைகள் சரளமாக நடக்குமுங்க.
ஒத்தக்கடை யோக நரசிம்மரை வழிபடுங்க. ஆயுள் விருத்தியாகுமுங்க.

மீனம்: பார்வையால் பலன்களை அள்ளித்தரும் குரு பகவானை அதிபதியாகக் கொண்ட மீனராசி அன்பர்களே...
வேலையாட்களின் ஒத்துழைப்பால் உற்பத்தியை பெருக்குவீங்க. நீண்ட காலம் இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாக முடியுமுங்க. வசதி இல்லாத மாணவரின் படிப்பு செலவை ஏற்றுக் கொள்வீங்க. கோயில் திருப்பணிகளுக்கு தாராளமாக உதவி செய்வீங்க. ரியல் எஸ்டேட் தொழிலில் வெற்றிக்கொடி நாட்டுவீங்க. கை கால்களில் அடிபட்டு ரத்தக்காயம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டுங்க. எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்க. மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவீங்க. அதனால் உறவுகளில் சிக்கல் ஏற்படுமுங்க. கடினமான வேலைகளை சுலபமாக முடித்து மன நிம்மதி அடைவீங்க. வியாபாரத்தில் கணிசமான லாபம் பார்ப்பீங்க. ரியல் எஸ்டேட் தொழில் பொருளாதாரத்தை உயர்த்துமுங்க. பைனான்ஸ் தொழில் பண வரவு அதிகரிக்குமுங்க. அரசாங்க ஊழியர்கள் எதிர்பார்த்த பலனை அடைவீங்க.
அழகர் கோவில் கள்ளழகர் பெருமானை வழிபடுங்க. தொழில் விருத்தி அடையும்முங்க.

உங்கள் ஜோதிடர் கவிஞர்
அ.பெர்னாட்ஷா, காரைக்குடி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+