Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தனுர் மாதமான மார்கழியில் 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மார்கழி மாதம் புண்ணியம் நிறைந்த மாதம் காரணம் மார்கழியில் 30 நாட்களும் பிரம்ம முகூர்த்தத்தில் தனுர் மாத பூஜை நடைபெறுகிறது. இந்த மார்கழி மாதம் தேவர்களின் அதிகாலை நேரம். ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயன புண்ணிய காலம். மார்கழி தட்சிணாயன புண்ணிய காலத்தின் கடைசி மாதம். தனுசு ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் தனுர் மாதம் என்றும் அழைக்கின்றனர். இந்த மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

சூரியன் குரு உடன் இணையும் காலம் 12 ஆண்டு காலம் கழித்து நடக்கிறது. கால புருஷ தத்துவப்படி ஒன்பதாம் வீடு. பாக்ய ஸ்தானமான தனுசு வீட்டில் சூரியன் குரு உடன் இணைந்திருப்பது அற்புதமான அம்சம். மகான்களின் அருளாசி கிடைக்கும். குரு அருளும் திரு அருளும் கிடைக்கும். எனவே இந்த மாதத்தில் அனைத்து ராசிக்காரர்களும் ஆலய தரிசனம் செய்வதால் அற்புதமான மாற்றங்களை ஏற்படுத்தும்.

கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் மார்கழி 1ஆம் தேதியன்று தனுசு ராசியில் சூரியன், குரு, சனி, கேது, விருச்சிகத்தில் புதன் மகரம் ராசியில் சுக்கிரன், மிதுனம் ராசியில் ராகு, செவ்வாய் துலாம் ராசியில் சஞ்சரிக்கின்றனர். மார்கழி 9 துலாம் ராசியில் இருந்து செவ்வாய் விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார். புதன் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார். மார்கழி 23 ஆம் தேதி சுக்கிரன் மகரம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கு மாறுகிறார். புதன் மார்கழி 28ஆம் தேதி மகரம் ராசிக்கு மாறுகிறார். மார்கழி 29ஆம் தேதி சூரியன் மகரம் ராசிக்கு மாறுகிறார்.

உற்சாகமான மாதம்

உற்சாகமான மாதம்

செவ்வாய் பகவானை அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு முயற்சி ஸ்தானமாக 3ல் ராகு, ராசி அதிபதி செவ்வாய் ஏழாம் வீட்டில் இருந்து எட்டில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். இந்த மாதத்தில் ஒன்பதாம் வீட்டில் ஐந்து கிரகங்கள் கூடியுள்ளன. சில நாட்கள் ஆறு கிரகங்கள் கூட்டணி சில மாற்றங்களை ஏற்படுத்தும். ராசிக்கு பத்தாம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிக்கிறார். இளைய சகோதர சகோதரிகளின் உதவி கிடைக்கும் நிறைய நல்ல விசயங்கள் நடக்கும். தொழிலில் வெற்றியும் லாபமும் தேவை. ரொம்ப சுறுசுறுப்பாக இருப்பீங்க. உங்களின் சக்தி அதிகரிக்கும். காரணம் குரு உடன் சூரியன் இணைந்து சஞ்சரிக்கிறார்.

சந்தோஷம் கூடும்

சந்தோஷம் கூடும்

பகையாக இருந்தவர்கள் நட்பாக இணைவார்கள். அரசியல்வாதிகளுக்கு வெற்றிகள் தேடி வரும். மக்கள் செல்வாக்கு அதிகம் கிடைக்கும். வெற்றி தேடி வரும். பெண்களுக்கு சந்தோஷம் கூடும். பொருட்கள் அதிகம் வாங்குவீர்கள். வேலையில் உள்ள சிக்கல்கள் தீரும் புரமோசன் கிடைக்கும். மாணவர்களுக்கு நன்மைகள் நிறைந்த மாதம் ரொம்ப தைரியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பீங்க. வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல மாதம் காரணம் பத்தில் சுக்கிரன் சஞ்சாரம் செய்கிறார். செவ்வாய் எட்டாம் வீட்டில் சஞ்சரிப்பதால் வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. அதிகாலையில் கோவிலுக்கு போயிட்டு வாங்க. சிக்கல்கள் தீரும், சந்தோஷம் அதிகரிக்கும்

அரசியல்வாதிகள் கவனம்

அரசியல்வாதிகள் கவனம்

மார்கழி மாதம் மாற்றங்கள் நிறைந்த மாதம். ஆறாம் வீட்டில் இருந்த செவ்வாய் ஏழாம் வீட்டிற்கு போகிறார். எட்டாம் வீட்டில் ஐந்து கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர். ராசி நாதன் சுக்கிரன் ஒன்பதாம் வீட்டில் இருக்கிறார் அற்புதம். பணப்பிரச்சினை தீரும் கடன் பிரச்சினை குறைய வாய்ப்பு உள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் வருமானம் கிடைக்கும். குடும்பத்தினர்களிடையே மதிப்பு மரியாதை கூடும். அரசியல்வாதிகள் கவனமாக இருங்க. யாரையும் நம்பி ஏமாந்து போயிறாதீங்க. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப்போறீங்களா? 5 கிரகங்கள் எட்டாம் வீட்டில் மறைகின்றன. பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதியும் மறைகிறார்.

வேகம் வேண்டாம்

வேகம் வேண்டாம்

சிறப்பான மாதம் மார்கழியில் 9ஆம் தேதி முதல் 12 வரை கவனமாக இருங்க. கணவன் மனைவி இடையே சஞ்சலம் அதிகமாகும். சண்டைகள் வரலாம் கவனமாக இருங்க. பொறுமை அவசியம். வேலைக்கு போறவங்களுக்கு புரமோசன் கிடைக்கும் அரசு வேலைக்கு தேர்வு எழுதுபவர்கள் குல தெய்வத்தை பிரார்த்தனை செய்யுங்க. உங்க குடும்ப ஸ்தானத்தை ஐந்து கிரகங்கள் பார்வையிடுவது சிறப்பு. மார்கழியில் வேகம் வேண்டாம் விவேகமாக இருங்க. வம்பு பேச்சுக்களின் தலையிடாதீங்க. மவுன விரதம் இருப்பது நல்லது. சூரிய கிரகண நாளில் மவுன விரதம் இருந்து இறைவனை வழிபடு நல்லது.

சந்தோஷமான மாதம்

சந்தோஷமான மாதம்

உங்க ராசியில் ராகு ஏழாம் வீட்டில் ஐந்து கிரகங்கள் சஞ்சாரம் செய்கின்றனர். எட்டாம் வீட்டில் சுக்கிரன் இருக்கிறார் வண்டி வாகனத்தில் கவனம் தேவை. ஞாபக மறதி வரலாம் கவனம் தேவை. ராகுவினால் குழப்பமாக இருந்தீங்க. குரு, சூரியன், புதன் பார்வை உங்க ராசியின் மீது விழுவது ரொம்ப சிறப்பு. சக்தி நிறைந்த மாதம். நீங்க எடுக்கிற முயற்சிகளில் வெற்றிகள் தானாக தேடி வரும். நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அரசு சலுகைகள் தேடி வரும்.

கவலைகள் தீரும்

கவலைகள் தீரும்

வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு வெற்றிகள் தேடி வரும். குடும்பத்தில் அமைதியாக பேசுங்க. அரசியல்வாதிகளுக்கு வெற்றிகள் தேடி வரும். இந்த மாதம் உங்களுக்கு வெற்றிகள் கை மேல் கிடைக்கும். பெண்களுக்கு நீண்ட காலமாக ஆசைப்பட்ட பொருட்கள் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு சம்பள உயர்வு புரமோசன் கிடைக்கும். எதிரிகள் தொல்லைகள் நீங்கும். அரசு வேலைகள் தேடி வரும்.
காதலில் விழுந்தவர்களுக்கு கல்யாணம் கூடி வரும். ராகுவை குரு பார்வையிடுவதால் ராஜயோகமான மாதம். மாணவர்களுக்கு பிரச்சினைகள் தீரும். படிப்பில் நினைவாற்றல் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் வரும். அதிக வெற்றியும் சந்தோஷமும் நிறைந்த மாதம்.

முன்னேற்றமான மாதம்

முன்னேற்றமான மாதம்

கடக ராசிக்காரர்களே மார்கழி மாதத்தில் உங்களுக்கு நிறைய நன்மைகள் நடக்கும். நீங்க இழந்ததை திரும்ப பெறுவீர்கள். உங்க ராசிக்கு ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் ஐந்து கிரகங்கள் இணைகின்றன. எதிலும் அசால்டா இருக்காதீங்க. உடல் ஆரோக்கியத்தில அக்கறை காட்டுங்க. ஏழாம் வீட்டில் சுக்கிரன் இருப்பதால் கணவன் மனைவி உறவு பலமடையும். தங்க நகைகளை அடமானத்தில் இருந்து மீட்பீர்கள். பாசிட்டிவ் எண்ணங்கள் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு வெற்றிகள் தேடி வரும். முன்னேற்றங்கள் வரும் சிக்கல்கள் தீரும்.

திருச்செந்தூர் முருகன்

திருச்செந்தூர் முருகன்

இந்த மாதத்தில் விஐபிக்கள் நட்பு கிடைக்கும் என்றாலும் கவனமாக பேசி பழகுங்க. சொந்தமாக வீடு, வண்டி வாகனம் வாங்கலாம். பெண்கள் சுய தொழில் தொடங்கலாம். பொறுமையாக இருங்க. உயரதிகாரிகளிடம் கவனமாக பேசுங்க இல்லாட்டி சிக்கல்தான். மாணவ மாணவிகள் கவனமாகவும் நிதானமாகவும் இருங்க. வியாபாரிகளுக்கு லாபமான மாதம் காரணம் உங்க தொழில் ஸ்தான அதிபதி செவ்வாய் ஆட்சி பெற்று அமர்கிறார். வார்த்தைகளில் நிதானம் தேவை. அரசியல்வாதிகள் வியூகம் வகுக்க வேண்டும் இல்லாவிட்டால் தோல்விதான் காரணம் குரு, சூரியன், புதன், சனி என கிரகங்கள் ஆறாம் வீட்டில் மறைகின்றன. குரு பகவானையும் முருகனையும் வணங்குங்க. திருச்செந்தூர் முருகன் வழிபாடு மனதிற்கு நிம்மதி கிடைக்கச் செய்யும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+