Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மார்கழி மாத ராசி பலன்கள் 2019 - சிம்மம் முதல் விருச்சிகம் வரை பலன்கள்

சூரியன் தனுசு ராசியில் சஞ்சரிப்பார். கால புருஷ தத்துவப்படி ஒன்பதாம் வீடு. மாற்றங்களை தரும் மார்கழி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் அற்புதங்கள் நிகழப்போகிறது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும

Subscribe to Oneindia Tamil

மதுரை: மார்கழி மாதம் புண்ணியம் நிறைந்த மாதம் காரணம் மார்கழியில் 30 நாட்களும் பிரம்ம முகூர்த்தத்தில் தனுர் மாத பூஜை நடைபெறுகிறது. இந்த மார்கழி மாதம் தேவர்களின் அதிகாலை நேரம். ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயன புண்ணிய காலம். மார்கழி தட்சிணாயன புண்ணிய காலத்தின் கடைசி மாதம். தனுசு ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் தனுர் மாதம் என்றும் அழைக்கின்றனர். இந்த மாதத்தில் சிம்மம் முதல் விருச்சிகம் வரை உள்ள ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

சூரியன் குரு உடன் இணையும் காலம் 12 ஆண்டு காலம் கழித்து நடக்கிறது. கால புருஷ தத்துவப்படி ஒன்பதாம் வீடு. பாக்ய ஸ்தானமான தனுசு வீட்டில் சூரியன் குரு உடன் இணைந்திருப்பது அற்புதமான அம்சம். மகான்களின் அருளாசி கிடைக்கும். குரு அருளும் திரு அருளும் கிடைக்கும். எனவே இந்த மாதத்தில் அனைத்து ராசிக்காரர்களும் ஆலய தரிசனம் செய்வதால் அற்புதமான மாற்றங்களை ஏற்படுத்தும்.

கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் மார்கழி 1ஆம் தேதியன்று தனுசு ராசியில் சூரியன், குரு, சனி, கேது, விருச்சிகத்தில் புதன் மகரம் ராசியில் சுக்கிரன், மிதுனம் ராசியில் ராகு, செவ்வாய் துலாம் ராசியில் சஞ்சரிக்கின்றனர். மார்கழி 9 ஆம் தேதி துலாம் ராசியில் இருந்து செவ்வாய் விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார். புதன் கிரகம் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார். புதன் மீண்டும் மார்கழி 28ஆம் தேதி மகரம் ராசிக்கு மாறுகிறார். மார்கழி 23 ஆம் தேதி சுக்கிரன் மகரம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கு மாறுகிறார். மார்கழி 29ஆம் தேதி சூரியன் மகரம் ராசிக்கு மாறுகிறார். இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சி சஞ்சாரத்தினால் சிம்மம், கன்னி, துலாம் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

சிம்மம்

சிம்மம்

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே உங்க ராசிக்கு ஐந்தாம் வீட்டில் ஐந்து கிரகங்கள் கூடியுள்ளன. ராசி நாதன் சூரியன் பூர்வ புண்ணியத்தில் குரு உடன் இணைவது கோடி புண்ணியம். குழப்பங்கள் நீங்கும் நன்மைகள் நடைபெறும். செவ்வாய் வண்டி வாகன யோகத்தை தருவார். சொத்து வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அதற்கான உறுதி செய்வீர்கள். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் கவனம் தேவை. மகிழ்ச்சியும் சந்தோஷமும் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலமாக இருக்கும். பிரச்சினைகள் நீங்கும். பொறுமையாக இருங்க நல்லது நடக்கும். குருவின் பரிபூரண அருள் கிடைத்திருக்கிறது. காரணம் குருபகவான் உங்க ராசியை பார்க்கிறார். வேலைப்பளு அதிகமாக இருக்கிறது என்று ரொம்ப டென்சன் ஆகாதீங்க. உங்களை நிரூபிக்க இது நல்ல மாதம். பணத்தட்டுப்பாடு நீங்கும். குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். வண்டி வாகனங்கள் வாங்குவீர்கள். சுப காரியங்கள் அதிகம் நடக்கும். பிரிந்த உறவினர்கள் நண்பர்கள் ஒன்று சேருவார்கள். வயிறு கோளாறுகள் வரும் உணவு விசயத்தில் காரணமான உணவுகளை சாப்பிட வேண்டாம். பயணங்களில் கவனமாக இருங்க. பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் தீரும். விட்டுக்கொடுத்து போங்க நன்மைகள் நடக்கும். சொத்துக்கள் வாங்கும் போது கவனமாக இருங்க. வெளியூர் பயணங்களின் போது கவனமாக இருங்க. பதவி உயர்வுகள் தேடி வரும். கலைத்துறையினருக்கு சிறப்பான மாதமாக அமையும். தெய்வ தரிசனங்கள் சிறப்பாக அமையும். மகான்களை வழிபடுங்கள் ஜீவ சமாதிக்கு சென்று வாருங்கள். பெருமாள் கோவிலுக்கு போய் பசு நெய் வாங்கி கொடுத்து வாங்க நல்லது நடக்கும்.

கன்னி

கன்னி

புதனை ராசி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, உங்க ராசிக்கு நான்காம் வீட்டில் கிரகங்களின் கூட்டணி உள்ளது. ராசி நாதன் புதன் சுக ஸ்தானத்திற்கு மாறுவது சிறப்பு. உங்க ராசிக்கு தொழில் ஸ்தானத்தை பார்க்கிறார். வெற்றிகள் தேடி வரும். செவ்வாய் இரண்டாம் வீட்டில் இருந்து மூன்றாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் சகோதரர்களின் உதவி கிடைக்கும். கவலைகள் நீங்கும் மாதம். உங்க ராசிநாதன் புதன் நான்காம் வீட்டில் சனி, கேது, குரு, சூரியனுடன் இணைவது அற்புதமான அமைப்பு. சுறுசுறுப்பாக இருங்க நினைத்தது நடக்கும். பணவரவு அதிகமாக இருக்கும். மார்கழி மாதத்தில் கன்னி ராசிக்காரர்கள் ஒருவித பயத்துடனேயே இருப்பீர்கள். சொந்தக்காரர்களிடையே பிரச்சினை வருகிறதே என்று வருத்தப்பட வேண்டாம். வேலையில் இருந்த சிக்கல்கள் தீரும். சர்க்கரை நோயாளிகள் தவறாமல் மருந்து மாத்திரை சாப்பிடுங்கள். புனித யாத்திரை செல்வீர்கள். வெளியூர் பயணம் சந்தோஷத்தை தரும். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். இந்த கால கட்டத்தில் பெற்றோர்களுடன் சண்டை எதுவும் போட வேண்டாம். மனதில் இருந்த பாரங்கள் குறைந்து தன்னம்பிக்கை அதிகமாகும். தொழிலில் புதிய முதலீடுகள் எதையும் செய்ய வேண்டாம் கவனமாக இருங்க. வியாழக்கிழமைகளில் முருகன் கோவிலுக்கு போயிட்டு வாங்க. விளக்கு போட பசு நெய் கொடுங்க. மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். கன்னி ராசிக்காரர்களுக்கு மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதாக மார்கழி மாதம் அமைகிறது.

துலாம்

துலாம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டில் ஐந்து கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. எல்லா கிரகங்களும் உங்க பாக்ய ஸ்தானத்தை பார்க்கின்றன. எல்லாம் நல்லதாகவே நடக்கும். உங்க முதலீடுகளுக்கு மூன்று மடங்கு லாபம் கிடைக்கும். உங்க ராசி நாதன் சுக்கிரன் நான்காம் வீட்டில் அமர்ந்து பத்தாம் வீட்டினை பார்க்கிறார். தொழிலில் லாபம் கிடைக்கும் நல்ல வேலை கிடைக்கும். வருமானம் அதிகமாக வரும். துலாம் ராசிக்காரர்கள் வார்த்தைகளில் கவனம் தேவை. காரணம் ராசியில் உள்ள செவ்வாய் இரண்டாம் வீட்டில் ஆட்சி பெற்று அமரும் போது கோபமான பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். சளி தொந்தரவுகள் வரலாம் கவனமாக இருங்க. அரசு வேலைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் வரலாம். விவசாய நிலங்கள் வாங்குவீர்கள். சிலர் வீடு கட்ட நிலம் வாங்குவீர்கள். வீடு கட்ட எடுக்கும் முயற்சிகள் லாபத்தை தரலாம். தடைபட்டிருந்த பதவி உயர்வுகள் தேடி வரும். வேலையில் மாற்றங்கள் ஏற்படும். சோம்பேறித்தனத்தை விட்டுத்தள்ளுங்க. கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக உள்ளது. உங்களுக்கு யோகம் தேடி வருகிறது. காளியை வழிபடுங்க. வெள்ளிக்கிழமையில் ராகு காலத்தில் துர்க்கையை விளக்கேற்றி வணங்கலாம் நன்மைகள் நடக்கும். வெளிநாடு செல்வதற்கு யோகம் வரலாம். மார்கழி மாதம் மனதிற்கு மகிழ்ச்சியான மாதமாக அமையப்போகிறது.

விருச்சிகம்

விருச்சிகம்

செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, என்னடா வாழ்க்கை ஒரே பிரச்சினையாக இருக்கே என்று கவலையோடவே இருக்கீங்களா, கவலை தீரப்போகிறது. இந்த மாதம் உங்களுக்கு ரொம்ப சிறந்த மாதம். குரு உடன் சூரியன் இணைந்து தன ஸ்தானத்தில் இருப்பது சிறப்பு. உங்க ராசி அதிபதி செவ்வாய் உங்க ராசிக்கு வந்து வாக்கு ஸ்தானத்தில் அமர்வதால் இனி நினைத்தது நடக்கும். ஐந்து கிரகங்கள் வாக்கு ஸ்தானத்தில் கூட்டணி இருப்பதால் நாக்கில் கவனமாக இருங்க. மன அமைதி ரொம்ப முக்கியம். யாரிடமும் கோபமாக பேசாதீங்க. அமைதியான பேச்சு அற்புதமான உறவுகளை தேடி தரும் இல்லாவிட்டால் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி விடும். நரம்பு பிரச்சினைகள் எட்டி பார்க்கும். பதற்றத்தை தணிங்க, பொறுமையாக இருங்க நல்லது தானாக நடக்கும். தொழிலில் மேலதிகாரிகளின் உதவி கிடைக்கும். குருவின் உதவியால் பணவரவு எட்டிப்பார்க்கும். சொந்த பந்தங்கள் ஒன்றாக இணையும் மாதம் இது. குடும்ப விசயத்தில் அடுத்தவர்களை தலையிட விட வேண்டாம் எந்த பிரச்சினை என்றாலும் நீங்களே சமாளிங்க. நீங்களும் அடுத்தவர் குடும்ப விவகாரத்தில் தலையிடாதீங்க. ஆபத்தில் இருந்து தப்பிக்க ரத்த தானம் பண்ணுங்க. அரசியல்வாதிகளுக்கு பதவிகள் தேடி வரும் வெற்றிகள் கிடைக்கும். பெற்றோர்கள் உடலில் அக்கறை காட்டுங்க. ரத்த சொந்தங்களுடன் வாக்குவாதம் வரலாம் தவிர்த்து விடுங்க. வெளிநாடு பிரச்சினை தீரும். எல்லாம் நல்லதாக நடக்க லட்சுமி நரசிம்மரை வழிபடுங்க நல்லதே நடக்கும். அதிகாலையில் காளி கோவிலுக்கு போயிட்டு வாங்க நல்லதே நடக்கும். தினசரி சூரிய நமஸ்காரம் பண்ணுங்க நல்லதே நடக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+