Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மார்கழி மாத ராசி பலன்கள் 2019 - தனுசு முதல் மீனம் வரை பலன்கள்

சூரியன் தனுசு ராசியில் சஞ்சரிப்பார். கால புருஷ தத்துவப்படி ஒன்பதாம் வீடு. மாற்றங்களை தரும் மார்கழி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் அற்புதங்கள் நிகழப்போகிறது. தனுசு முதல் மீனம் வரை உள்ள ராசிக்காரர்களுக்க

Subscribe to Oneindia Tamil

மதுரை: மார்கழி மாதம் புண்ணியம் நிறைந்த மாதம் காரணம் மார்கழியில் 30 நாட்களும் பிரம்ம முகூர்த்தத்தில் தனுர் மாத பூஜை நடைபெறுகிறது. இந்த மார்கழி மாதம் தேவர்களின் அதிகாலை நேரம். ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயன புண்ணிய காலம். மார்கழி தட்சிணாயன புண்ணிய காலத்தின் கடைசி மாதம். தனுசு ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் தனுர் மாதம் என்றும் அழைக்கின்றனர். இந்த மாதத்தில் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

தனுசு ராசியில் ஆட்சி பெற்றுள்ள குரு உடன் சூரியன் இணையும் காலம் 12 ஆண்டு காலம் கழித்து நடக்கிறது. கால புருஷ தத்துவப்படி ஒன்பதாம் வீடு. பாக்ய ஸ்தானமான தனுசு வீட்டில் சூரியன் குரு உடன் இணைந்திருப்பது அற்புதமான அம்சம். மகான்களின் அருளாசி கிடைக்கும். குரு அருளும் திரு அருளும் கிடைக்கும். எனவே இந்த மாதத்தில் அனைத்து ராசிக்காரர்களும் ஆலய தரிசனம் செய்வதால் அற்புதமான மாற்றங்களை ஏற்படுத்தும்.

கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் மார்கழி 1ஆம் தேதியன்று தனுசு ராசியில் சூரியன், குரு, சனி, கேது, விருச்சிகத்தில் புதன் மகரம் ராசியில் சுக்கிரன், மிதுனம் ராசியில் ராகு, செவ்வாய் துலாம் ராசியில் சஞ்சரிக்கின்றனர். மார்கழி 9 ஆம் தேதி துலாம் ராசியில் இருந்து செவ்வாய் விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார். புதன் கிரகம் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார். புதன் மீண்டும் மார்கழி 28ஆம் தேதி மகரம் ராசிக்கு மாறுகிறார். மார்கழி 23 ஆம் தேதி சுக்கிரன் மகரம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கு மாறுகிறார். மார்கழி 29ஆம் தேதி சூரியன் மகரம் ராசிக்கு மாறுகிறார். இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சி சஞ்சாரத்தினால் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு மார்கழி மாதம் மகத்தான மாதமாக அமையப்போகிறது காரணம் உங்க ராசிநாதன் குரு ஜென்ம ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். சூரியன், சந்திரன், புதன், குரு, சனி, கேது ஆகிய ஆறு கிரகங்களின் சேர்க்கை உங்க ராசியில் இந்த மாதம் நடைபெற உள்ளது. இனிமேல் எல்லாம் நல்லதாகவே நடக்கும். இதுவரை விலகி போனவர்கள் இனி நெருங்கி வருவார்கள். ஏழரை சனி ஜென்ம சனியில் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் மாதம். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிக்கிறார். சொத்துக்கள் வாங்கலாம். சுப காரியங்கள் நடப்பதற்கான நேரம் வந்து விட்டது. சூரியன் குரு உடன் இணைந்திருப்பதால் நன்மைகள் அதிகம் நடக்கும். வேலை செய்யும் இடத்தில் புரமோசன் கிடைக்கும். உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படும். திடீர் யோகம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ் தேடி வரும். அரசியல்வாதிகளுக்கு இது நல்ல மாதம் பதவிகள் தேடி வரும். என்னதான் பதவி, பணம், புகழ் தேடி வந்தாலும் உங்க ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க. சாப்பாட்டு விசயத்தில கவனமாக இருங்க. பெண்களுக்கு இது ரொம்ப நல்ல மாதம் வண்டி வாகன யோகம் தேடி வருது. வீட்டிற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்குவீர்கள். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும், திருமணமாகாதவர்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும். மாணவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும் பள்ளி கல்லூரிகளில் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். காம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைக்கும். வங்கியில் கடன்கள் கிடைக்கும். மார்கழி மாதம் மகத்தான மாதமாக தனுசு ராசிக்காரர்களுக்கு அமைகிறது.

மகரம்

மகரம்

மகரம் ராசிக்காரர்களே முன்னேற்றமான மாதம் மார்கழி மாதம். உங்க உடல் ஆரோக்கியத்தில கவனமாக இருங்க. வருமானம் அதிகம் வரும் சுப விரைய செலவுகள் ஏற்படும். சொல்வாக்கு செல்வாக்கு அதிகரிக்கும். ஏழரை சனியால் சங்கடங்கள் எதுவும் வராது கவலை வேண்டாம். வம்பு வழக்குகள் பிரச்சினைக்கு வரும். வண்டி வாகன யோகம் தேடி வருது. வெளிநாடு யோகம் தேடி வருது. அரசியல்வாதிகள் கவனமாக பேசுங்க இல்லாட்டி சிக்கல்தான். உங்க விரைய ஸ்தானத்தில் ஆறு கிரகங்கள் இணைகின்றன. இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி சந்தோஷம் கூடும். மன குழப்பங்கள் தீரும். பிரிந்த சொந்தங்கள் ஒன்றிணையும் நேரம் இது. பணம் வந்தாலே கையில் வைத்துக்கொள்ள வேண்டாம் கவனமாக இருங்க. வண்டி வாகனத்தில போகும் போது பொறுமை தேவை கவனமாக இருங்க. மாணவர்களுக்கு மறதி வரும் எதையும் நினைவு படுத்தி எடுத்துட்டு போங்க. புதிய தொழில் தொடங்க உங்களுக்கு சரியான நேரமில்லை உங்க குடும்பத்தினர் பெயரில் தொடங்குங்க லாபம் வரும் நல்லதே நடக்கும்.

கும்பம்

கும்பம்

கும்பம் ராசிக்காரர்களே உங்களுக்கு குபேர யோகம் தேடி வரப்போகிறது. ஐந்தாம் வீட்டில் உள்ள ராகுவிற்கு குருவின் பார்வை கிடைக்கிறது. உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் குரு ஆட்சி பெற்றிருக்க கூடவே சூரியன், புதன், கேது, சனி, சந்திரன் என கிரகங்கள் இந்த மாதம் இணைகின்றன. மார்கழியில் செவ்வாய் பத்தாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் தொழிலில் அபரிமிதமான லாபம் கிடைக்கும். உங்களுக்கு பணம் கொட்டப்போகுது. கடன்கள் எல்லாத்தையும் அடச்சிருவீங்க. பல வழிகளில் பணம் வந்து குவியப்போகிறது. உங்க உழைப்புதான் அசால்டா தூக்கி போடுவீங்க. நல்ல வேலை கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல மாதம். தொழிலில் இருப்பவர்களுக்கு கஷ்டங்கள் தீர்ந்து கவலைகள் தீரும். சொந்த வீடு வாங்கலாம். கணவன் மனைவி பிரச்சினை தீரும், உங்க மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வெற்றி மீது வெற்றி வந்து சேரப்போகிறது. யாருடைய உதவியும் இல்லாமல் ஜெயிக்கலாம். வெளிநாடு போகும் யோகம் வந்து விட்டது. அரசியல்வாதிகளுக்கு வெற்றிகள் தேடி வரும். பதவிகள் உங்களை நாடி வரும். குல தெய்வ வழிபாடு இந்த மாதம் கண்டிப்பாக பண்ணுங்க சொந்த பந்தங்கள் தேடி வரும். திருமணம் கை கூடி வரப்போகிறது. குழந்தை பாக்கியம் வரும். பெண்களுக்கு வேலை கிடைக்கும். அரசு வேலைக்கு தேர்வு எழுதுங்க செவ்வாய்கிழமை விரதம் இருந்து பழனி முருகனை வணங்குங்கள் நல்லதே நடக்கும்.

மீனம்

மீனம்

குருவை ராசி நாதனாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே, மார்கழி மாதத்தில் உங்க ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் ஆறு கிரகங்கள் இணையப்போகின்றன. பணக்கஷ்டம் தீரும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கப் போகிறது. பத்தில் சூரியன் இருக்கிறார். குருவோடு இருக்கிறார் கூடவே சனியும் இருப்பதால் உங்களுக்கு வெற்றி தேடி வரப்போகிறது. ராஜயோகம் வரப்போகிறது. உங்க கனவுகள் நனவாகப்போகிறது. தொழிலில் லாபம் வரும். லாப ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்ந்து உங்க ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்க்கிறார் ரொம்ப நல்லது. நிரந்தர வருமானம், நிரந்தர வேலை கிடைக்கும். கஷ்டப்பட்ட உங்களுக்கு கவலைகள் தீரப்போகிறது. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு சிறந்த மாதம். மாணவர்களுக்கு நல்ல மாதம் படிப்பில் கெட்டிக்காரர்களாக விளங்குவீர்கள். கணவன் மனைவி பிரச்சினை தீரும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சகோதரர்களினால் ஒத்துழைப்பு கிடைக்கும். பெண்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். மங்களகரமான விசயங்கள் நடைபெறும் மாதமாக மார்கழி மாதம் அமைந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+